வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருப்பவர் சக்திகாந்த தாஸ். 1980, 'பேட்ச்' ஐ.ஏ.எஸ்., அதிகாரியான இவர் தமிழ்நாடு 'கேடரை' சேர்ந்தவர். மத்திய அரசின் முக்கிய துறைகளில் பணியாற்றியுள்ளார்.மறைந்த அருண் ஜெட்லி நிதி அமைச்சராக இருந்த போது, இவர் தான் நிதித்துறை செயலராக இருந்தார். இவர் தன் அனுபவங்களை ஒரு புத்தகமாக எழுதி வருகிறார்.
![]()
|
ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த புத்தகம் வெளிவர உள்ளதாக அவருடைய நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.சக்திகாந்த தாசுக்கு மிகவும் பிரச்னையை கொடுத்த ஆண்டு 2016. அந்த ஆண்டு நவம்பர் 8ல் தான் 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அப்போது நடந்த பல விஷயங்களை பற்றி தாஸ் தன் புத்தகத்தில் எழுதியுள்ளாராம்.
![]()
|
இந்த பணமதிப்பு இழப்பு விஷயத்தை பிரதமர் இவரிடம் மட்டுமே தெரிவித்து, அதற்கான ஏற்பாடுகளை செய்யச் சொல்லியிருந்தாராம். அந்த சமயத்தில் நிதி அமைச்சராக இருந்த ஜெட்லிக்கு கூட இந்த விஷயத்தை பிரதமர் சொல்லவில்லையாம். அவ்வளவு ரகசியமாக வைத்திருந்தனர் பிரதமரும் தாசும்.பணமதிப்பு இழப்பு விஷயத்தில் என்னென்ன நடவடிக்கைகள் முன் கூட்டியே எடுக்கப்பட்டன; இந்த ரகசியம் எப்படி வெளியே கசியாமல் இருந்தது என்பது போன்ற பல விஷயங்கள் இந்த புத்தகத்தில் இருக்குமாம்.இதைத் தவிர, காங்கிரஸ் ஆட்சியில் பணியாற்றிய நிதி அமைச்சர் பற்றியும் பல முக்கிய விபரங்களை தன் புத்தகத்தில் எழுதி வருகிறாராம் தாஸ்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement