கோடிகளை குவிக்கும் லேடி... 'மாமூல்' போகுது தேடி!

Updated : மே 15, 2022 | Added : மே 10, 2022 | |
Advertisement
அவிநாசி தேர்த்திருவிழாவில், பஞ்சமூர்த்திகள் - 63 நாயன்மார்கள் திருவீதியுலா பார்க்க சென்ற சித்ராவும், மித்ராவும், சுவாமி தரிசனம் செய்து விட்டு, புறப்பட்டனர்.''இப்பெல்லாம் 'போக்சோ' வழக்கு, நிறைய போடறாங்க அக்கா. யாரை நம்பறதுன்னே தெரியல; சின்ன பிள்ளைங்க வாழ்க்கைல இப்படி விளையாடறாங்களே. அந்த மாதிரி தப்பு பண்றவங்க மேல, கடுமையா நடவடிக்கை எடுக்கணும்'' என, ஆதங்கத்துடன்
கோடிகளை குவிக்கும் லேடி... 'மாமூல்' போகுது தேடி!

அவிநாசி தேர்த்திருவிழாவில், பஞ்சமூர்த்திகள் - 63 நாயன்மார்கள் திருவீதியுலா பார்க்க சென்ற சித்ராவும், மித்ராவும், சுவாமி தரிசனம் செய்து விட்டு, புறப்பட்டனர்.
''இப்பெல்லாம் 'போக்சோ' வழக்கு, நிறைய போடறாங்க அக்கா. யாரை நம்பறதுன்னே தெரியல; சின்ன பிள்ளைங்க வாழ்க்கைல இப்படி விளையாடறாங்களே. அந்த மாதிரி தப்பு பண்றவங்க மேல, கடுமையா நடவடிக்கை எடுக்கணும்'' என, ஆதங்கத்துடன் பேச்சை துவக்கினாள் மித்ரா.''ஆமா மித்து. போலீஸ்காரங்க வீதிவீதியா போய் விழிப்புணர்வு கொடுத்துட்டு இருக்காங்க. இப்படிதான் போன வாரம், பெருமாநல்லுார் பக்கத்துல ஒரு கிராமத்தில, அக்கா, தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததா, ஒருத்தரை 'போக்சோ' வழக்குல 'அரெஸ்ட்' பண்ணாங்க...''''அந்த ஸ்டேஷன் ஆபீசர், பாதிக்கப்பட்ட சிறுமிங்க இருக்கற ஊருக்கு போய், விழிப்புணர்வு பிரசாரம் பண்ணியிருக்காங்க. உங்க கிராமத்தில கூட, ரெண்டு பேர் பாதிக்கப்பட்டிருக்காங்கன்னு சொல்லி, ரெண்டு சிறுமிகளை காட்டி பிரசாரம் செஞ்சதும், மக்கள் 'ஷாக்' ஆயிட்டாங்களாம்...''''இப்படி மத்தவங்க முன்னாடி நிக்க வைச்சு அசிங்கப்படுத்திட்டாங்களேன்னு, பேரன்ட்ஸ் துடிதுடிச்சு போயிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.''அடக்கொடுமையே. பாதிக்கப்பட்ட சிறுமி பெயரையோ, போட்டோவையோ, வசிக்கும் இடத்தையோ வெளிப்படுத்தக்கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கறப்ப, இந்த மாதிரி அதுவும் போலீசே நடந்துகிட்டது ரொம்ப ரொம்ப தப்பு. இது விஷயத்தில பெரிய அதிகாரி தான் நடவடிக்கை எடுக்கோணும்க்கா...'' ஆவேசப்பட்டாள் மித்ரா.


ரேஷன் அரிசி'சேல்ஸ்' அபாரம்

''கண்டிப்பா எடுப்பாருன்னு நம்பலாம்,'' என்ற சித்ரா, ''அவிநாசியில, வீடு, வீடா போய், கிலோ அஞ்சு ரூபாய்ன்னு ரேஷன் அரிசியை வாங்கிட்டு போய், பன்னிரண்டு ரூபாய்க்கு மில்காரங்களுக்கு வித்துடறாங்களாம். இதையே பலரும் ஒரு தொழிலா செய்ய ஆரம்பிச்சுட்டாங்களாம்...'' அடுத்த தகவல் சொன்னாள்.''இப்படி அரிசி வாங்கி, விக்கறவங்களை புடிச்சு, 'குண்டாஸில்' போட்டும் இப்படியாக்கா...?''''அட நீ வேற. உள்ளே போயிட்டு வெளியே வந்தும் கூட திருந்தலையாம். தங்களுக்குன்னு, ஏரியாவையும் பிரிச்சு வைச்சுட்டு, தினமும் அரிசி 'கலெக்ஷன்' பண்றாங்களாம். ஒரு மொபட்ல, அரை டன் அளவுக்கு கூட ரேஷன் அரிசியை மூட்டையா கட்டி எடுத்துட்டு போறாங்களாம். போலீஸ், சிவில் சப்ளை அதிகாரிகள 'கவனிச்சு' தொழிலை, 'ஜோரா' நடத்தறாங்களாம்,'' விளக்கினாள் சித்ரா.


மண் கடத்தல் 'பலே'

''பல்லடத்துல, மானியத்தில் டாய்லெட் கட்டி தர்றேன்னு சொல்லி, ஆளுங்கட்சி நிர்வாகி ஒருத்தரு வசூல் அள்ளிட்டாரு. இத, நகரமன்ற கூட்டத்துல, பி.ஜே.பி., கவுன்சிலர் கேள்வி கேட்ட விவகாரம், அறிவாலயம் வரைக்கும் போய், நிர்வாகியோட பதவியை பறிச்சுட்டாங்களாம். எப்படியோ, பூனைக்கு 'மணி' கட்டியாச்சுன்னு, தாமரைக்கட்சிக்காரங்க சந்தோஷப்படறாங்களாம்...'' என்றாள் மித்ரா.''வெரிகுட் மித்து... அதே ஊர்ல, அடிக்கடி மண் கடத்தறாங்களாம். இது சம்மந்தமா வில்லேஜ் ஆபீசர்கிட்ட புகார் கொடுத்தா, சத்தமில்லாம போய், வண்டிக்காரங்ககிட்ட 'மாமூல்' வாங்கிட்டு, வழியனுப்பி வைச்சிடறாராம். என்ன நடவடிக்கை எடுத்தீங்கன்னு, மக்கள் கேட்டா, 'நான் ரொம்ப பிஸி. விசாரிச்சுட்டு இருக்கேன்'ன்னு சொல்லி 'எஸ்கேப்' ஆகிட றாராம். எல்லாம் அந்த 'சுப்ரமணியரு'க்கே வெளிச்சம்ன்னு, மக்கள் புலம்பறாங்க'' என தெரிந்த தகவலை சொன்னாள் சித்ரா.


சான்றிதழுக்கும்கால் முளைக்குது!

''கார்ப்ரேஷன் ஆபீஸ்ல, அரசின் ஓராண்டு சாதனை விளக்க நிகழ்ச்சி மேயர் தலைமைல நடந்துச்சு. சாதனை மலரை வெளியிடும் போதெல்லாம், முன்னாடி நின்னுக்கிட்டிருந்த, கமிஷனர், கடைசியா, ஆளுங்கட்சி கொடி வரையப்பட்ட, 'கேக்' வெட்றப்போ மட்டும், 'எஸ்கேப்' ஆகி வெளியே போயிட்டாராம்,'' என்றாள் மித்ரா.''நமக்கு எதுக்கு வம்புன்னு, அதிகாரிங்க ஒதுங்கறது சகஜம் தானே மித்து,'' என்ற சித்ரா, ''வடக்கு தாலுகா ஆபீஸ்ல, ஒருத்தர் தடையின்மை சான்று கேட்டு, விண்ணப்பிச்சிருக்காரு. ரொம்ப நாளாகியும், சர்டிபிகேட் கிடைக்காததால, மறுபடியும் போய் கேட்டதற்கு, 'உங்க 'பைல்' ரெடியாகிடுச்சு, ஆபீசர் டேபிள்ல இருக்குனு' சொல்லியிருக்காங்க,''''ஆனாலும், கிடைக்காததால, திரும்ப போய் கேட்டப்போ, உங்க 'பைல்' காணாம போயிடுச்சுன்னு ரொம்ப 'கூலா' சொல்லியிருக்காங்க. அப்படியே 'ஷாக்' ஆனவரு, 'அதெப்படி, ஆபீசர் டேபிள்ல இருந்த 'பைல்' மாயமாகுன்னு கேட்க,'மேற்படி கவனிச்சா, உடனே, கிடைச்சிருக்கும்ன்னு, ஒரு ஊழியரு சொல்லியிருக்காரு. இப்படிதான், நிறைய 'பைல்கள்' மாயமாகி, 'கவனிப்பு' வந்ததுக்கு அப்புறம், கால் முளைச்சு வந்துடுதாம்,'' என்றாள்.''இத பத்தி, நம்ம கவுரி அக்காகிட்ட கேட்டா விஷயம் தெரியும்,'' என சிரித்த மித்ரா, ''அக்கா, அதே தாலுகாவில் வி.ஐ.பி., பிரதர்ஸ் தொடர்பான சொத்து பிரச்னை, ஆர்.டி.ஓ., விசாரணையில இருந்துச்சு. ரெண்டு தரப்பையும் கூப்பிட்டு விசாரிச்ச அதிகாரி, கோர்ட்டுக்கு போய் பிரச்னையை முடிச்சுக்கோங்கன்னு சொல்லிட்டாரு...''''ஆனா, வி.ஐ.பி., பிரதர்ஸ், கோர்ட்டுக்கு போகாம, அதிகாரிங்க மூலமாகவே, பஞ்சாயத்து பேசி, 'பைசல்' பண்ணி 'விஜயம்' பண்ணிடலாம்ன்னு நினைச்சாங்களாம். ஆனால், ஒண்ணும் நடக்கலையாம்...'' என்றாள்.


