ஜன்தன் யோஜனா திட்டம் குறித்த விழிப்புணர்வு தேவை

Updated : மே 09, 2022 | Added : மே 09, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
நரிக்குடி- பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் துவக்கப்பட்ட வங்கி கணக்குகள் பெரும்பாலானவை பயன்படுத்தப்படாமல் உள்ளதால் முடக்கப்பட்டு வருகின்றன. வங்கிக் கணக்கை முறையாக பயன்படுத்தி வந்தால், விபத்து, ஆயுள் காப்பீடு வசதிகள் அளிக்கப்பட்டு, அதற்கான சந்தாவை மத்திய அரசே செலுத்துகிறது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

நரிக்குடி- பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் துவக்கப்பட்ட வங்கி கணக்குகள் பெரும்பாலானவை பயன்படுத்தப்படாமல் உள்ளதால் முடக்கப்பட்டு வருகின்றன.latest tamil newsவங்கிக் கணக்கை முறையாக பயன்படுத்தி வந்தால், விபத்து, ஆயுள் காப்பீடு வசதிகள் அளிக்கப்பட்டு, அதற்கான சந்தாவை மத்திய அரசே செலுத்துகிறது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.பிரதமரின் மக்கள் நிதி திட்டம் 2014ல் துவக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள அனைத்து தரப்பு மக்களும் வங்கி சேவைகளை பெற்று பயனடைய வேண்டும் என்கிற நோக்கத்தில் துவக்கப்பட்டது. சமையல் எரிவாயுக்கான அரசு மானியம், மத்திய, மாநில அரசு திட்டங்கள் மூலம் கிடைக்கும் அனைத்து தொகைகளும் இந்த வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்latest tamil news


. இதில் குறைந்தபட்ச இருப்பு கூட வைக்கத் தேவையில்லை. வங்கி கணக்கு துவங்கி பயன்படுத்தி வந்தால் ரூ. ஒரு லட்சம் வரை விபத்து காப்பீடு, ரூ. 30 ஆயிரத்திற்கு ஆயுள் காப்பீடு வழங்கப்படுகிறது. இதற்கான சந்தாவை மத்திய அரசு செலுத்தி விடும். ஆனால் இந்த கணக்கு துவங்கி ஆறு மாத காலம் உரிய பரிவர்த்தனை செய்திருக்க வேண்டும்.இத்திட்டத்தின் நோக்கமே முறைகேடுகளைத் தடுப்பது தான். பெரும்பாலானவர்கள் துவக்கப்பட்ட வங்கி கணக்குகளை சரிவர பயன்படுத்தாததால் தற்போது முடக்கப்பட்டு வருகிறது. அரசு திட்டங்கள் நேரடியாக கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. ஆகவே மக்கள் நிதி திட்டம் எனப்படும் ஜன்தன் யோஜனா மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
09-மே-202213:02:20 IST Report Abuse
Sidhaarth அப்போதான் கொள்ளை அடிக்க முடியும்
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
09-மே-202212:41:44 IST Report Abuse
R.RAMACHANDRAN ஏற்கெனவே வங்கி கணக்கு வைத்திருந்தவர்களை எல்லாம் அத்திட்டத்தில் சேர்த்துவிட்டு இப்போது பராமரிக்கவில்லை என முடக்கி வருகிறார்கள்.பண மதிப்பிழப்பின்போது அது குற்றவாளிகளுக்கு உதவிகரமாக இருந்தது கணக்கில் காட்டாத பணத்தை மாற்ற.
Rate this:
09-மே-202212:52:49 IST Report Abuse
ஆரூர் ரங்இல்லாதவர்கள் பெயரில் பினாமி கணக்கு துவங்கினால் முடக்கட்டும் .என்ன தவறு?😇 உண்மையான ஏழை என்றால் பொதுமுடக்க நேரத்தில் போடபட்ட நிவாரணம் போய் சேர்ந்திருக்கும். முடக்கம் நடந்திருக்காதே....
Rate this:
Cancel
Nagar - Dukhan ,கத்தார்
09-மே-202206:45:05 IST Report Abuse
Nagar மாநில முதல்வர்களும், மாவட்ட ஆட்சியாளர்களும், கிராம கௌன்சில்லோர்களும் இந்த பொறுப்பை ஏற்று மக்களுக்கு விழிப்புணர்வேற்றி இந்த வாங்கி கணக்குகளை முறையாக கையாள சொல்லி தரவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X