அகிலத்தின் அதிசயம் சொல் அம்மா: இன்று (மே 8 ) அன்னையர் தினம்| Dinamalar

அகிலத்தின் அதிசயம் சொல் அம்மா: இன்று (மே 8 ) அன்னையர் தினம்

Updated : மே 08, 2022 | Added : மே 08, 2022 | கருத்துகள் (5) | |
தாய் மட்டுமல்ல தோழியும் கூடடி.எஸ்.ராஷ்மி, சின்னாளபட்டி: ஒவ்வொரு ஜீவராசியின் படைப்பிலும் பெற்றோர் முக்கியத்துவம் பெறுகின்றனர். இதில் தாய்க்கு அதிக பங்கு உண்டு. எனது தாய் தனியார் பள்ளி நூலகராக வேலை பார்த்து வருகிறார். வீடு ,வேலை என நேர பணிச்சுமை அதிகமாக இருந்த போதும், என் மீதும் எனது சகோதரர் மீதான கவனிப்பில் எவ்வித குறையும் வைக்கவில்லை. எங்களின் முன்னேற்றம்
அகிலம், அதிசயம், சொல், அம்மா, மே 8தாய் மட்டுமல்ல தோழியும் கூடடி.எஸ்.ராஷ்மி, சின்னாளபட்டி: ஒவ்வொரு ஜீவராசியின் படைப்பிலும் பெற்றோர் முக்கியத்துவம் பெறுகின்றனர். இதில் தாய்க்கு அதிக பங்கு உண்டு. எனது தாய் தனியார் பள்ளி நூலகராக வேலை பார்த்து வருகிறார். வீடு ,வேலை என நேர பணிச்சுமை அதிகமாக இருந்த போதும், என் மீதும் எனது சகோதரர் மீதான கவனிப்பில் எவ்வித குறையும் வைக்கவில்லை. எங்களின் முன்னேற்றம் குறித்த சிந்தனையிலே அவரது ஒவ்வொரு வினாடியும் கடந்து செல்வதை உணர்கிறேன். எனது ஒவ்வொரு செயலிலும் நன்மையை பாராட்டுவதிலும், தவறுகளை கண்டித்து ஒழுங்குபடுத்தி வழி நடத்துவதிலும் என் அம்மாவிற்கு இணையாக எவருமில்லை. எனக்கு தாய் மட்டுமின்றி மிக நெருக்கமான தோழி என்றே கூறுவேன். அன்னையர் தின ஸ்பெஷலாக வீட்டு வேலைகளில் அவருக்கு ஓய்வு கொடுத்து முழு பணிகளையும் நானே கவனித்து அசத்த திட்டமிட்டு உள்ளேன்.


தாய் கற்று தந்தவை ஏராளம்கே.ராம்பிரியா, கே.உமாபிரியதர்ஷினி, வடமதுரை: எங்களது தாய் தைரியமானவர். எந்த சூழ்நிலையையும் சமாளித்து வாழும் வழிமுறையை சிறு வயதில் இருந்தே எங்களுக்கு கற்று தந்தார். இதனாலேயே திருமணமாகி இன்னொரு வீட்டில் நல்ல மருமகளாக உள்ளோம். எங்களது தாயாரும் தந்தைக்கு உதவியாக கடை நிர்வாகத்தை கவனித்து வருகிறார். ஒரு இடத்தின் சூழ்நிலைக்குகேற்ப நடந்துகொள்வது எப்படி, எதிரிகளிடம் இருந்து விலகி செல்வது, எதிர்ப்புகளை எவ்வாறு சமாளிப்பது, ஒரு பெண்ணாக வீட்டு வேலைகளையும், நிறுவனத்தையும் எப்படி நடத்துவது போன்ற விஷயங்களை தாயாரிடம் இருந்து கற்றுள்ளோம். தாயார் எங்களை வளர்த்தபோது எங்களுக்கு வழங்க முடியாத பல விஷயங்களை ,தற்போது எங்களின் குழந்தைகளுக்கு வழங்குவது குறித்த ஆலோசனைகளையும் வழங்குவார். எங்களது தாயாருக்கு நிகர் அவர் மட்டுமே.