கரைவேட்டிக்கே கடிவாளம்...

திடீரென்று மழைத்துளிகள் விழவே, வண்டியை மெதுவாக ஓட்டிய சித்ரா, ''ஓடையை வச்சு அரசியல் செஞ்சிட்டு இருக்கற அரசியல்வாதிங்க, இப்ப பதுங்கிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.''இது எங்கக்கா...?'' என்றாள் மித்ரா.''கோர்ட் உத்தரவுபடி, நொய்யல், பூண்டி, அம்மாபாளையம் பக்கத்துல நல்லாற்றையொட்டி இருக்கற ஆக்கிரமிப்பு வீடுகளையெல்லாம் அப்புறப்படுத்த, நீர்வளத்துறை அதிகாரிங்க ரெடியாயிட்டாங்க,''''அங்க இருக்கற மக்களை நம்பி தான், அந்தந்த பகுதி கவுன்சிலர்ங்க, அரசியல் செஞ்சிட்டு இருக்காங்க. கணிசமா ஓட்டு வங்கி இருக்கறதால, மக்களை காலி செய்யவிடாம பாத்துக்கணும்னு, மக்களை திரட்டி, 'நாங்க ரொம்ப சிரமத்துல இருக்கோம்; வீட்டை காலி பண்ண சொன்னா, நாங்க எங்கே போவோம்…' அப்படி, இப்படின்னு 'சீன்' போட்டு, அரசியல் செய்றாங்களாம்,''''இதனால, டென்ஷனான அதிகாரிங்க, 'ஆக்கிரமிப்பை எடுக்கலைன்னா, கோர்ட், எங்க மேல நடவடிக்கை எடுத்துடும். எங்கள வேல செய்ய விடாம தடுக்கற மாதிரி, ஏதாவது பண்ணிட்டு இருந்தீங்கன்னா, உங்க மேல கேஸ் குடுக்க வேண்டியிருக்கும்ன்னு, சொல்லிட்டாங்களாம்,''''இதனால, கவுன்சிலர்களும், கரைவேட்டிகளும் கிலியடிச்ச மாதிரி, ஒதுங்கிட்டாங்களாம்,'' என விளக்கினாள் சித்ரா.


அப்பாடா...வண்டி வந்துடுச்சு!

சிக்னல் வரவே, வண்டியை நிறுத்திய சித்ராவிடம், ''அக்கா, பொதுவா, டிரான்ஸ்பர்ல போற ஐ.பி.எஸ்., அதிகாரிங்க, அவங்க பயன்படுத்திட்டு இருக்கற, அரசாங்க வாகனத்தை, 'டிரான்ஸ்பர்' ஆகுற இடத்துக்கும் எடுத்துட்டு போவாங்களாம். அப்புறம், கொஞ்சம் நாள் கழிச்சு, திருப்பி அனுப்பி வைச்சிடுவாங்களாம்,''''அந்த மாதிரி, சிட்டியை கவனிச்சுட்டு இருந்த பெரிய ஆபீசர், ஜனவரி மாசம், புரமோஷன்ல, சென்னைக்கு போனாங்க. ஆனால, அவங்க எடுத்துட்டு போன வாகனத்தை, இப்பதான் அனுப்பி வச்சாங்களாம். இனிமேல தான், டிரைவர் வந்து சேரணுமாம்,'' என்றாள்.''அதிகாரிங்க படுத்தற பாடு, ரொம்ப மோசம்பா...'' என ஆமோதித்த சித்ரா, ''லிங்கேஸ்வரர் குடி கொண்ட ஊர்ல, வட்டமான ஆபீஸ் பெரிய அதிகாரி, வந்த புதுசில, 'தாட்பூட்'னு இருந்தார். இப்பவெல்லாம், தன்னை தேடி மாமூல் வரலைன்னா, எல்லாத்தையும் கடிக்கிறாராம்,''''அப்படி 'வாங்கி' பழகிட்டு, இடமா வாங்கி குவிக்கிறாராம். சரியா சொல்லோணும்னா, ஆண்டிபாளையத்தில, ரெண்டு 'சி'யில, ஒரு காம்ப்ளக்ஸ் தன்னோட சொந்தக்காரங்க பேரில் வாங்கியிருக்காராம். இத கேள்விப்பட, கூட வேல செய்யற சீனியர் ஸ்டாப்ஸ், 'இவ்வளவு சின்ன வயசில இப்படின்னா, புரமோஷன் வந்தா கேட்கவே வேணாம்னு,' கிண்டல் பண்ணி பேசறாங்களாம்...'' என்றாள்.''என்னவோ போங்க்கா... யார நம்பறதுன்னே தெரியல...'' என அங்கலாய்த்த மித்ராவிடம், ''எல்லாம் அந்த அவிநாசியப்பர் பாத்துப்பார்...' என்ற சித்ரா, எக்ஸலேட்டரை முறுக்கினாள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X