யானை தாக்கி தொழிலாளி பலி

Added : மே 08, 2022 | |
Advertisement
குன்னூர் : குன்னூர் அருகே யானை தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.நீலகிரி மாவட்டம் குன்னூர் பவானி எஸ்டேட் பகுதியை சேர்ந்த தொழிலாளி முருகன், 43. நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்த நிலையில் பல இடங்களிலும் மின்தடை ஏற்பட்டு இருள் சூழ்ந்திருந்தது. பணியை முடித்து திரும்பிய இவரை தேயிலை எஸ்டேட் லாரியில் வீட்டின் அருகே விட்டு சென்றனர்.வீட்டிற்கு தேயிலை எஸ்டேட் வழியாக சென்ற இவரை

குன்னூர் : குன்னூர் அருகே யானை தாக்கி தொழிலாளி உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பவானி எஸ்டேட் பகுதியை சேர்ந்த தொழிலாளி முருகன், 43. நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்த நிலையில் பல இடங்களிலும் மின்தடை ஏற்பட்டு இருள் சூழ்ந்திருந்தது. பணியை முடித்து திரும்பிய இவரை தேயிலை எஸ்டேட் லாரியில் வீட்டின் அருகே விட்டு சென்றனர்.

வீட்டிற்கு தேயிலை எஸ்டேட் வழியாக சென்ற இவரை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று காலை எஸ்டேட் பகுதியில் உடல் கிடந்தது தெரியவந்தது. தகவலின் பேரில் குன்னூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X