அதிகளவில் புகார்கள்.. கால் டாக்சி நிறுவனங்களுக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை

Updated : மே 11, 2022 | Added : மே 11, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி: 'ஓலா, ஊபர்' போன்ற வாடகை கார் சேவை நிறுவனங்கள் மீது, நுகர்வோர் தரப்பிலிருந்து புகார்கள் அதிகளவில் வருவதை அடுத்து, மத்திய அரசு அந்நிறுவனங்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.இது குறித்து, நுகர்வோர் விவகாரத் துறை செயலாளர் ரோஹித் குமார் சிங் கூறியுள்ளதாவது: வாடகை கார்களுக்கான தளங்கள், நியாயமற்ற வர்த்தகத்தில் ஈடுபடுவதாக புகார்கள் அதிகரித்து
ola, uber, warning, Govt

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: 'ஓலா, ஊபர்' போன்ற வாடகை கார் சேவை நிறுவனங்கள் மீது, நுகர்வோர் தரப்பிலிருந்து புகார்கள் அதிகளவில் வருவதை அடுத்து, மத்திய அரசு அந்நிறுவனங்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இது குறித்து, நுகர்வோர் விவகாரத் துறை செயலாளர் ரோஹித் குமார் சிங் கூறியுள்ளதாவது: வாடகை கார்களுக்கான தளங்கள், நியாயமற்ற வர்த்தகத்தில் ஈடுபடுவதாக புகார்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, சவாரி ரத்து செய்வது குறித்த புகார்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து, இத்துறை சார்ந்த நிறுவனங்களுடன் பேச்சு நடைபெற்றது.


latest tamil news


இதில் 'ஓலா, ஊபர், மேரு, ரேப்பிடோ' உள்ளிட்ட பல நிறுவனங்கள் கலந்துகொண்டன. சந்திப்பின் போது, புகார்கள் மற்றும் அவை சம்பந்தமான புள்ளிவிபரங்கள் நிறுவனங்களிடம் வழங்கப்பட்டன.

இக்குறைகளை களைவதற்கான முயற்சிகளை எடுக்காவிட்டால், மிகக் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகளில் அரசு சிறிதளவுகூட சமரசம் செய்துகொள்ளாது என்றும் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-மே-202209:41:37 IST Report Abuse
அப்புசாமி தனியாருங்க ரொம்ப நல்லவங்க. அவுங்க கிட்டே பிசினஸைக் குடுத்தா நாடு ஓஹோ ஓஹோன்னு முன்னேறும்னு அள்ளி உடறவங்களுக்கு ஆப்பு காத்துக்கிட்டிருக்கு. அமெரிக்காவில் ஜனாதிபதி வேட்பாளரிலிருந்து தேர்தல் வெற்றி வரை தனியார்களால் தான் நிச்சயிக்கப் படுகின்றன. அதே போல் இந்தியாவும் மாறாமல் இருக்கணும் என்பதே நம்ம கவலை.
Rate this:
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
11-மே-202214:31:47 IST Report Abuse
வாய்மையே வெல்லும்அப்போ அரசு உத்தியோகத்தில் இருப்பவர் பரம சுத்தம் பேர்வழி லஞ்சம் என்றால் என்னவென்றே தெரியாது என்கிறார் அப்புகுட்டிசாமி அவர்கள் ... போவியா... அங்க மட்டும் என்ன வாழுதாம் ??...
Rate this:
Cancel
Ravi - Hyderabad,இந்தியா
11-மே-202209:03:19 IST Report Abuse
Ravi காரணம் டிஜிட்டல் பய்மேன்ட். ஓலா உபேர் டிரைவர் கேஷ் பய்மேன்ட் மட்டும் கேட்கிறார்கள். கான்செல் செய்து விட்டு கேஷ் பய்மேன்ட் வாங்கி கொண்டு உங்களை ட்ரோப் செய்கிறார்கள். இது ஓலா உபேர் கொம்பனிகல்லு தெரியுமா. அவர்களுக்கு இது நஷ்டம் தான்.
Rate this:
Suppan - Mumbai,இந்தியா
11-மே-202213:09:05 IST Report Abuse
Suppanசில நாட்களுக்கு முன் சென்னையில் ஓலா டாக்சியைக் கூப்பிட்டிருந்தேன். போஸ்ட் பெய்ட் என்றதும் வண்டியை நிறுத்தி கான்செல் செய்யச் சொன்னார். மூன்று நாட்களுக்குப் பிறகுதான் பணம் வருகிறது, 30% ஓலாவுக்குப் போகிறது என்றார். அந்தப் பணத்தைக் கொடுங்கள் டிராப் செய்கிறேன் என்றார். இது எவ்வளவு தூரம் நிஜம்?...
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
11-மே-202208:26:46 IST Report Abuse
Natarajan Ramanathan ஊபர் சேவை மிகவும் மோசம். அதேபோல் ஆன்லைன் பேமெண்ட் என்றால் ஆட்டோ ஓட்டுனர்கள் சவாரியை மறுக்கின்றனர். பெங்களூரில் எந்த ஆட்டோ ஓட்டுனருமே தகராறு செய்யாமல் மீட்டர் போட்டுதான் ஓட்டுகிறார்கள். கிலோமீட்டருக்கு ₹15/- மட்டுமே. மேலும் ஆன்லைன் பேமெண்ட்.... இத்தனைக்கும் பெங்களூரில் பெட்ரோல் சென்னையைவிட ஒரு ரூபாய் அதிகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X