கூகுள் டிரான்ஸ்லேட்டில் சமஸ்கிருதம் இணைப்பு

Added : மே 12, 2022 | கருத்துகள் (23) | |
Advertisement
புதுடில்லி: மொழி மாற்றம் செய்ய பயன்படும் கூகுள் டிரான்ஸ்லேட்டரில் சமஸ்கிருதம் உள்ளிட்ட 24 மொழிகள் இணைக்கப்பட்டுள்ளன.கூகுள் நிறுவனம் ‛டிரான்ஸ்லேட்' எனப்படும் மொழிமாற்ற சேவையை அளித்து வருகிறது. இதில் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், பெங்காலி, கன்னடம், பிரெஞ்சு, மலையாளம், உள்ளிட்ட பல மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. பயனர்கள் தங்களுக்கு தேவையான மொழிகளில் கூகுள் டிரான்ஸ்லேட் மூலம்
Google Translate, Sanskrit, Language, கூகுள், டிரான்ஸ்லேட், சமஸ்கிருதம்

புதுடில்லி: மொழி மாற்றம் செய்ய பயன்படும் கூகுள் டிரான்ஸ்லேட்டரில் சமஸ்கிருதம் உள்ளிட்ட 24 மொழிகள் இணைக்கப்பட்டுள்ளன.

கூகுள் நிறுவனம் ‛டிரான்ஸ்லேட்' எனப்படும் மொழிமாற்ற சேவையை அளித்து வருகிறது. இதில் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், பெங்காலி, கன்னடம், பிரெஞ்சு, மலையாளம், உள்ளிட்ட பல மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. பயனர்கள் தங்களுக்கு தேவையான மொழிகளில் கூகுள் டிரான்ஸ்லேட் மூலம் அதில் குறிப்பிட்டுள்ள மொழிகளுள் மொழி மாற்றம் செய்து அறிந்துக்கொள்ளலாம். அந்த வகையில், தற்போது 24 புதிய மொழிகளையும் அதில் இணைத்துள்ளதாக கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.


latest tamil news


இந்த 24 மொழிகளில் சமஸ்கிருதம், போஜ்புரி, பம்பரா, டோக்ரி உள்ளிட்ட 8 இந்திய மொழிகளும் அடங்கும். இதன்மூலம் கூகுள் டிரான்ஸ்லேட்டில் உலகம் முழுவதும் உள்ள 133 மொழிகளும், 19 இந்திய மொழிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த சேவைகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இதனால் 30 கோடி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். கூகுள் செயலியில் சமஸ்கிருதம் இணைக்கப்பட்டுள்ளதற்கு ஏராளமானோர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijaya Lakshmi - Chennai,இந்தியா
13-மே-202212:17:53 IST Report Abuse
Vijaya Lakshmi என்னைப் போன்ற எண்ணற்ற ஸம்ஸ்கிருத மாணவர்களுக்கு இது மிக மிக பயனுள்ளதாக இருக்கும். மிக்க நன்றி. அனைவர் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்னொரு மொழியைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தை விடுங்கள். மற்றவர்களை மதிப்பது போல் மற்ற மொழிகளையும் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். தமிழ்க்கவி பாரதி "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று பலமொழிகளைக் கற்று தெளிந்த பிறகுதான் பாடினார். இனிதாக இல்லை என்பதற்காக மற்ற மொழிகளைக் கேவலமாக விமர்சிக்கவில்லை. ஸம்ஸ்கிருதத்தில் கூட பாதமாதாவுக்கு ஒரு கவிதை எழுதியிருக்கிறார். நம் தாயை மதித்து அடுத்தவர் தாயை இறந்துபோகட்டும் என நினைப்போமா? அதேபோல் தான் மொழியும் நம் மொழி போல் மற்ற மொழிகளும் வளரட்டும் என்று நினைப்பது தான் நாம் கற்ற மரியாதை, நம் கலாச்சாரம். தயவுசெய்து நிந்தனைகளைப் பதிவிடாதீர்கள். நன்றி
Rate this:
Cancel
Suri - Chennai,இந்தியா
12-மே-202219:21:13 IST Report Abuse
Suri .....
Rate this:
Cancel
Venugopal S -  ( Posted via: Dinamalar Android App )
12-மே-202217:23:53 IST Report Abuse
Venugopal S தேவையில்லாத இந்த சம்ஸ்கிருத ஆணியைப் பிடுங்கித் தான் ஆக வேண்டுமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X