இது உங்கள் இடம்: மாணவன் போல முதல்வர் விழிக்கலாமா?| Dinamalar

இது உங்கள் இடம்: மாணவன் போல முதல்வர் விழிக்கலாமா?

Updated : மே 09, 2022 | Added : மே 09, 2022 | கருத்துகள் (88) | |
உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:தீபாவளி திருநாள் போன்ற ஹிந்து மத விசேஷங்களுக்கு மட்டும் முதல்வர் ஏன் வாழ்த்து சொல்வதில்லை என, சட்டசபையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., விசுவநாதன் எழுப்பிய கேள்விக்கு, முதல்வர் அளித்துள்ள பதிலை படித்தால், சிறுபிள்ளை கூட கைகொட்டி


உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்




முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

தீபாவளி திருநாள் போன்ற ஹிந்து மத விசேஷங்களுக்கு மட்டும் முதல்வர் ஏன் வாழ்த்து சொல்வதில்லை என, சட்டசபையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., விசுவநாதன் எழுப்பிய கேள்விக்கு, முதல்வர் அளித்துள்ள பதிலை படித்தால், சிறுபிள்ளை கூட கைகொட்டி சிரிக்கும். அவர் சொன்ன பதில், 'இது, ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி ஆட்சி. ஒரே வரியில் சொல்வதாக இருந்தால், இது, திராவிட மாடல் ஆட்சி' என்று கூறியுள்ளார்.



latest tamil news




இங்கு தான் நமக்கு, இம்சை அரசன் 23-ம் புலிகேசி என்ற, காமெடி நடிகர் வடிவேலு நடித்த படம் நினைவுக்கு வருகிறது.'ஏன்டா வேடிக்கை பார்த்தாய்' என்ற கேள்விக்கு, 'நான் பிள்ளை குட்டிக்காரன்' என்று பதில் கூறும் காவலாளியை பார்த்து, 'அதற்கு இது பதில் இல்லையே?' என புலிகேசியாக நடித்துள்ள வடிவேலு கேட்பார்.


முதல்வரைப் பார்த்தும், அதே கேள்வியை கேட்க வேண்டும் போல தோன்றுகிறது. மாநிலத்தை ஆளும் முதல்வர், பதில் தெரியாத பள்ளி மாணவன் போல, சட்டசபையில் மழுப்பலாக பதில் அளிப்பதும், கேள்விக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத விஷயத்தை குருட்டுத்தனமாக வாசிப்பதும், எல்லா வியாதிக்கும் ஒரே மருந்து என்ற கணக்காக, எதைக் கேட்டாலும் திராவிடம் திராவிடம் என்று பஜனை செய்வதும் கதைக்கு உதவாது.


latest tamil news




சட்டசபையில், யாரோ எழுதி கொடுத்ததை நீவிர் வாசிப்பதில், மக்களுக்கு ஆட்சேபனை இல்லை முதல்வரே... ஆனால், கேள்விக்கு பதில் சொல்லும் திறமையின்றி, எழுதி வைத்ததில் இருந்து தொடர்பில்லாமல் வாசிப்பது, வாய்க்கு வந்ததை கூறி சமாளிக்கப் பார்ப்பது கேலிக் கூத்தாகும். 'குற்றியலுகரம் தெரியாதையா, பேந்த பேந்த விழிக்கிறேன்யா' என்ற அந்த காலத்து மாணவன் போன்று, நாட்டை ஆள்பவரே சொன்னால் யாரை நோவது?

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X