சீன அதிபர் ஜிங்பிங்கிற்கு மூளையில் பாதிப்பு!

Updated : மே 11, 2022 | Added : மே 11, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
பீஜிங்: நம் அண்டை நாடான சீனாவின் அதிபர் ஷீ ஜிங்பிங்குக்கு, சிறுமூளையில் உள்ள ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.சீன அதிபர் ஷீ ஜிங்பிங்,68, கொரோனா வைரஸ் பரவத் துவங்கியதில் இருந்து எந்த வெளிநாடுகளுக்கும் பயணம் செல்லவில்லை. இந்தாண்டு துவக்கத்தில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரை, அவர் பொது நிகழ்ச்சிகளில்
சீன அதிபர், மூளை பாதிப்பு

பீஜிங்: நம் அண்டை நாடான சீனாவின் அதிபர் ஷீ ஜிங்பிங்குக்கு, சிறுமூளையில் உள்ள ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சீன அதிபர் ஷீ ஜிங்பிங்,68, கொரோனா வைரஸ் பரவத் துவங்கியதில் இருந்து எந்த வெளிநாடுகளுக்கும் பயணம் செல்லவில்லை. இந்தாண்டு துவக்கத்தில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரை, அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் தவிர்த்து வந்தார். இதையடுத்து அவருடைய உடல்நிலை குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகின.


latest tamil news



இந்தாண்டு இறுதியில், மூன்றாவது முறையாக சீன அதிபராக தேர்ந்தெடுப்பதற்கான அரசியல் முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், கடந்தாண்டு இறுதியில் அவருடைய சிறுமூளையில் உள்ள ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளன.

இதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல், சீன மருத்துவ முறைகளின்படி அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C G MAGESH - CHENNAI,இந்தியா
16-மே-202215:26:24 IST Report Abuse
C G MAGESH இங்க "சீன அதிபர் மருத்துவ நிதி" என்று கம்யூனிஸ்ட்கள் உண்டியல் குலுக்க போறாங்க
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
11-மே-202216:52:00 IST Report Abuse
r.sundaram கடவுள் இருக்கான் குமாரு.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
11-மே-202209:36:58 IST Report Abuse
Lion Drsekar "சீன அதிபர் ஷீ ஜிங்பிங், 68, கொரோனா வைரஸ் பரவத் துவங்கியதில் இருந்து எந்த வெளிநாடுகளுக்கும் பயணம் செல்லவில்லை.' பயணம் செய்வதன் நோக்கமே பொருளாதார வளர்ச்சி, தொழில் மேன்மை, சகோரத்துவம், இம்மூன்றுமே இல்லாமல் ஆக்கிரமிப்பு, சண்டை, வீண்வம்பு இப்படி செயல்படுவதற்கு பதில் ஓய்வே சிறந்தது. எல்லாவற்றிற்கும் மேலே இறைவன் ஒருவன் இருக்கிறான், இவர் சீக்கிறம் குணடமந்து அண்டைநாடுகளுடன் நாட்டுப்புறவுடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருளவேண்டும், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X