இலங்கை கலவரம்: 7 பேர் பலி; 200 பேர் காயம்; விமான நிலையம் சுற்றி வளைப்பு

Updated : மே 10, 2022 | Added : மே 10, 2022 | கருத்துகள் (169) | |
Advertisement
கொழும்பு: இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின் வெட்டு உள்ளிட்ட நெருக்கடிகளில் சிக்கி உள்ளது.இதையடுத்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவி விலகக் கோரி, பொதுமக்கள் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கொழும்பு விமான நிலையத்திலும் போராட்டக்காரர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கொழும்பு: இலங்கை, அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின் வெட்டு உள்ளிட்ட நெருக்கடிகளில் சிக்கி உள்ளது.இதையடுத்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவி விலகக் கோரி, பொதுமக்கள் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கொழும்பு விமான நிலையத்திலும் போராட்டக்காரர்கள் குவிந்துள்ளனர்.


இலங்கை பிரதமர் ராஜபக்சே கொழும்புவில் உள்ள அவரது அலறி மாளிகையில் இருந்து வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. இவர் வெளிநாடு தப்பி செல்ல ஏதுவாக விமானங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது. ஆனால் அவர் உடல் நிலை தொடர்பாக சிகிச்சை செய்து கொள்ள வெளிநாடு செல்லவிருப்பதாக கூறப்படுகிறது. ராஜபக்சே குடும்பத்தினர், திரிகோணமலையில் உள்ள கடற்படை தளத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும், அங்கிருந்து வெளிநாட்டிற்கு தப்பி செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து, போராட்டக்காரர்கள் கடற்படை தளத்தையும், பசில் ராஜபக்சே வீட்டையும் முற்றுகையிட்டுள்ளனர்.



latest tamil news



நேற்று நடந்த கலவரத்தில் போராட்டக்காரர்கள் பிரதமர் ராஜபக்சேயின் வீட்டினை தீயிட்டுக் கொளுத்தினர். அந்நாட்டு முன்னாள் அமைச்சர்களின் வீடுகளுக்கும் தீ வைத்தனர். இலங்கை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது அலுவலகம் தொழிற்சாலைகள், கார்கள் போன்றவற்றையும் தாக்கினர். ஆளுங்கட்சியினர் தப்பிவிடாமல் இருக்க விமான நிலையங்களில் போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்தனர்.


latest tamil news




பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததை தொடர்ந்து அதிபர் கோதபய ராஜபக்ஷே யின் ராஜினாமாவை வலியுறுத்தி போராட்டம் வெடித்துள்ளது. இலங்கை அரசு ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். நாடு முழுவதும் கலவரம் தொடர்வதால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. கலவரம் நடக்கும் இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது .

Advertisement




வாசகர் கருத்து (169)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Godyes - Chennai,இந்தியா
15-மே-202214:04:58 IST Report Abuse
Godyes ராஐபட்சே தெனாவெட்டு புடிச்ச ஆள்.ஆட்சிக்கு லாயக்கற்றவன்.
Rate this:
Cancel
10-மே-202220:12:20 IST Report Abuse
அப்புசாமி ஏர்போர்ட்டை முடக்கினா என்ன? கள்ளத்தோணி இருக்குமே...
Rate this:
Cancel
N. Srinivasan - Chennai,இந்தியா
10-மே-202218:47:47 IST Report Abuse
N. Srinivasan விலைவாசி என்றம் என்பது எதனால் வருகிறது? அரசியல் ஆதாயத்திற்காக பொருட்களை இலவசமாக தருகிறேன் என்று சொல்லுவது அதனால் அந்த செலவை ஈடுகட்ட வரி உயர்த்துவது எரிபொருள் செலவு. இப்படி பல பிரச்சனை உள்ளபோது மின்சாரம் இலவசம், பேருந்து கட்டணம் இலவசம் என சொல்லுவது தப்பு. உண்ண உணவு மட்டும் குறிப்பிட்ட மக்களுக்கு இலவசம் என்பது தேவை. பயிர்க்கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி இவை எல்லாம் அரசியல் செய்து பிரச்சனை வரும்போது மத்திய அரசை குறை கூறுவது..... நல்லதல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X