கேட்காமல் கிடைத்த வரம்மு.கா.கோமல் பூஜா, திண்டுக்கல்: எனக்கு உலகின் உன்னதமான உறவு அம்மாதான். நான் ஆறுதல் தேடும் இடம் அம்மாவின் மடிதான். அன்னையை போற்றாத எவரும் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. கோயிலுக்கு சென்று கடவுளை வணங்குவதை விட நாம் இந்த உலகுக்கு வர காரணமாய் இருந்த அன்னையை இந் நாளில் மனதார போற்றி வணங்குவோம். அன்னையிடம் மட்டும் தான் பேதமில்லாத அன்பை காண முடியும். ஏழைக்கும், பணக்காரனுக்கும் கடவுள் சமமாக கொடுத்த வரம் அன்னை.நம்மை வளர்த்த தாயை முதுமையில் ஆதரிக்க வேண்டியது நமது கடமை.பிறந்தநாள் ,அடிக்கடி சிறிய பரிசுகளை அம்மாவிற்கு கொடுத்து மகிழ்வேன். அந்த மகிழ்ச்சி அளவில்லாதது. அம்மாவின் நீண்ட நாள் ஆசை காஷ்மீர் செல்ல வேண்டும் என்பது தான். ஒரு நாள் அவரது ஆசையை நிறைவேற்றுவேன்.


latest tamil news
அன்னையே முதல் ஆசிரியர்பி.கே. கவுசியா, ஒட்டன்சத்திரம்: தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்ற முதுமொழிக்கு ஏற்ப அன்னையே எங்களின் சிறந்த தெய்வம். இந்த உலகை எங்களுக்கு முதலில் காட்டியவர் அவரே. அனைத்து உயிர்களுக்கும் பேசும் திறன் இருந்திருந்தால் தாயில்லாமல் நானில்லை என்பதை தாரக மந்திரமாக முழங்கும் என்பதில் ஐயமில்லை.எங்களின் அன்னையே நாங்கள் கண்ட முதல் ஆசிரியர். தினமும் எங்களை கவனித்து பள்ளிக்கு அழைத்து சென்று வீட்டு பணிகளையும் கவனித்து எங்களோடு வாழும் தெய்வம் எங்கள் அன்னையே. ஒவ்வொரு குழந்தையின் ரோல் மாடல் அன்னையே. எங்களுக்கு குடும்ப சூழல், பள்ளி, சமூகக் கடமைகள் , சுற்றத்தார் ,பெரியோர்களை பேணும் முறைகள் குறித்து கற்றுக்கொடுக்கும் ஆசிரியர். குழந்தைப் பருவத்தில் என்னை எப்படி கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டாரோ அதே போல் அவர்களுடைய வயதான காலத்தில் அவர்களைப் பேணிக் காப்பது எனது தலையாய கடமைகளில் முதன்மையானதாகும்.


அனைத்து முயற்சிகளுக்கும் ஏணி படியாய்...அருள் பிரகாஷ், பிசியோதெரபிஸ்ட், பண்ணைக்காடு: அன்னையர் தினம் கொண்டாடுவதில் தான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். என் வாழ்வில் அனைத்து முயற்சிகளுக்கும் ஏணி படியாய் அமைந்தது என் அம்மா தான். தான் பயின்ற பள்ளி படிப்பு முதல் திருமணம், பணி என அனைத்தையும் முடிவு செய்தார். இதுவரை என் அம்மாவிடம் யோசனை கேட்ட பின்னரே அதை துவங்குவதாக உள்ளேன். தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்பதுபோல் என் எதிர்கால வாழ்வை சிறப்பாக அமைய அம்மா தான் காரணம். இத்தினத்தில் அவரை போற்றுவதில் தான் மகிழ்ச்சி அடைகிறேன்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X