குஜராத் பறந்தார் பஞ்சாப் முதல்வர்: ரூ.45 லட்சம் காலி!| Dinamalar

குஜராத் பறந்தார் பஞ்சாப் முதல்வர்: ரூ.45 லட்சம் காலி!

Updated : மே 08, 2022 | Added : மே 08, 2022 | கருத்துகள் (23) | |
ஜலந்தர்: குஜராத்தில் ஆம் ஆத்மி சார்பில் நடந்த பேரணியில் பங்கேற்க செல்வதற்காக பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மானின் விமான போக்குவரத்திற்கு, அரசு கருவூலத்தில் இருந்து ரூ.45 லட்சம் செலவாகியுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.குஜராத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என ஆம் ஆத்மி தீவிரம் காட்டி
bagwantmann, punjab, gujarat, RTI,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஜலந்தர்: குஜராத்தில் ஆம் ஆத்மி சார்பில் நடந்த பேரணியில் பங்கேற்க செல்வதற்காக பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மானின் விமான போக்குவரத்திற்கு, அரசு கருவூலத்தில் இருந்து ரூ.45 லட்சம் செலவாகியுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

குஜராத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என ஆம் ஆத்மி தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக கடந்த ஏப்.,1 முதல் 3 வரை, அக்கட்சி ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் ஆகியோர், குஜராத் சென்று பேரணி மற்றும் கூட்டங்களில் கலந்து கொண்டனர். இதன் பின்னர் பக்வந்த் மான், ஹிமாச்சல பிரதேச மாநிலம் சென்றார்.

இந்நிலையில், இரு மாநிலங்களில் பக்வந்த் மான் பயணத்திற்கு ஆன செலவு குறித்து பதிண்டா மாவட்டத்தை சேர்ந்த ஹரிமிலப் சிங் கிரெவல் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தார்.


latest tamil news


இதற்கு பஞ்சாப் மாநில விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அளித்த பதில்: ஏப்.,1 முதல் 3 வரை, பக்வந்த் மான் குஜராத் செல்வதற்கு விமானத்தை வாடகைக்கு எடுப்பதற்கு ரூ.44,85,967 செலவாகியுள்ளது. ஹிமாச்சல பிரதேசம் செல்வதற்கு மாநில அரசுக்கு சொந்தமான ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. இதற்கான செலவு விவரம் தெரியவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கிரெவல் கூறியதாவது: முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பஞ்சாபிற்குள் பயணம் செய்ய ஹெலிகாப்டர் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்த பக்வந்த் மான் தற்போது, தனியார் விமானம் மூலம் வேறு மாநிலத்திற்கு செல்கிறார். அரசியல் காரணங்களுக்காக மட்டுமே இந்த பயணம் இருந்தது. இதனால், பஞ்சாபிற்கும், மாநில மக்களுக்கும் எந்த பயனும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X