சென்னை - சேலம் புதிய பசுமை வழிச்சாலை: மத்திய அரசு பச்சைக்கொடி; 2025க்குள் முடிக்க திட்டம்

Updated : மே 11, 2022 | Added : மே 11, 2022 | கருத்துகள் (25) | |
Advertisement
சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு மத்திய அரசு பச்சைக்கொடி காட்டியதோடு, இத்திட்டத்தை 2025க்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, இறுதிக்கட்ட திட்ட மதிப்பீடு தயாரித்தல், தடத்தில் சில மாற்றம் செய்து, இம்மாதத்தில் முழு வடிவம் பெறும் என, அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.மத்திய அரசின், 'பாரத் மாலா பிரயோஜனா' திட்டத்தில், சென்னை, கொச்சி துறைமுகங்களை இணைக்கும்
சென்னை, சேலம்,  பசுமை வழிச்சாலை, மத்திய அரசு, பச்சைக்கொடி,

சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு மத்திய அரசு பச்சைக்கொடி காட்டியதோடு, இத்திட்டத்தை 2025க்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, இறுதிக்கட்ட திட்ட மதிப்பீடு தயாரித்தல், தடத்தில் சில மாற்றம் செய்து, இம்மாதத்தில் முழு வடிவம் பெறும் என, அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.

மத்திய அரசின், 'பாரத் மாலா பிரயோஜனா' திட்டத்தில், சென்னை, கொச்சி துறைமுகங்களை இணைக்கும் வகையில், எட்டு வழிச்சாலை திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. அதில், முதல்கட்டமாக சென்னை, தாம்பரம் அருகே படப்பையில் துவங்கி சேலம் வரையிலான, 276.5 கி.மீ., துாரத்துக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து, 2018 பிப்., 25ல் சட்டசபையில், அப்போதைய முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இச்சாலை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59 கி.மீ., துாரம், திருவண்ணாமலை 123; கிருஷ்ணகிரி, 2; தர்மபுரி, 56; சேலம் மாவட்டத்தில் 36 கி.மீ., துாரமும் அமையும் வகையில் திட்டமிடப்பட்டது. இத்திட்டம் 1,900 ஹெக்டேர் நிலத்தில் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. திட்டம் அறிவிக்கப்பட்டதும், சேலம் உட்பட ஐந்து மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


வழக்கு


கடந்த 2018 மே மாதம் நில அளவீடு பணி துவங்கிய நிலையில், விவசாயிகளின் எதிர்ப்பு தீவிரமானது. அவர்களுக்கு ஆதரவாக பா.ம.க., - கம்யூ., ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சி களும், சில சினிமாக்காரர்களும் போராட்டத்தில் இறங்கினர். அப்போது, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், விவசாயிகள் பாதிக்கப்படாமல் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி நழுவியது. இத்திட்டத்தை நிறைவேற்ற, மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டின. பா.ம.க., சார்பிலும், விவசாயிகள், விவசாயிகள் போர்வையிலான அரசியல் கட்சியினர் பலர், உயர்நீதிமன்றத்தில் திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர்.


latest tamil news


விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 2019 ஏப்., 8ல், தமிழக அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்தும், திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை, எட்டு வார காலத்தில் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், 2019 மே 27ல் மேல்முறையீடு செய்தது. அத்துடன் எட்டு வழிச்சாலை திட்டம் என்பதை, மத்திய அரசு பசுமை வழிச்சாலை திட்டம் என்றும், 'பாரத் மாலா பிரயோஜனா' திட்டம் என்பதை, 'சாகர் மாலா திட்டம்' என்றும் மாற்றம் செய்தது.

அதாவது சுற்றுச்சூழலுக்கோ, விவசாயிகளுக்கோ பாதிப்பின்றி திட்டத்தை நிறைவேற்றுவதாக, உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசு, எதிர்ப்பாளர்களின் மேல்முறையீட்டு மனுக்களை, 2020 டிச., 8ல் விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி கான்வில்கர் அமர்வு, எட்டு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரியும், திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரியும், சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்தில் நிலம் வைத்துள்ள, ஈரோடைச் சேர்ந்த யுவராஜ், 2021 ஜன., 7ம் தேதி, மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.


