புதுச்சேரியில் மீன்வள மேம்பாட்டு பணிக்கு ரூ.218 கோடி ஒதுக்கீடு

Updated : மே 10, 2022 | Added : மே 10, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுச்சேரி: 'புதுச்சேரியில் ரூ.218 கோடி அளவில் மீன்வள மேம்பாட்டு பணிகளுக்கு முதலீடு செய்யப்பட உள்ளது' என மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார்.மத்திய மீன்வளம், கால்நடை, மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் முருகன், பா.ஜ., அலுவலகத்தில் அளித்த பேட்டி:புதுச்சேரி மீன்வளத்துறை, கால்நடைத்துறை சார்பில் மேம்பாட்டு பணிகள், மீனவர்கள் மேம்பாடு குறித்தும், அதற்கான

புதுச்சேரி: 'புதுச்சேரியில் ரூ.218 கோடி அளவில் மீன்வள மேம்பாட்டு பணிகளுக்கு முதலீடு செய்யப்பட உள்ளது' என மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார்.

மத்திய மீன்வளம், கால்நடை, மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் முருகன், பா.ஜ., அலுவலகத்தில் அளித்த பேட்டி:
புதுச்சேரி மீன்வளத்துறை, கால்நடைத்துறை சார்பில் மேம்பாட்டு பணிகள், மீனவர்கள் மேம்பாடு குறித்தும், அதற்கான திட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாகவும் ஆய்வு செய்தேன்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2015-16ம் ஆண்டில் முதன் முறையாக நீலப்புரட்சி திட்டத்தை தொடங்கி, ரூ.5 ஆயிரம் கோடி அளவில் பணிகளை மேற்கொண்டது. அதில், புதுச்சேரிக்கு ரூ.40 கோடி வழங்கப்பட்டது. பிறகு அத்திட்டம், மீன்வள மேம்பாட்டு பணிகளாக மாற்றி செயல்படுத்தப்படுகிறது.latest tamil news
இந்த திட்டங்களின் கீழ் விரைவில் புதுச்சேரிக்கு ரூ.218 கோடி முதலீடு வருகிறது. அதில் ரூ.145 கோடியை மத்திய அரசு வழங்கும். மீன்வளத் துறை தொடர்பாக 2020-21ம் ஆண்டில் ரூ.50 கோடி செலவிடப்பட்டுள்ளது.புதுச்சேரி, காரைக்கால் துறைமுக மேம்பாடு பணி நடந்து வருகிறது. மேலும் பல திட்டங்களை செயல்படுத்த அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து முதல்கட்ட ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

சாகர்மித்ரா திட்டத்தில், மீனவ இளைஞர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த புதுச்சேரியில் 32 கிராமங்கள் தேர்வாகியுள்ளன.நான்கு சீர்மிகு கிராமங்களும் தேர்வாக உள்ளன. அந்த கிராமங்களில் தலா ரூ.5 கோடி செலவில் பள்ளி, கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
மீன்சார்ந்த இணைத்தொழில்கள் மேற்கொள்ள, அட்டவணை இனத்தவர்களுக்கு 60 சதவீதம் மானியத்தில் கடனுதவியும், பிறருக்கு 40 சதவீதம் மானியத்தில் கடனுதவியும் வழங்கப்படுகிறது.ஆழ்கடலில் மீன்பிடிப்பதை ஊக்குவிக்க ரூ.1.30 கோடி மதிப்புள்ள விசைப்படகுகள் வாங்கும் திட்டத்திற்கு மானியம் அளிக்க உள்ளோம்.
புதுச்சேரி, காரைக்காலில் தலா நான்கு இடங்கள் என மொத்தம் எட்டு இடங்களில் கடற்பாசி வளர்ப்பு சம்பந்தமான இடங்களை கண்டறிய உள்ளோம். இதன் மூலம் மீனவ பெண்களின் வாழ்வாதாரம் உயரும்.புதுச்சேரியில் இயற்கை காடுகள் வளர்ச்சி, சுற்றுலா மேம்பாடு திட்டங்களும் விரைந்து செயல்படுத்தப்படும்.


latest tamil news
மத்திய அரசு மீன்பிடி தடைகாலத்திற்கு தலா ரூ.4,500 வீதம் நிதி உதவி வழங்குகிறது. புதுச்சேரியில் 76 ஆயிரம் குடும்பங்களுக்கு இந்த உதவியை வழங்கி வருகிறோம்.54 ஆயிரம் மீனவர்களுக்கு காப்பீடு திட்டம் வழங்கப்பட்டுள்ளது. ரூ.15.63 கோடியில் மீன்பிடி துறைமுகம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரியின் மேம்பாட்டிற்கு மேம்பாலங்கள் அமைக்க ரூ.600 கோடி மத்திய போக்குவரத்து துறை வாயிலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலை மேம்பாட்டுக்கு ரூ.57 கோடி நபார்டு மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ காப்பீடு திட்டத்தில் 1 லட்சம் பேரை இணைத்துள்ளோம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1,830 கோடி ஒதுக்கி, பணிகள் நடந்து வருகிறது. ரூ.30 கோடியில் விளையாட்டு மைதானம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சிறந்த புதுச்சேரியை ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் பாடுபடுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ., மாநிலத் தலைவர் சாமிநாதன், அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், வெங்கடேசன், ராமலிங்கம், அசோக்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
10-மே-202209:50:59 IST Report Abuse
Sampath Kumar இது அநியாயம் அக்கிரமம் உங்க ஆட்சி உள்ள மாநிலத்தில் மட்டும் கவனம் செலுத்துவது நன்றாக இல்லை தமிழ் நாட்டில் தான் மீன் வளம் அதிகம் அதுக்கு ஆணையும் காணோம் கேட்ட திராவிட மாடல் அரசு அதுனால நாங்க புறக்கணிப்போம் என்பது சரில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X