வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'இசையமைப்பாளர் இளையராஜா பற்றி அவதுாறாக பேசிய, காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அறிக்கை அளிக்க வேண்டும்' என, தேசிய எஸ்.சி., - எஸ்.டி., கமிஷன் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சமீபத்தில், ஈரோட்டில் நடந்த கூட்டத்தில், காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன், இசைமைப்பாளர் இளையராஜாவின் ஜாதி குறித்து பேசினார். அதற்கான, 'வீடியோ' சமூகவலைதளத்தில் பரவியது. ஏர்போர்ட் மூர்த்தி என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் டில்லியில் உள்ள, தேசிய எஸ்.சி., - எஸ்.டி., கமிஷனிலும் புகார் அளித்தார்.

'இளங்கோவன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தர வேண்டும்' என, சென்னை போலீஸ் கமிஷனருக்கு, கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் கலெக்டருக்கு மீண்டும் ஒரு நோட்டீசை, அக்கமிஷன் அனுப்பி உள்ளது.
அந்த நோட்டீசில், 'புகார்தாரர், குற்றம் செய்த நபர், அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விபரம், கைது நடவடிக்கை இருந்தால் அதன் விபரம், பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு தொகை வழங்கிய விபரம் ஆகியவை குறித்து, இந்த நோட்டீஸ் கண்ட, 15 நாட்களுக்குள் விளக்கம் அனுப்ப வேண்டும்' என, கூறப்பட்டுஉள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE