ரூ.600 கோடி ஜி.எஸ்.டி., வசூல்... வளர்ச்சிப் பாதையில் புதுச்சேரி: கவர்னர் தமிழிசை பெருமிதம்

Updated : மே 11, 2022 | Added : மே 11, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுச்சேரி: புதுச்சேரி வரலாற்றில் முதல் முறையாக இந்த ஆண்டு ஜி.எஸ்.டி., ரூ. 600 கோடி வசூல் செய்யப் பட்டுள்ளது என கவர்னர் தமிழிசை கூறினார்.இந்திய சுதந்திரத்தின் 75ம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, சரக்கு - சேவை மற்றும் மத்திய கலால் வரி ஆணைய அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்ற சைக்கிள் ஊர்வலம், புதுச்சேரி கடற்கரை சாலையில் நேற்று நடந்தது.ஜி.எஸ்.டி., ஆணையர் பத்மஸ்ரீ, இணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுச்சேரி: புதுச்சேரி வரலாற்றில் முதல் முறையாக இந்த ஆண்டு ஜி.எஸ்.டி., ரூ. 600 கோடி வசூல் செய்யப் பட்டுள்ளது என கவர்னர் தமிழிசை கூறினார்.



latest tamil news



இந்திய சுதந்திரத்தின் 75ம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, சரக்கு - சேவை மற்றும் மத்திய கலால் வரி ஆணைய அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்ற சைக்கிள் ஊர்வலம், புதுச்சேரி கடற்கரை சாலையில் நேற்று நடந்தது.ஜி.எஸ்.டி., ஆணையர் பத்மஸ்ரீ, இணை ஆணையர் சதீஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்ற ஊர்வலத்தை கவர்னர் தமிழிசை கொடியசைத்து துவக்கி வைத்தார்.பின்னர் கவர்னர் தமிழிசை கூறியதாவது:

புதுச்சேரி மாநிலம் தற்போது வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஜி.எஸ்.டி., வரி எந்த அளவிற்கு வசூலிக்கப்படுகிறது; அது மக்களுக்கு எந்த அளவுக்கு பயனளிக்கிறது என்பதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த ஊர்வலம் நடைபெறுகிறது. மேலும், வரி செலுத்துவது அரசுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் பல நல்ல திட்டங்கள் கிடைக்கும் என்ற எண்ணத்தை ஊக்கப்படுத்தும்.


latest tamil news



தற்போது 8,000 பேர் வரி செலுத்துகின்றனர். அது மேலும் அதிகரிக்கும்.புதுச்சேரி வரலாற்றில் முதல் முறையாக இந்த ஆண்டு ஜி.எஸ்.டி., ரூ. 600 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. அரசு பல நல்ல திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதாலும், மக்கள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு இந்த வளர்ச்சி கிடைத்து உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sethusubramaniam - chennai,இந்தியா
11-மே-202214:47:55 IST Report Abuse
sethusubramaniam உங்க புதுச்சேரி மாநிலத்துக்காவது ஒன்றிய அரசு ஒழுங்கா பங்கு பணம் தர்றாங்களாம்மா
Rate this:
Cancel
maharaja - திருநெல்வேலி,இந்தியா
11-மே-202211:18:06 IST Report Abuse
maharaja மக்கள் பண்ணத்தை பரித்து பாணிகளுக்கும் பணியாகளுக்கும் கடன் தள்ளுபடி செய்வது சாதனையாம். நடக்கட்டும். நமக்கு முன்னோடி இலங்கை இருக்கிறது கொஞ்சம் கூட சிந்திக்க மாட்டீர்களா?
Rate this:
Cancel
PKN - Chennai,இந்தியா
11-மே-202209:45:41 IST Report Abuse
PKN பொருட்களின் விலையை ஏற்றி மறைமுக வரி வசூல் அதிகமானா? வளர்ச்சியா? நேர்முக வரியை வைத்துதான் பார்க்கனும் வளர்ச்சியா இல்லையான்னு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X