தி கிரேட் சோழாஸ் -புகைப்பட கண்காட்சி

Updated : மே 11, 2022 | Added : மே 11, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சோழ மரபினர் சூரிய குலத்தினர் என்பது சங்கத்துச் சான்றோர் கருத்தாகும். செப்பேடுகளும், கல்வெட்டுக்களும் இதையே அறிவிக்கின்றன. இவர்களுடைய கொடியும் இலச்சினையும் புலியுருவம் பொறிக்கப் பெற்றவையாகும். ஆத்தி மாலை சோழ குலத்தின் அடையாள மாலை என்று தொல்காப்பியம் கூறுகிறது. சோழ அரசர்கள் வீற்றிருந்து செங்கோல் செலுத்திய பேருபெற்ற திருவுடைய நகரங்கள் உறையூர்,latest tamil newsசோழ மரபினர் சூரிய குலத்தினர் என்பது சங்கத்துச் சான்றோர் கருத்தாகும். செப்பேடுகளும், கல்வெட்டுக்களும் இதையே அறிவிக்கின்றன. இவர்களுடைய கொடியும் இலச்சினையும் புலியுருவம் பொறிக்கப் பெற்றவையாகும். ஆத்தி மாலை சோழ குலத்தின் அடையாள மாலை என்று தொல்காப்பியம் கூறுகிறது. சோழ அரசர்கள் வீற்றிருந்து செங்கோல் செலுத்திய பேருபெற்ற திருவுடைய நகரங்கள் உறையூர், காவிரிப்பூம்பட்டினம், தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம், பழையறை நகர் என்பன. இவற்றுள் உறையூரும், காவிரிப்பூம்பட்டினமும் சங்ககாலச் சோழருக்கும், தஞ்சாவூரும், கங்கைகொண்ட சோழபுரமும் பிற்காலச் சோழருக்கும் தலைநகரங்களாக விளங்கியவை. பழையறை நகர் சோழ அரசர்கள் பல்லவ அரசர்களுக்கு சிற்றரசராயிருந்த காலப்பகுதியில் வாழ்ந்த இடமாகும்.


latest tamil news


கட்டிடக்கலையில் சிறந்து விளங்கிய சோழர்கள் கட்டிய கட்டிடங்களும்,கோயில்களும்,அரண்மனைகளும்தான் இன்று சோழர்களின் பெருமையை பறைசாற்றிக் கொண்டு இருக்கிறது.
சோழர்களின் இந்தப் பெருமைகளை உலகிற்கு பறைசாற்றும் வகையில் தஞ்சாவூரைச் சார்ந்த மணிவண்ணன் என்ற பயண ஒளிப்படக்கலைஞர் சோழர்கள் கட்டிய பராம்பரிய கட்டிடங்களை அதீத அழகுணர்வுடன் படமாக்கி சென்னை தட்சின்சித்ராவில் புகைப்பட கண்காட்சியாக வைத்துள்ளார்.


latest tamil news


மணிவண்ணன் பல்வேறு மாநில கலாச்சாரங்களை படமாக்குவதில் வல்லவர் இதற்காக பல இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவர்.அவருடைய படங்கள் நமது கலாச்சாரத்தை முழுமையாக அடையாளப்படுத்துவதாகும்.இப்போது வைத்துள்ள ‛தி கிரேட் சோழாஸ்' புகைப்பட கண்காட்சியும் அப்படித்தான். கண்காட்சியை இளம்பகவத் ஐ.ஏ.எஸ் தொடங்கிவைத்தார். வரும் 20ம் தேதி வரை நடக்கவுள்ளது.


latest tamil news


. தஞ்சாவூரின் அடையாளமாகத் திகழும் பெரிய கோவிலின் அழகையும், அதன் கோபுரத்தின் கம்பீரத்தையும் மணிவண்ணன் பல கோணங்களில் காட்சிப்படுத்தி இருக்கிறார்,பார்த்தால் மகிழ்வீர்கள்.மேலும் தகவலுக்கு மணிவண்ணனை தொடர்பு கொள்ளவும் எண்:90435 62566.
-எல்.முருகராஜ்Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
12-மே-202217:14:26 IST Report Abuse
ponssasi நான் தஞ்சை பெரிய கோவிலின் அழகையும் கம்பீரத்தையும் கண்டு பலமுறை வியந்திருக்கிறேன். ஆனால் இந்த புகைப்படத்தில் உள்ள அழகு எதனுடனும் ஒப்டிடமுடியாதவை. மணிவண்ணனுக்கு பாராட்டுக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X