அடுத்த கட்டத்தை நோக்கி தொழில்துறை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விருப்பம்

Updated : மே 10, 2022 | Added : மே 10, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
கோவை,-''புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தொழில்துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார் .'தி ஸ்டார்ட் அப்ஸ் அகாடமி' சார்பில், 'ஸ்டார்ட் அப் துருவ்' விருது வழங்கும் விழா, கோவையில் நேற்று நடந்தது. 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விருது வழங்கி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை,-''புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தொழில்துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்



latest tamil news


.'தி ஸ்டார்ட் அப்ஸ் அகாடமி' சார்பில், 'ஸ்டார்ட் அப் துருவ்' விருது வழங்கும் விழா, கோவையில் நேற்று நடந்தது. 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விருது வழங்கி பேசியதாவது:நாட்டின் இயற்கையான தொழில்முனையும் தன்மையை அங்கீகரிக்க வேண்டும் என முடிவு செய்து, கொள்கை மாறுதலை அமல்படுத்தினார்

பிரதமர் மோடி. இதை, 2021ல் கொள்கையாகவே மத்திய அரசு அறிவித்தது.பொதுத்துறை நிறுவனங்களுக்கு தனி ஒதுக்கீடு எதுவும் செய்யப்படாது என அறிவித்தோம். எல்லா துறைகளிலும் தனியார் துறைகள் வருவதற்காக, தேவையான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இன்று விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி உள்ளிட்ட பல துறைகளில் தனியார் துறையினர் வரலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டது.

வணிக ரீதியாக தனியாருக்கு எங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ, அங்கு முதலீடு செய்யலாம்.சிறு, குறு, நடுத்தர தொழில்கள் நாட்டின் முதுகெலும்பாக உள்ளன. இத்துறையில் இன்றைய இளைஞர்கள் தொழில்நுட்பங்களை புகுத்தி, புதிய முயற்சிகளை மேற்கொண்டால் பெரும் வாய்ப்புகள் இருக்கின்றன. புதிய கண்டுபிடிப்புகளுடன், வாய்ப்புகளை தேடி வரும் இளைஞர்களுக்கு எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க, பிரதமர் மோடி, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க துவங்கினார். அதனால் 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் புதிது புதிதாக துவங்கின.

பெங்களூரு, ஹைதராபாத் போன்ற 'ஸ்டார்ட் அப்' இடங்கள் இருந்தாலும், கோவை இயற்கையாகவே தொழில்முனையும் தன்மையை பல ஆண்டுகளாகவே கொண்டிருந்த நகரம். காப்புரிமை குறித்து பேசாததற்கு முன்பே, ஜி.டி.நாயுடு போன்ற தொழில் வல்லுனர்கள் இருந்த நகரம்.பெரிய தொழில் நிறுவனங்களுக்கு இதுநாள் வரை சிறு, குறு, நடுத்தர தொழில்துறையினர் உதவியாக இருந்து வந்துள்ளனர்.

தற்போது அதை தாண்டி, 'வெப் - 3' உலகத்துக்கு வந்து விட்டோம். செயற்கை நுண்ணறிவு, பிக் டேட்டா போன்றவற்றை பயன்படுத்த துவங்கி விட்டோம். அதனால், செயல்திறன் அதிகரித்துள்ளது. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தொழில்துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.ஒவ்வொரு பிரிவிலும், 'வெப் - 3' தொழில்நுட்பத்தையும், செயற்கை நுண்ணறிவையும் பயன்படுத்தி, உற்பத்தியில் இருந்து ஏற்றுமதி வரை மேற்கொள்ள யோசிக்க வேண்டும்.


latest tamil news


இதற்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முன்னோடியாக இருக்க வேண்டும்.விவசாயம், மருத்துவம் என அனைத்து துறையிலும், உற்பத்தி, தரக்கட்டுப்பாடு என பல்வேறு பிரிவுகளிலும் முன்னோடி மையமாக இருந்து, கோவை நாட்டுக்கே வழிகாட்ட முடியும்.தண்ணீர் பற்றாக்குறையுடன் விவசாயம் செய்து கொண்டிருக்கிறோம். அடுத்த ஆண்டு உணவு தானிய ஆண்டு. தானிய உற்பத்தியை அதிகரிக்க புதிய கண்டுபிடிப்புகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, நிர்மலா சீதாராமன் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
10-மே-202206:31:03 IST Report Abuse
Kasimani Baskaran தமிழக தொழிற்துறைக்கு இதில் சம்பந்தம் இல்லை என்று நினைக்கையில் திராவிடன் ஒரு பொழுதும் திருந்தமாட்டான் என்பதை உணர முடிகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X