சென்னை: சென்னையில் அரசு பஸ்சில் முதல்வர் ஸ்டாலின் ஏறி பயணித்த பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மாதம்தோறும் எவ்வளவு மிச்சம் வருகிறது என பெண்கள் முதல்வர் ஸ்டாலினிடம் கூறினர்.

திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதனையொட்டி முதல்வர் ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள அவரது தாயார் தயாளு அம்மாள் வீட்டிற்கு சென்று ஆசி பெற்றார். தொடர்ந்து அவர் காரில் சட்டசபை நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.
காரை நிறுத்த சொன்ன முதல்வர் ஸ்டாலின் , ராதாகிருஷ்ணன் சாலையில் அரசு பஸ்சை ( 29 சி) நிறுத்தி ஏறினார். இதில் பயணித்த பெண்களிடம் பேசினார் ஸ்டாலின் . முதல்வரை பார்த்த பெண்கள் ஆச்சரியமுற்றனர்.
இந்த தகவலை முதல்வர் ஸ்டாலினே சட்டசபையில் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: நமது திட்டங்களின் பயன்கள் சென்று சேராதவரே இல்லை என்ற நிலை உள்ளது. மகளிர் இலவச பயண திட்டம் மூலம் பெண்கள் சமூகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சட்டசபைக்கு வரும் போது அரசு பஸ்சில், நம்ம ஆடசி எப்படி இருக்கிறது என பெண்களிடம் கேட்டறிந்தேன். நன்றாக உள்ளது என கூறினர். அரசு பஸ்சில் பயணம் மூலம் மாதம் ரூ.800 மிச்சமாகியுள்ளது. ரூ.9000 சம்பளம் வாங்கும் பெண் ரூ.900 மிச்சமாகியதாக தெரிவித்தனர். இது தான் அரசின் சாதனை.

பெண்களின் இலவச பயண திட்டம் குறித்து கருத்து கேட்பு கேட்கப்பட்டதில் ஒவ்வொரு பெண்ணுக்கு சரசாரியாக ரூ.600 முதல் ரூ. 1200 வரை மிச்சமாகிறது. சம்பளத்தில் 11 சதவீதம் மிச்சமாகும். பணத்தை சேமித்து வைப்பதாக கூறுகின்றனர். அன்றாடம் சம்பாதிக்கும் பெண்கள் சேமிப்பபவர்களாக மாறியுள்ளனர். பெண்களின் சுமையை மாற்றும் திட்டமாக கோடிகணக்கான பெண்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார். தொடர்ந்து அரசின் ஓராண்டு சாதனையை எடுத்துரைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE