மதுரையில் மரங்கள் வெட்டி சாய்ப்பு: வேடிக்கை பார்க்கிறது பசுமைக் குழு

Updated : மே 09, 2022 | Added : மே 09, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
மதுரை,-மதுரையில் பல இடங்களில் மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுவதை பார்க்கும்போது,இதனை கண்காணிக்க அமைக்கப்பட்ட பசுமைக் குழு என்ன ஆனது என்றே தெரியவில்லை. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அரசு நிலங்கள், அலுவலகங்கள்பொது இடங்களில் மரங்கள் வெட்டுவதை தடுக்க, விழுந்த மரங்களை அகற்ற பரிந்துரை வழங்க மாநில, மாவட்ட பசுமைக்குழு துறைதோறும் அமைக்கப்பட்டுள்ளன. மாநில குழு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை,-மதுரையில் பல இடங்களில் மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுவதை பார்க்கும்போது,இதனை கண்காணிக்க அமைக்கப்பட்ட பசுமைக் குழு என்ன ஆனது என்றே தெரியவில்லை.



latest tamil news


சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அரசு நிலங்கள், அலுவலகங்கள்பொது இடங்களில் மரங்கள் வெட்டுவதை தடுக்க, விழுந்த மரங்களை அகற்ற பரிந்துரை வழங்க மாநில, மாவட்ட பசுமைக்குழு துறைதோறும் அமைக்கப்பட்டுள்ளன. மாநில குழு தமிழக அரசின் சுற்றுச்சூழல், பருவகால மாறுபாடு, வனச் செயலர் தலைமையில் அமைக்கப்பட்டது.

தொழில், ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், வருவாய், சுற்றுலா, பொதுப்பணி, நெடுஞ்சாலை துறை செயலர்கள், தமிழக டி.ஜி.பி., உறுப்பினர்களாக உள்ளனர். முதன்மை தலைமை வன பாதுகாவலர் உறுப்பினர் செயலராக உள்ளார். மாவட்ட குழு கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்டது. டி.ஆர்.ஓ., போலீஸ் எஸ்.பி., ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், வேளாண்மை, நெடுஞ்சாலை, பொதுப்பணி, அறநிலையம், தொழில் துறை அதிகாரிகள், பிரதிநிதிகள், இரு சமூக வல்லுனர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

மாவட்ட வன அலுவலர் உறுப்பினர் செயலராக உள்ளார். மாவட்டகுழு மாநில குழு ஆலோசனைப்படி வனப்பரப்பு, மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 3 மாதங்களுக்கு ஒரு முறை கூடி திட்டங்கள் வகுக்க வேண்டும். அரசு நிலங்கள்,பொது இடங்களில் உள்ள மரங்கள் குறித்து கணக்கிட்டு பட்டியல் தயாரிக்க வேண்டும். மதுரையில் உள்ள குழு இப்பணிகளை செய்ததாக தெரியவில்லை


latest tamil news


காப்புக் காடு உட்பட பல இடங்களில் வளர்ந்த மரங்கள்வெட்டப்படுகின்றன. நெடுஞ்சாலைகள் அமைக்க வெட்டும் மரங்களை வேருடன் அகற்றி வேறு இடத்தில் நட பல முறை கோரிக்கை விடுத்தும் நடக்கவில்லை. பசுமைக் குழு சுறுசுறுப்பாக செயல்பட்டு பசுமையை காக்க வேண்டும். ஈர நிலம் காக்கும் குழுவும் முடங்கி கிடக்கிறது என இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thangamariappan - mayiladuthurai,இந்தியா
09-மே-202212:48:38 IST Report Abuse
Thangamariappan சாலை விரிவாக்கம் பொது ஒருபுறம் உள்ள மரங்களை மட்டும் அகற்ற வேண்டும் கடலூர் சிதம்பரம் சாலையில் இப்போது மரங்கள் இல்லை
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
09-மே-202211:50:44 IST Report Abuse
raja ....
Rate this:
Cancel
kumaresan - madurai ,இந்தியா
09-மே-202210:46:41 IST Report Abuse
kumaresan மதுரை நகர் பகுதியில் நிறைய மரங்கள் நட பட வேண்டும். இல்லையென்றால் மதுரை மழை இல்லாத நீர் இல்லாத வறண்ட பகுதி ஆகி விடும். மதுரை மஹால் சுற்றி உள்ள பகுதிகள், மாசி, மா ரட்டு மற்றும் வெளி வீதிகள் மரங்கள் நிறைந்த பகுதிகளாக மாற்ற வேண்டும் . இது மதுரையின் அவசர தேவை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X