மத்திய அரசு நிச்சயம் பாதுகாப்பு அளிக்கும்: மதுரை ஆதீனம் நம்பிக்கை

Updated : மே 10, 2022 | Added : மே 10, 2022 | கருத்துகள் (52) | |
Advertisement
மதுரை: ''எனக்கு மிரட்டல் வந்தது குறித்து பிரதமர் மோடியிடம் தெரிவிப்பேன் என கூறி இருந்தேன். மத்திய அரசு நிச்சயம் பாதுகாப்பு அளிக்கும்,'' என, மதுரை ஆதீனம் கூறினார்.தருமபுரம் ஆதீனத்தின் பட்டின பிரவேசத்திற்கான தடை நீக்கப்பட்டதை வரவேற்று, மதுரையில் பக்தர்களுக்கு மதுரை ஆதீனம் இனிப்பு வழங்கினார். அவர் கூறியதாவது:பட்டினப்பிரவேச தடை நீக்கப்பட்டதை வரவேற்கிறேன். இதை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மதுரை: ''எனக்கு மிரட்டல் வந்தது குறித்து பிரதமர் மோடியிடம் தெரிவிப்பேன் என கூறி இருந்தேன். மத்திய அரசு நிச்சயம் பாதுகாப்பு அளிக்கும்,'' என, மதுரை ஆதீனம் கூறினார்.

தருமபுரம் ஆதீனத்தின் பட்டின பிரவேசத்திற்கான தடை நீக்கப்பட்டதை வரவேற்று, மதுரையில் பக்தர்களுக்கு மதுரை ஆதீனம் இனிப்பு வழங்கினார். அவர் கூறியதாவது:

பட்டினப்பிரவேச தடை நீக்கப்பட்டதை வரவேற்கிறேன். இதை முன்பே சமய தலைவர்களுடன் சுமுகமாக பேசி தீர்த்திருக்க வேண்டும். மற்ற ஆதீனங்கள் அரசுடன் ஒத்துப்போகும் போது, நான் மட்டும் ஏன் எதிர்க்க வேண்டும்.பல்லக்கு துாக்குவது என்பது ஏழாம் நுாற்றாண்டில் இருந்தே நடந்து வருகிறது.latest tamil news
இதனால் தடை செய்யக் கூடாது என, முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்தேன். அதை ஏற்று அனுமதி தந்ததற்கு வாழ்த்துக்கள். இவ்விஷயத்தில் குரல் கொடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். குறிப்பாக, திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு வாழ்த்துக்கள். அவர் இவ்விஷயத்தை ஆரம்பிக்காமல் விட்டிருந்தால், பட்டினப்பிரவேசம் என்றால் என்ன என யாருக்கும் தெரிந்திருக்காது. இன்று உலகத்திற்கே தெரிந்து விட்டது.

கஞ்சனுார் கோவில் இடங்களை ஆளுங்கட்சியினர் ஆக்கிரமித்ததுடன் மிரட்டுகின்றனர் என்று கூறி இருந்தேன். தவறு செய்யும் தி.மு.க., வினரை கட்சியில் இருந்து நீக்குவேன் என, முதல்வர் கூறி இருந்தார்.

நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன். பள்ளத்துாரில் ஆதீன நிலத்தில் வீடு கட்டுவோம் என, தி.மு.க.,வைச் சேர்ந்த ஊர் தலைவர் மிரட்டுகிறார். அவர் 6 லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ளார். இப்படி இருந்தால் எப்படி நிர்வாகம் செய்ய முடியும். கஞ்சனுார் கோவில் பெண் நிர்வாக அதிகாரி, அன்னதானம் உண்டியலையே துாக்கிச் சென்று விட்டார். அறநிலையத்துறைக்கும், அரசுக்கும் கடிதம் எழுதினேன். இதுவரை நடவடிக்கை இல்லை. அன்னதானம் நடக்காமலேயே அன்னதானம் நடந்ததாக அவர் கணக்கு எழுதியுள்ளார்.


latest tamil news
நான், பா.ஜ., ஹிந்து அமைப்புகள் கட்டுப்பாட்டில் இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து கவலைப்பட போவதில்லை. எல்லா சமய சம்பிரதாயங்களையும் முதல்வர் பாதுகாக்க வேண்டும்.அவர் எல்லாருக்கும் முதல்வர். அறநிலையத்துறை கோவில்களில் கட்டணமில்லா தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும். தி.மு.க.,வின் ஓராண்டு ஆட்சி குறித்து கருத்துக்கூற விரும்பவில்லை.எனக்கு மிரட்டல் வந்தது குறித்து பிரதமர் மோடியிடம் தெரிவிப்பேன் என கூறி இருந்தேன்.மத்திய அரசு நிச்சயம் பாதுகாப்பு அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


பேரூர் ஆதீனம் வாழ்த்துபேரூர் ஆதீனம் நேற்று கூறியதாவது:
மரபையும், பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் மதித்து தடை உத்தரவை நீக்கிய அரசுக்கு எங்களது வாழ்த்துக்களையும், மகிழ்ச்சிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வருங்காலத்தில் இதுபோன்ற சிக்கல்களை தவிர்ப்பதற்காக, வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில், தீர்வு காணப்படும்.

இதற்காக, தெய்வீக பேரவை என்ற அமைப்பையும் புதுப்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழ் வழிபாட்டு பயிற்சிக்கு எல்லா வகையிலும், அனைத்து ஆதீனங்களும் துணை நிற்போம்.இவ்வாறு அவர் கூறினார்.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Godyes - Chennai,இந்தியா
15-மே-202214:11:49 IST Report Abuse
Godyes இன்னும் கொஞ்ச நாள் போனா எந்த கோவிலிலும் சாமி இருகெகாது அதற்கு பதில்....
Rate this:
Cancel
Bal - தலைநகர்,இந்தியா
10-மே-202218:32:26 IST Report Abuse
Bal ஓ மதுரை ஆதீனமா? அவருக்கு என்ன, தேவைப்பட்டால் அவரது சக(ஆ) ஆதீனகர்த்தா நித்யானந்தாவின் நாட்டுக்கு கூட எளிதாக செல்லலாம். மற்றவர்கள் மாதிரி துன்பப்பட தேவையில்லை.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
10-மே-202217:31:22 IST Report Abuse
DVRR ஐய்யயோ மத்திய அரசா இந்த பெயரை கேட்டாலே முன்னாடி பின்னாடி பிச்சிக்குமே இந்த திராவிட மடியல் அரசுக்கு???ஆகவே இவரை உடனே கைது செய்யுமே????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X