பச்சைக் கொடி


கடந்த ஜன., 27ல், மனுவை விசாரித்த நீதிபதிகள் கன்வில்கர், கவாய், கிருஷ்ணமுராரி அடங்கிய அமர்வு, மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்து, பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு பச்சைக் கொடி காட்டியது. தொடர்ந்து, லோக்சபாவில் மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை, 2025க்குள் திட்டம் முழுமை பெறும் என, அறிவித்தது. இதனால் தமிழக அரசும் வேறு வழியின்றி இத்திட்டத்துக்கு 'மவுனமே சம்மதம்' என்பது போல், 'சமிக்ஞை' கொடுத்தது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, 10 மாதங்களுக்கு மேலாக மவுன நிலையில் இருந்த நெடுஞ்சாலை, வருவாய்த்துறை அதிகாரிகள், தற்போது இத்திட்டத்துக்கு ஆதரவு அளிக்க துவங்கி விட்டனர். திட்டப்பணி, நான்கு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட நிலையில், எதிர்ப்பால் முடங்கியதால், திட்ட மதிப்பீட்டை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.


latest tamil news




என்னென்ன மாற்றங்கள்?


எட்டு வழிச்சாலை பழைய திட்ட மதிப்பீடான, 10 ஆயிரம் கோடி ரூபாய் தற்போது 12 ஆயிரம் முதல் 14 ஆயிரம் கோடி ரூபாயாக உயர உள்ளது. மேலும், செலவை அதிகரிக்காமல் இருக்க, சுற்று வட்ட சாலை குறைப்பு, விவசாய நில பாதிப்பை தவிர்ப்பது, வனப்பகுதியை ஒட்டிய பகுதி, அரசுக்கு சொந்தமான நிலம் வழியாக திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். அதற்கான சாத்தியக்கூறு குறித்து, கள ஆய்வு பணி நடந்து வருகிறது.

மேலும், எட்டு வழிச் சாலை சென்னையில் துவங்கி சேலத்தில் முடியும்படி போடப்பட்ட திட்ட வடிவமைப்பில், சில மாற்றம் செய்ய, உயர் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2 கி.மீ., முழுமையாக நீக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில், 56 கி.மீ., என்பதை, 20 கி.மீ., என குறைத்தும், சேலம் மாவட்டம் 36 கி.மீ., என்பதை, 50 கி.மீ., துாரத்துக்கு மேல் நீட்டித்தும் திட்டம் மாற்றப்பட உள்ளது.

அத்துடன், சென்னையில் துவங்கும் சாலை சேலத்தில், சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலை, அரியானுாரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லுாரி முன் இணையும்படி முதலில் திட்டம் தயாரிக்கப்பட்டது. தற்போது அதில் மாற்றம் செய்து, அதே தேசிய நெடுஞ்சாலையில், மகுடஞ்சாவடி அடுத்த வைகுந்தத்தில் இணையும்படி திட்ட வரைபடம் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பணியில், மத்திய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இம்மாதத்தில், எட்டு வழிச்சாலை திட்டம் முழு வடிவம் பெறும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
11-மே-202215:43:01 IST Report Abuse
duruvasar இப்போ அந்த சினிமா துறை போராளிகள் எதை உணவாக திங்கபோகிறார்கள் என பார்க்கவேண்டும். எதிர்ப்பு தெரிவித்த அத்தனை வெட்கம் மானம் கெட்ட கும்பல் ஆப்ரிக்காவுக்கு ஓடிடுவானுங்கன்னு நினைக்கிறேன்.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
11-மே-202214:06:36 IST Report Abuse
சீனி 14,000ம் கோடிக்கு கமிசன் 20%ந்னா எவ்ளோன்னு சரியா பார்க்க பெரிய கால்குலேட்டர் ஆர்டர் பண்ணியிருக்காங்களாம்.... ஹாஹாஹா....
Rate this:
Cancel
தமிழன் - madurai,இந்தியா
11-மே-202213:52:30 IST Report Abuse
தமிழன் புரோட்டா போராளீஸ், மற்றும் அன்று தீர்ப்பு சொன்ன நீதிபதி ஐயாக்களின் புண்ணியத்தில், இப்போ இந்த புராஜக்டுல 40% விலை அதிகமா போட்றது தான் மிச்சம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X