வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழகம் மீது பா.ஜ., தலைமை கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இந்தப் பின்னணியில் தான் சென்னையில் தமிழக பா.ஜ.,விற்கு புதிய அலுவலகம் கட்டும் முயற்சி நடக்கிறது.
![]()
|
தற்போதுள்ள கமலாலயம் மிகச்சிறிய அலுவலகம். தவிர சரியான பாதுகாப்பும் இல்லை. எனவே புதிய அலுவலகம் தேவை என, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முடிவெடுத்துள்ளாராம்.புதிய அலுவலகம் கட்ட சுமார் 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையில், பிரதான பகுதியில் ஒரு பெரிய பங்களாவை விலைக்கு வாங்கி அதை இடித்துவிட்டு, நான்கு மாடி கட்டடம் கட்டப் போகிறார்களாம்.
![]()
|
டில்லி பா.ஜ., அலுவலகத்தில் இருப்பது போல, தமிழக அலுவலகத்திலும் உள்ளேயே கூட்டம் நடத்தும் வசதி, அனைத்து பிரமுகர்களுக்கும் அறைகள், வெளியூரிலிருந்து வரும் பா.ஜ., தலைவர்கள் தங்கும் அறைகள் என, மிக பிரமாண்டமாக இருக்கும் என்கின்றனர் டில்லி பா.ஜ., தலைவர்கள்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement