இலங்கை பொருளாதார மீட்டெடுப்புக்கு இந்தியா ஆதரவளிக்கும்: வெளியுறவுத்துறை

Updated : மே 11, 2022 | Added : மே 10, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
புதுடில்லி: இலங்கையின் பொருளாதார மீட்டெடுப்புக்கு இந்தியா முழுமையாக ஆதரவளிக்கும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இலங்கை அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின் வெட்டு உள்ளிட்ட நெருக்கடிகளில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவி விலகக்
India, Fully Supportive, Sri Lanka, Democracy, Stability, Economic Recover, Bagchi, இந்தியா, இலங்கை, வெளியுறவுத்துறை, அமைச்சகம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: இலங்கையின் பொருளாதார மீட்டெடுப்புக்கு இந்தியா முழுமையாக ஆதரவளிக்கும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின் வெட்டு உள்ளிட்ட நெருக்கடிகளில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவி விலகக் கோரி, ஒரு மாதத்திற்கும் மேலாக மக்கள் நடத்திய போராட்டம் கலவரமாக வெடித்தது. இதில் 130 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனாலும், போராட்டக்காரர்கள் மகிந்த ராஜபக்சே மற்றும் அமைச்சர்களின் வீடுகளுக்கு தீவைத்தனர்.


latest tamil news


இலங்கையே போர்க்களமாக காட்சி அளித்துவரும் சூழலில், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியா தேவையான உதவிகளையும் செய்து வருகிறது. இந்த நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவின் அண்டை நாடான இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்டெடுப்புக்கு இந்தியா முழுமையாக ஆதரவளித்து வருகிறது.

இந்திய அரசு அண்டை நாடுகளின் கொள்கைகளுக்கு ஏற்ப இலங்கையில் உள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க இலங்கை அரசுக்கு இந்தாண்டு மட்டும் 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான உதவிகளை வழங்கியுள்ளது. இதுதவிர, உணவு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய பொருட்களையும் இலங்கையில் நிலவும் பற்றாக்குறையை தணிக்ககூடிய வகையில் இலங்கை அரசுக்கு இந்தியா வழங்கியுள்ளது.ஜனநாயக முறைப்படி இலங்கை மக்களுடைய நலன்களில் இந்தியா எப்போதும் கவனம் செலுத்தும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-மே-202221:02:27 IST Report Abuse
துஸ்மந்தா சிங்கா ராய் ,,,,,
Rate this:
Cancel
10-மே-202220:49:12 IST Report Abuse
ஆரூர் ரங் ஓட்டைப் பானையில் பால் ஊற்றி என்ன😇 பயன்?
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
10-மே-202218:39:46 IST Report Abuse
J. G. Muthuraj "இலங்கையின் பொருளாதார மீட்டெடுப்புக்கு இந்தியா முழுமையாக ஆதரவளிக்கும்".....இந்திய மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை ஒன்றிய அரசு செய்யமுடியவில்லை.....பொருளாதார சிக்கல் நீடிக்கிறது....வலுக்கிறது....இதில் இன்னொரு நாட்டின் பொருளாதார பிரச்சனையை எப்படி முழுமையாக சுமந்து தீர்த்துவைக்கப்போகிறீர்கள்?....இது தேவையில்லாத COMMITMENT.....அடுத்து பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் லைனில் நிக்குது.... அப்ப என்ன செய்வீர்கள்?....
Rate this:
sivan - seyyur,இந்தியா
10-மே-202220:51:04 IST Report Abuse
sivan இந்தியாவை சுற்றி என்ன நடக்கிறது என்று திராவிடர்களுக்கு புரியாது. அவர்களுக்கு தெரிந்தது இந்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவதன் மூலமாக .. இந்தியாவை சிறுமை படுத்துகிறோம் என்பது மட்டுமே.. அதனால்.. நீங்கள் இந்தியரசை ஒன்றிய அரசு என்று சொல்வதுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். உலக அரசியல் சூழல் என்ன எப்போது என்னமாதிரியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது நமது மத்திய அரசுக்கு தெரியும் . உங்களுக்கு ( திராவிடர்களுக்கு) புரியாத விஷயங்களில் பாவம் மூக்கை நுழைத்து சிரம பட வேண்டாம்...
Rate this:
Jaishankar C - Chennai,இந்தியா
11-மே-202215:49:39 IST Report Abuse
Jaishankar Cஇந்தியா அரசு கொடுப்பது union பட்ஜெட் தான். union என்றால் மத்திய என்று வராதே ? ஒன்றிய என்பது ஒத்துபோகுதே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X