தரமற்ற உணவுகள் விற்பனை: உறுதி செய்வதில் தாமதம் ஏன்?

Updated : மே 12, 2022 | Added : மே 12, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் 'ஷவர்மா' உள்ளிட்ட உணவு மாதிரிகளை சேகரித்து, உடனடியாக பரிசோதிக்க, உரிய கட்டமைப்பு இல்லாததால், நடவடிக்கை எடுப்பதில், தமிழக உணவு பாதுகாப்பு துறை தடுமாறி வருகிறது.கேரளாவில், 16 வயது சிறுமி, ஷவர்மா உணவு சாப்பிட்டு, அதிலிருந்த, 'ஷிகெல்லா' எனும் 'பாக்டீரியா' தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். இது அதிவலையை ஏற்படுத்திய நிலையில், தஞ்சாவூர் மாவட்டம்,
Shawarma, Shawarma Horror, Avoid Shawarma

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தமிழகத்தில் 'ஷவர்மா' உள்ளிட்ட உணவு மாதிரிகளை சேகரித்து, உடனடியாக பரிசோதிக்க, உரிய கட்டமைப்பு இல்லாததால், நடவடிக்கை எடுப்பதில், தமிழக உணவு பாதுகாப்பு துறை தடுமாறி வருகிறது.

கேரளாவில், 16 வயது சிறுமி, ஷவர்மா உணவு சாப்பிட்டு, அதிலிருந்த, 'ஷிகெல்லா' எனும் 'பாக்டீரியா' தொற்று பாதிப்பால் உயிரிழந்தார். இது அதிவலையை ஏற்படுத்திய நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியில், ஷவர்மா சாப்பிட்ட மூன்று மாணவர்களுக்கு, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டன.

புதுக்கோட்டையில் பிரியாணி சாப்பிட்ட 41 பேருக்கு உடல் நல பாதிப்பு, திருவண்ணமலையில் 'புரூட் மிக்சர்' சாப்பிட்ட, 18 பேருக்கு பாதிப்பு என, தரமற்ற உணவு விற்பனை பற்றிய புகார்கள் எழுந்து வருகின்றன.இதனால், தமிழகம் முழுதும், ஷவர்மா விற்பனை செய்யும் கடைகள், அசைவ உணவகங்களில், உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

சென்னையில், தெருவுக்கு நான்கைந்து என, ஆயிரக்கணக்கில் 'ஷவர்மா' உணவகங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான உணவகங்கள், சென்னை மாநகராட்சியின் தொழில் உரிமம் மற்றும் உணவு பாதுகாப்பு துறையின் உணவு தரச் சான்றிதழ் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் 25 மாதிரிகள், தமிழகம் முழுதும் 2,000 மாதிரிகளை, உணவு பாதுகாப்பு துறையினர் பரிசோதனைக்கு எடுத்துள்ளனர். இந்த மாதிரிகள் பரிசோதிக்க, சென்னை, தஞ்சாவூர், மதுரை, கோவை, திருநெல்வேலி, சேலம் ஆகிய ஆறு மாவட்டங்களில் மட்டுமே, மாநில அரசு ஆய்வகங்கள் உள்ளன. இவற்றிலும், உணவு தரத்தை விரைந்து பரிசோதிக்கும் முறை இல்லை.

மேலும், பரிசோதனைக்கான போதிய கட்டமைப்பும், ஆய்வக பணியாளர்களும் இல்லை. இதனால், ஒவ்வொரு பரிசோதனை முடிவுகளும் வெளிவர, ஒரு மாதம் வரை ஆவதால், சம்பந்தப்பட்ட கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடிவதில்லை.


latest tamil newsஇதுகுறித்து, நுகர்வோர் ஆர்வலர் சோமசுந்தரம் கூறியதாவது: தமிழகத்தில், 360க்கும் மேற்பட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உள்ளனர். அதை விட குறைந்த அளவில் உள்ள கோவா, கேரளாவில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தமிழகத்தில் அப்படியான நடவடிக்கை இல்லை. மேலும், சமைத்த உணவு தரமானதாக இருக்கிறதா என்பதை அன்றே பரிசோதித்தால் மட்டுமே, உணவின் உறுதி தன்மை தெரியும். ஆனால், பரிசோதனை ஆய்வகங்களில் போதிய கட்டமைப்பு இல்லாததால், முடிவுகள் வர, ஒரு மாதம் வரை ஆகிறது .மேலும், மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வு மையங்கள், தமிழகத்தில் இல்லை.

