டில்லியில் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கையால்... பதற்றம்!

Updated : மே 09, 2022 | Added : மே 09, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி:டில்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாநகராட்சியின் 'புல்டோசர்'கள் நேற்று காலை அணிவகுத்தன. அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டது.டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கு டில்லி மாநகராட்சிகள், பா.ஜ.,
டில்லி  ஆக்கிரமிப்பு   நடவடிக்கை தற்றம்!  போராட்டம்

புதுடில்லி:டில்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாநகராட்சியின் 'புல்டோசர்'கள் நேற்று காலை அணிவகுத்தன. அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டது.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கு டில்லி மாநகராட்சிகள், பா.ஜ., வசம் உள்ளன.


போலீஸ் பாதுகாப்பு


இந்நிலையில், டில்லியில் உள்ள சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. வடக்கு டில்லியின் ஜஹாங்கீர்புரியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி கடந்த மாதம் நடந்தது. அப்போது, இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. உச்ச நீதிமன்றம் தலையிட்டு, ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை நிறுத்தி
வைத்தது. இந்நிலையில், தெற்கு டில்லியின் ஷாஹீன்பாக் பகுதியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாநகராட்சியின் புல்டோசர்கள் நேற்று காலை அணிவகுத்து
வந்தன. அப்போது, தெற்கு டில்லி மாநகராட்சி மற்றும் மத்திய அரசை எதிர்த்து அப்பகுதி மக்கள் கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சிலர் புல்டோசர் முன் வந்து அமர்ந்தனர்.
இதனால், ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமல் அவை திரும்பி சென்றன. அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஉள்ளது. துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.டில்லி பா.ஜ., தலைவர் ஆதேஷ் குப்தா கூறியதாவது:தெற்கு மற்றும் கிழக்கு டில்லியில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மற்றும்
வங்கதேசத்தைச் சேர்ந்த சமூக விரோதிகள் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


நடவடிக்கை



latest tamil news



அவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தால், ஆத் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் அவர்களுக்கு ஆதரவாக வருகின்றனர். ஆக்கிரமிப்பு அகற்றத்தை தடுப்பவர்களுக்கு, மக்கள் விரைவில் பதில் தருவர். இந்த நடவடிக்கையை தயவு செய்து மதத்துடன் சம்பந்தப்
படுத்தாதீர்கள்.இவ்வாறு அவர் கூறினார்.


மனு தள்ளுபடி!



ஷாஹீன்பாக் ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். நீதிபதிகள்
எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் பிறப்பித்த உத்தரவு:இந்த விவகாரத்தில் என்ன அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூ., எதற்காக மனு தாக்கல் செய்கிறது. நீங்கள்
உயர் நீதிமன்றத்தை நாடுங்கள். ஜஹாங்கீர்புரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை இதற்கு நீங்கள் சாதகமாக பயன்படுத்த முடியாது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-மே-202208:58:18 IST Report Abuse
சந்திரசேகர் ஆக்கிரமிப்பை அகற்ற போனால் எதிர்கட்சிகள் ஓட்டு பிச்சைக்காக ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டால் நாடு எப்படி உருப்படும். ஆளும்கட்சி எதாவது நல்லது செய்தால் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு வரவேண்டும். அதே நேரத்தில் ஆளும் கட்சி தவறு செய்தால் அதை கண்டிக்க தவறவிடக் கூடாது. ஜனநாயகத்தை காக்க இருவரும் பாடுபட வேண்டும். வெறும் ஓட்டு அரசியல் செய்யக்கூடாது
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
10-மே-202208:24:25 IST Report Abuse
Darmavan ஜஹாங்கிர்ப்புரியில் ஏன் உச்ச நீதி மன்றம் தலையிட்டது அதுவே தவறு,
Rate this:
Cancel
மிளிர்வன் - AKL,நியூ சிலாந்து
10-மே-202204:53:02 IST Report Abuse
மிளிர்வன் ரொஹிங்கியானுங்க'ன்னு தெரிந்தால் அடித்து விரட்டாமல் இதென்ன பைத்தியக்காரத்தனம்..?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X