விவசாயத்தை பாதுகாக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

Updated : மே 12, 2022 | Added : மே 12, 2022 | கருத்துகள் (21) | |
Advertisement
சென்னை: வளமான தமிழகத்தை உருவாக்க விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.தலைமை செயலகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: காவிரி டெல்டா மிகவும் செழிப்பான பகுதி.
dmk, stalin, mkstalin, chiefministerstalin, farmers, agriculture,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: வளமான தமிழகத்தை உருவாக்க விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தலைமை செயலகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: காவிரி டெல்டா மிகவும் செழிப்பான பகுதி. மிகப்பெரிய வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா பகுதி திகழ்கிறது. காவிரி நீரை பெற சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் போராடி வருகிறோம். விவசாயத்திறகு மிக முக்கிய பகுதியாக இருந்தாலும், பல்வேறு நெருக்கடிகளும் உள்ளது.


latest tamil news



விவசாயத்திற்கு அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டமாக இருந்தாலும் அமல்படுத்துகிறோம். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயத்தை பாதிக்கும் எந்த ஒரு ஆலைக்கும் தி.மு.க., அரசு அனுமதி வழங்காது. விவசாயத்திற்கு தி.மு.க., அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. வளமான தமிழகத்தை உருவாக்க விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கார்த்திக் பிள்ளை சேலம் மாவட்டத்தில் இருந்த நெல் கொள்முதல் நிலையங்கள் இந்த விடியா ஆட்சியில் மூடப்பட்டது. இங்கு நிறைய விவசாயிகள் கடன் பெற்று அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் உள்ளோம். வியாபாரிகள் 77கிலோ மூட்டை நெல்லை வெறும் 800ரூபாய்க்கு கேட்கின்றனர். இன்னும் நான்கு ஆண்டுகள் விவசாயி என்ன பாடு படப்போகின்றானோ.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
12-மே-202217:08:25 IST Report Abuse
jayvee ,,,,,,
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
12-மே-202215:25:44 IST Report Abuse
D.Ambujavalli அதுதான் பழைய எட்டு வழிக்கு புது நாமகரணம் செய்து விவசாயத்தை 'வளர்க்க' வழி வகுத்திருக்கிறாரே ஆறு குளம் குளம் எல்லாம் அடுக்குமாடிக் குடியிருப்புகள், மால்கள் ஆக்கி…. இதுவரை செய்ததற்கு மேலும் 'வளர்ச்சி' செய்தால் பூமியே தாங்காது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X