மேலும், தரமற்ற உணவு கடைகளுக்கு 'நோட்டீஸ்' மட்டுமே வழங்கப்படுகிறது. அதனால், எந்த பயனும் இல்லை.தரமற்ற உணவு தயாரிக்கும் எந்த கடைகள் மீதும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. உயிரிழப்பு ஏற்பட்டால் மட்டுமே 'சீல்' வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் காசிமயன் கூறியதாவது: உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள், சுழற்சி முறையில் சோதனை செய்ய வேண்டும். அதற்கு மாறாக, புகாரின் அடிப்படையில் மட்டுமே, கண்துடைப்புக்காக ஆய்வு நடத்தப்பட்டு, மாதிரிகள் சோதனை செய்யப்படுகின்றன.அந்த மாதிரிகளின் தரம் குறித்த வெளிப்படை தன்மையும் இல்லை. அதுகுறித்து இணையதளத்திலும் வெளியீடுவதில்லை; புகார்தாரர்களுக்கும் தெரியப்படுத்துவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் 2,000க்கும் மேற்பட்ட ஷவர்மா கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு, மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளன.பொது மக்கள், 94440 42322 என்ற, உணவு பாதுகாப்பு துறையின் 'வாட்ஸ் ஆப்' எண்ணுக்கு புகார் அளித்தால், 48 மணி நேரத்தில் சோதனை நடத்தப்படும். பரிசோதனைக்கு எடுக்கப்படும் மாதிரிகளின் முடிவுகள், 14 நாட்களுக்குள் ஆய்வகங்களில் இருந்து பெறப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
12-மே-202212:25:49 IST Report Abuse
Sivagiri எங்கேயோ பாட்டி வடை சுட்டால், தோசை சுட்டால், கம்பங்கூழ் காச்சினால், படை பலத்தோட, ஜீப்ல, போயி தெளிவா சோதனை போடுவாங்க, மற்ற இடத்தில் எல்லாம் இருந்து எல்லாம் கவர் தேடி வந்துடும், so, எல்லாம் சரியாதான் இருக்குன்னு சர்டிபிகேட்-டும் தேடி போயிடும், அது சரியில்ல இது சரியில்லைன்னு எவனாவது கம்ப்ளெயிண்ட் பண்ணினான்னா தொலைந்தான், - - - இதுவே திராவிட மாடல் . . ,
Rate this:
Cancel
Ganapathy Subramanian - Muscat,ஓமன்
12-மே-202212:12:17 IST Report Abuse
 Ganapathy Subramanian தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஷவர்மா உணவு விற்பனையகங்கள் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா வின் பண உதவியில் நடைபெறுவதாக ஒரு செய்தி படித்தேன். உண்மையா? அது உண்மையாய் இருந்தால் அரசு சிறுபான்மை போபியா வில் நடவடிக்கை எடுக்க ஒரு 5 முதல் 10 வருடங்கள் ஆகலாம், அதுவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின். சென்னை உயர் நீதிமன்றமும் இதற்க்கு நடவடிக்கை எடுக்காது, அங்கேயும் திராவிடம் போட்ட பிச்சையில் நீதிபதியானோர் பலர் உள்ளனர்
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
12-மே-202211:25:37 IST Report Abuse
Kasimani Baskaran இங்கெல்லாம் உரிமம் கொடுக்கும் பொழுது அதற்கான பயிற்சி போன்றவை இருக்கிறதா என்று அறிந்து அதன்பின்தான் கொடுப்பார்கள். அடிக்கடி வாடிக்கையான சோதனை நடக்கும். தவறு இருந்தால் நிச்சயம் தண்டனை உண்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X