செங்கை - காஞ்சிபுரம் சாலையை ரூ.448 கோடியில் புதுப்பிக்க முடிவு!

Updated : மே 12, 2022 | Added : மே 12, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
செங்கல்பட்டு: செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலை, 448 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட உள்ளது. முக்கியமான ஏழு இடங்களில் பெரிய பாலங்களும், 90 இடங்களில் சிறுபாலங்களும் கட்டப்பட உள்ளன. செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த, சதுரங்கப்பட்டினம் முதல் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வரை, மாநில நெடுஞ்சாலை உள்ளது.செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

செங்கல்பட்டு: செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலை, 448 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட உள்ளது. முக்கியமான ஏழு இடங்களில் பெரிய பாலங்களும், 90 இடங்களில் சிறுபாலங்களும் கட்டப்பட உள்ளன.latest tamil newsசெங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த, சதுரங்கப்பட்டினம் முதல் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வரை, மாநில நெடுஞ்சாலை உள்ளது.செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள், சென்னையையொட்டி அமைந்துள்ள நிலையில், வாகனங்களின் எண்ணிக்கை பெருகி, போக்குவரத்து அதிகரிக்கிறது.
செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலை பகுதி, வேலுார் மாவட்டம் ஆந்திர மாநில பகுதி வரை இணைக்கிறது.இச்சாலை, தற்கால போக்குவரத்திற்கேற்ப அகலம் இல்லாமல், குறுகியதாக உள்ளது. பாலங்களும் சிறிய அளவிலேயே உள்ளன.

தற்போது, கனரக சரக்கு வாகனங்கள், 'டாரஸ்' லாரிகள் ஆகியவை அதிகமாக செல்வதால், சாலை சேதமடைந்து போக்குவரத்திற்கு பயனற்ற சாலையாக உள்ளது. இதனால், இந்த சாலையில் அடிக்கடி சாலை விபத்துகள்நடக்கின்றன.
சாலையை விரிவாக்கம் செய்து மேம்படுத்துவது அவசியம் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.துவக்கம்இதையடுத்து, சென்னை - கன்னியாகுமரி தடத்தில், செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலை 448 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்த, நெடுஞ்சாலைத் துறையினர் முடிவெடுத்துள்ளனர்.


latest tamil newsசெங்கல்பட்டிலிருந்து வாலாஜாபாத் அடுத்த வெண்குடி கிராமம் வரை 22 கி.மீ.., தொலைவிற்கு நான்கு வழிச்சாலையாக அமைகிறது.வெண்குடி முதல் காஞ்சிபுரம் வரை 13 கி.மீ., இருவழி சாலையாக அமைக்கப்படுகிறது. வாலாஜாபாத் பகுதியில், புறவழி நான்கு வழிச்சாலையாக அமைக்கப்படுகிறது.

செங்கல்பட்டு, பழையசீவரம், உள்ளாவூர், புளியம்பாக்கம், கிதிரிபேட்டை, ஊத்துக்கோட்டை, வெண்குடி ஆகிய இடங்களில் பெரிய பாலம் கட்டுமான பணி துவங்கி நடந்து வருகிறது. செங்கல்பட்டு - காஞ்சிபுரம் பகுதிகளில், 90 சிறுபாலங்கள் கட்டப்படுகின்றன.செங்கல்பட்டு திம்மாவரம் பகுதியில், நீஞ்சல் மடுவு குறுக்கிடும் இடத்தில், பெரிய பாலம் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன.
பல இடங்களில், சாலையின் இருபுறம் பள்ளம் தோண்டி மண் நிரப்பி, சமன் செயயப்பட்டு வருகிறது. நிலம் கையகப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.பராமரிப்பு பணிகள்பெயர் வெளியிடாத நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில், 448 கோடி ரூபாய் மதிப்பில், பணிகள் துவக்கப்பட்டு நடந்து வருகின்றன. இப்பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்படும். பணிகள் முடிந்து, 2024ம் ஆண்டு வரை பராமரிப்பு பணிகள் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hari -  ( Posted via: Dinamalar Android App )
12-மே-202211:01:09 IST Report Abuse
hari tindivanam to krishnagiri Road work who bothers. almost 10 years over
Rate this:
Sai - Paris,பிரான்ஸ்
12-மே-202216:15:42 IST Report Abuse
SaiOU HAVE ALSO NEVER BOTHERED FOR ALMOST TEN YEARS AND NOW ONLY YOU WAKE UP THIS IS THE MAIN NATIONAL HIGHWAY TO CONNECT PONDICHERRY WITH KRUSHNAGIRI Yநீங்கள் மோடியிடம் முறையிட வேண்டும் மூன்று நாளில் முடிப்பார்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X