மே 08: பெட்ரோல், டீசல் விலையில் 32வது நாளாக மாற்றம் இல்லை| Dinamalar

மே 08: பெட்ரோல், டீசல் விலையில் 32வது நாளாக மாற்றம் இல்லை

Updated : மே 08, 2022 | Added : மே 08, 2022 | |
சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 32வது நாளாக மாற்றம் இல்லாமல் இன்று (மே 08) ஒரு லிட்டர் பெட்ரோல், 110.85, டீசல் ரூ.100.94க்கு விற்பனையாகிறது.பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. தமிழகத்தில், 2021 நவ.,3ல் ஒரு லிட்டர் பெட்ரோல் 106.66 ரூபாய், டீசல் 102.59 ரூபாய்க்கு விற்பனையாகின. இதுவே,


சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 32வது நாளாக மாற்றம் இல்லாமல் இன்று (மே 08) ஒரு லிட்டர் பெட்ரோல், 110.85, டீசல் ரூ.100.94க்கு விற்பனையாகிறது.



latest tamil news


பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. தமிழகத்தில், 2021 நவ.,3ல் ஒரு லிட்டர் பெட்ரோல் 106.66 ரூபாய், டீசல் 102.59 ரூபாய்க்கு விற்பனையாகின. இதுவே, பெட்ரோல், டீசல் விற்பனையில் உச்ச விலையாக இருந்தது.

அன்றைய தினம் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இதனால், நவ., 4ல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் 10 ரூபாயும் குறைக்கப்பட்டது. அன்று தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்; டீசல், 91.43 ரூபாய்க்கும் விற்பனையாகின.வெள்ளி

பின், உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தலால் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. அம்மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்த நிலையில், ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையில் நிலவும் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதனால், நாட்டில் 137 நாட்களுக்கு பின், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. தொடர்ந்து அவற்றின் விலை உயர்ந்து வந்தது.


latest tamil news



சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய் மற்றும் ஒரு லிட்டர்; டீசல் 100.94 ரூபாய்க்கும் விற்பனையாகின. இந்நிலையில் 32 நாட்களாக இன்றும் (மே 08) பெட்ரோல் 110.85 ரூபாய், டீசல் 100.94 ரூபாய் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் நீடித்து வருகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X