அப்பாவி சிங்களர்கள் எக்கேடு கெட்டாலும் கவலையில்லைன்னு சொல்ல வர்றீங்களா?

Updated : மே 12, 2022 | Added : மே 12, 2022 | கருத்துகள் (33) | |
Advertisement
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி: பிற நாடுகளின் உதவியுடன் ஆயுதப் படைகளை கொண்டு தமிழின போராட்டத்தை நசுக்கியவர் ராஜபக்சே. பன்முகத்தன்மைக்கு எதிரான செயல்பாடு தான், இலங்கையின் தற்போதைய நிலைமைக்கு காரணம். உதவி செய்வது போல இலங்கையில் இந்தியா தலையிடுவதை அங்கு உள்ள சிங்களர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.கடந்த 2009ல், விடுதலை புலிகளை இலங்கை ராணுவம்
திருமாவளவன், தினகரன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி: பிற நாடுகளின் உதவியுடன் ஆயுதப் படைகளை கொண்டு தமிழின போராட்டத்தை நசுக்கியவர் ராஜபக்சே. பன்முகத்தன்மைக்கு எதிரான செயல்பாடு தான், இலங்கையின் தற்போதைய நிலைமைக்கு காரணம். உதவி செய்வது போல இலங்கையில் இந்தியா தலையிடுவதை அங்கு உள்ள சிங்களர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.


கடந்த 2009ல், விடுதலை புலிகளை இலங்கை ராணுவம் அடக்கி ஒடுக்கியபோது, 'இந்தியா தலையிட்டு போர் நிறுத்தம் கொண்டு வரணும்'னு கூப்பாடு போட்டீங்களே... இப்ப, 'அப்பாவி சிங்களர்கள் எக்கேடு கெட்டாலும் கவலையில்லை'ன்னு சொல்ல வர்றீங்களா?நடிகரும், இயக்குனருமான தங்கர்பச்சான் அறிக்கை: வெறும் தமிழ் உணர்வை மட்டுமே வைத்து, தமிழ் மொழியை வளர்க்கவோ, பாதுகாக்கவோ முடியாது. மத்திய அரசின் ஹிந்தி திணிப்பை எதிர்க்க அனைத்துக் கட்சியினரும் சேர மாட்டார்கள். அவர்களை இங்கிருந்து விரட்டியடிக்க ஒரே ஒரு வழிதான்... நாம் அவர்களிடம், ஒரு சொல்கூட ஆங்கிலம் கலக்காமல், தமிழில் மட்டுமே பேசினால், தமிழில் மட்டுமே எழுதினால், எக்காலத்துக்கும் தமிழகத்திற்குள் நுழையும் எண்ணம் வராது. ஆனால், நம்மால் இதைச் செய்ய முடியுமா?


இப்போதைக்கு நீங்கள் படம் எதுவும் இயக்குவது மாதிரி தெரியவில்லை... பேசாமல், 'துாய தமிழில் பேசுவதும்; எழுதுவதும் எப்படி' என ஒரு பயிற்சி வகுப்பு நடத்தலாமே!அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: தேர்தல் நேரத்தில் அள்ளிவிட்ட, பல பொய் வாக்குறுதிகளைப் போலவே, பழைய ஓய்வூதிய கொள்கையை செயல்படுத்துவோம் என, ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியும் காற்றோடு போய்விட்டதா? பழைய ஓய்வூதியக் கொள்கையை செயல்படுத்து வதில், தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை, முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.


latest tamil news
'அதெல்லாம் ஆகுற காரியமில்லை'ன்னு முதல்வரின் கருத்தை தான், அவரது நிதியமைச்சர் தியாகராஜன் வழிமொழிஞ்சிட்டாரே... முதல்வர் வேற தனியா சொல்லணுமா?தமிழக பா.ஜ., தலைவர் அண்ணா மலை பேட்டி: கடந்த 15 ஆண்டுகளாக இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் செய்த காங்., - தி.மு.க.,வினர், யாழ்ப்பாணத்தில் ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை. 10 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க., என்ற கட்சியே இருக்காது.


தி.மு.க., 10 ஆண்டுகளுக்கு பின் இருக்காது என்றால், என்ன அர்த்தம்? எதிர்க்கட்சியினர் புகார் சொல்வது போல, 'ஒரே கட்சி, ஒரே தேசம், ஒரே தலைவன்' என்ற சீனா பாணியை கடைப்பிடிக்க போறீங்களா என்ன?பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: நகரங்களில் சொத்து வரியை, ஆண்டுக்கு ஒருமுறை உயர்த்த வகை செய்யும் சட்டம், சட்டசபையில் கொண்டு வரப்பட்டுள்ளது. சொத்து வரி உயர்வு, வீட்டு உரிமையாளர்களை மட்டுமின்றி, வாடகைதாரர்களையும் கடுமையாக பாதிக்கும். இதை ஏற்க முடியாது. 2017- - 18ல் சொத்து வரி உயர்வை கண்டித்து, ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரியை உயர்த்தும் முடிவை, அரசு கைவிட வேண்டும்.


ஏற்கனவே உயர்த்திய சொத்து வரியை வாபஸ் வாங்கும்படி கோரிக்கை வச்சிட்டு இருந்த உங்களை, 'தயவுசெஞ்சு வருஷா வருஷம் ஏத்தாதீங்க'ன்னு கெஞ்ச வச்சுட்டாங்க, பார்த்தீங்களா?


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
12-மே-202219:57:32 IST Report Abuse
spr ஒரு சொல்கூட ஆங்கிலம் கலக்காமல், தமிழில் மட்டுமே பேசினால், தமிழில் மட்டுமே எழுதினால், எக்காலத்துக்கும் தமிழகத்திற்குள் நுழையும் எண்ணம் வராது" - நல்ல கருத்துதான் ஆனால் நல்ல தமிழ்ப் பேச்சாளர்கள் என்றறியப்பட்டவர் மட்டுமல்ல தமிழுக்காக உயிரையும் விட விரும்புபவர்கள் கூட ஆங்கிலம் கலவாமல் தூய தமிழில் பேசுவதில்லை தமிழ்ச் சொற்களின் பொருள் விளங்கவே ஆங்கிலம்தான் தேவைப்படுகிறது இனியும் இந்த மொழியை வைத்துப் பிரச்சினை செய்வதனை விடுத்து நம் இளைய தலைமுறையை ஆக்கபூர்வமாக சிந்திக்க வைக்கும் படங்களை எடுக்கப் பழகுங்கள்
Rate this:
Cancel
S Bala - London,யுனைடெட் கிங்டம்
12-மே-202219:28:35 IST Report Abuse
S Bala அப்பாவி சிங்களன் என்று எவனுமில்லை. அனைவரும் இரண்டு லட்சம் தமிழர்கள் கற்பழிப்பு, கொலை, கொள்ளை, இவற்றுக்கு ஆளாக்கப்படும் பொது வேடிக்கை பார்த்து ரசித்த கொடூரர்கள்தான். இன்றுவரை கற்பழிப்பு இனஅழிப்பு எது பற்றியும் கவலைப்படாமல் கும்மாளம் போடும் கயவர்கள்தான்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
12-மே-202218:09:00 IST Report Abuse
Vena Suna வள வளன்னு பேசாமல் புது கருத்துக்களை சொல்லணும் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X