கபாலீஸ்வரர் கோவிலில் களைகட்டிய ‛ கதக் நடனம்.| Dinamalar

கபாலீஸ்வரர் கோவிலில் களைகட்டிய ‛ கதக்' நடனம்.

Updated : மே 11, 2022 | Added : மே 11, 2022 | |
கதக் என்பது வடமாநிலங்களில் உள்ள பாராம்பரிய நடன வடிவங்களில் ஒன்றாகும்.கதக் என்னும் பெயர் சமஸ்கிருத வார்த்தையான கதாவிலிருநு உருவானது. இதற்கு கதை என்று பொருள்.கதக் நடனத்தின் கதை கிமு மூன்றாவது நுாற்றாண்டிலேயே தொடங்குகிறது, பின்னாளில் முகாலயர்களின் இறக்குமதியையும் உள்வாங்கிக் கொண்டது.கதைச் சொல்வதையே தங்கள் வாழ்க்கைத் தொழிலாகக் கொண்ட ‛கதகாஸ்' என்றுlatest tamil news


கதக் என்பது வடமாநிலங்களில் உள்ள பாராம்பரிய நடன வடிவங்களில் ஒன்றாகும்.கதக் என்னும் பெயர் சமஸ்கிருத வார்த்தையான கதாவிலிருநு உருவானது. இதற்கு கதை என்று பொருள்.
கதக் நடனத்தின் கதை கிமு மூன்றாவது நுாற்றாண்டிலேயே தொடங்குகிறது, பின்னாளில் முகாலயர்களின் இறக்குமதியையும் உள்வாங்கிக் கொண்டது.


latest tamil news


கதைச் சொல்வதையே தங்கள் வாழ்க்கைத் தொழிலாகக் கொண்ட ‛கதகாஸ்' என்று அழைக்கப்பட்டவர்கள் இதிகாசங்கள் மற்றும் புராணங்களிலிருந்த கதைகளை நடனவடிவில் மாற்றிக் கொடுத்தனர்.கதைகளுக்கு உயிரூட்டுவதற்கு, இசைக் கருவிகள் மற்றும் வாய்ப்பாட்டு இசையும் சேர்ந்து கொள்ள ‛கதக்' மெலும் மேலும் மெருகேறியது.இன்றைய ‛கதக்' நடன வடிவம் தவறாது கோவில் மற்றும் கலாச்சார மேடைகளில் இடம்பெறுகிறது.


latest tamil news


ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் பனாரஸ் அரசவைகளில் இடம் பெற்ற கதக் நடனங்கள் இன்று நாடு முழுவதும் ஆடப்படுகிறது.சென்னையில் இந்த ‛கதக்' நடனத்தை சொல்லிக்கொடுப்பதற்காகவே தேவநியா கதக் பள்ளி இயங்கிவருகிறது.
சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் நடந்து வந்த வசந்த உற்சவ விழாவின் நிறைவு நாளான்று இந்தப் பள்ளி மாணவயரின் ‛கதக்' நடனம் இடம் பெற்றிருந்து.சரஸ்வதி கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளை சார்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.


latest tamil news


பெரும்பாலும் பரத நாட்டியமே பார்த்து வந்த பார்வையாளர்களுக்கு இந்த கதக் நடனம் புதிய உற்சாகத்தை தந்தது.வடமாநில பாணியிலான உடை அணிந்து மெதுவாக கால்களால் தாளமிட ஆரம்பித்து பின் துணிகள் பறக்க வேகமெடுத்து அவர்கள் சுழன்று சுழன்று ஆடியதையும்,தோள்களையும் கால் பாதங்களையும் மட்டும் மின்னல் வேகத்தில் அசைத்ததையும், பல்வேறு பாவங்களை கண்களிலும் முகத்திலும் கொண்டுவந்து காட்டியதையும் பார்வையாளர்கள் பெரிதும் பாராட்டி மகிழ்ந்தன்ர.சென்னையின் சூழலுக்கு ஏற்ப இயற்கையை வர்ணித்தும் பாரதியின் பாடல்களுக்கும் இவர்கள் ஆடிய நடனம் அற்புதமாக இருந்தது.மீண்டும் மீண்டும் பார்க்க துாண்டியது.
-எல்.முருகராஜ்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X