வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: திராவிடர் கழகத்தை தோற்றுவித்த ஈ.வே.ராமசாமி முத்துப்பல்லக்கில் பவனி வந்ததாக கூறப்படும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேசத்திற்கு திராவிடர் கழகம் (தி.க.,), திமுக உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக மயிலாடுதுறை ஆர்.டி.ஓ., பட்டினப் பிரவேசத்திற்கு தடை விதித்திருந்தார். ஆனால், ஆன்மிகவாதிகள், பொதுமக்கள் இடையே இது கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து பட்டினப் பிரவேசத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அனுமதி அளித்தார். இதனையடுத்து ஆர்.டி.ஓ., தடை உத்தரவை வாபஸ் பெற்றார்.

இந்த நிலையில், 1972ம் ஆண்டு கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் இருந்து ஏராளமானோர் பங்குபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஈ.வே.ராமசாமி முத்துப் பல்லக்கில் பவனி வந்துள்ளதாக புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE