சாயக்கழிவால் நோய்களின் மையமாக மாறிய மஞ்சள் நகரம்: ஈரோட்டில் அதிகரித்து வரும் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை

Updated : மே 12, 2022 | Added : மே 12, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
ஒரு காலத்தில், 'மஞ்சள் நகரம்' என கூறப்பட்ட ஈரோடு, 20 ஆண்டுக்கு மேலாக சாய, சலவை, பிளீச்சிங், தோல் ஆலை கழிவால் ஏராளமான நோய்களின் மையமாகி, 'சாயக்கழிவு நகரம்' என, அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் புற்று நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. அத்துடன்பிற மாவட்டத்தை சேர்ந்த, 2 கோடி மக்கள், விஷம் கலந்த நீரை குடிக்க, ஈரோடு சாய ஆலைகள் காரணமாகின்றன.காவிரி - பவானி ஆறு,
சாயக்கழிவு, நோய், மையம், மஞ்சள் நகரம், ஈரோடு, புற்று நோயாளிகள், எண்ணிக்கை, விஷம். தண்ணீர், குடிநீர், மாவட்டம், மக்கள்

ஒரு காலத்தில், 'மஞ்சள் நகரம்' என கூறப்பட்ட ஈரோடு, 20 ஆண்டுக்கு மேலாக சாய, சலவை, பிளீச்சிங், தோல் ஆலை கழிவால் ஏராளமான நோய்களின் மையமாகி, 'சாயக்கழிவு நகரம்' என, அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் புற்று நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. அத்துடன்பிற மாவட்டத்தை சேர்ந்த, 2 கோடி மக்கள், விஷம் கலந்த நீரை குடிக்க, ஈரோடு சாய ஆலைகள் காரணமாகின்றன.

காவிரி - பவானி ஆறு, பவானிசாகர் அணை, கீழ்பவானி, காளிங்கராயன் வாய்க்கால், தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்கால், நொய்யல் ஆறு என நீர் நிலைகள் சூழ்ந்த அழகான மாவட்டம் ஈரோடு. நெல், வாழை, கரும்பு, மஞ்சள் உட்பட அனைத்து வகை கிழங்குகள், பழங்கள் விளையும் பாக்கியம் பெற்றது. ஆனால், 200க்கும் குறைவான தனி நபர்களின் பேராசையால், அத்தனை நீர் நிலைகளின் கரையிலும், நுாற்றுக்கணக்கான சாய, சலவை, பிளீச்சிங், தோல் ஆலைகளை அமைத்து, பெயருக்கு சுத்தி கரிப்பு நிலையம் இயக்கியும், இயக்காமலும், திரவ, திட கழிவுகளை காவிரி மற்றும் வாய்க்கால்களில் கலக்கின்றனர்.


1,200 ஆலைகள்ஈரோடு, பி.பி.அக்ரஹாரம், பவானி சாலை, சித்தோடு, கங்காபுரம், வெண்டிபாளையம் பகுதி, சூரம்பட்டிவலசு, பெருந்துறை சிப்காட், பவானி, கடையம்பட்டி, சென்னிமலை என பல இடங்களில், 1,200க்கும் மேற்பட்ட ஆலைகள் செயல்பட்டன. கடந்த, 2010ல் உயர்நீதிமன்றம், 'பூஜ்ய' நிலை சுத்தி கரிப்பு செய்யாமல் கழிவை வெளியேற்றும் ஆலையை அகற்ற உத்தரவிட்டதால், 600 ஆலைகள் இடிக்கப்பட்டன. 200 ஆலைகள் மூடப்பட்டன. எஞ்சிய ஆலைகளும், அனுமதி பெறாத புதிய ஆலைகள், அனுமதி பெற்ற ஆலைகளுக்குள் அளவுக்கு அதிகமான உற்பத்தி என, 500 யூனிட்டுக்கு மேல் செயல்படுகின்றன.


விஷம் கலந்த நீர்ஒரு மீட்டர் சாயத்துணியை சுத்திகரிக்க, 4 ரூபாய் செலவாகும். 10 காசு செலவின்றி அப்படியே கழிவு நீரை, சாக்கடை வாய்க்கால், பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன்பள்ளம் ஓடை, காளிங்கராயன் வாய்க்கால் மூலம் காவிரியில் விடுகின்றனர். இதனால் ஆலைகளுக்கு, பல கோடி ரூபாய் தினமும் மிச்சமாகும்.இதே காவிரி நீரை, ஈரோடு மாநகராட்சி மக்களும், கரூர், திருச்சி, நாமக்கல், ராமநாதபுரம், டெல்டா மாவட்ட மக்கள் குடி நீராக பயன்படுத்துகின்றனர். ஈரோடு மக்களும், வி.ஐ.பி.,க்களும் சுயநலமாக, 'சாயக்கழிவு கலக்கும் ஈரோட்டுக்கு முன்பாக' ஊராட்சிகோட்டை பகுதியில் இருந்து, 548 கோடி ரூபாயில் புதிய குடிநீர் திட்டம் மூலம் நீரை பெற்று குடிக்கின்றனர்.பிற மாவட்டத்தை சேர்ந்த, 2 கோடி மக்கள், விஷம் கலந்த நீரை குடிக்க, ஈரோடு சாய ஆலைகள் காரணமாவது பற்றி யாரும் கவலைப்படவில்லை.


'சாயக்கழிவு நகரம்'கடந்த, 2012 - 21 வரை அ.தி.மு.க., ஆட்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்களாக இருந்த இம்மாவட்டத்தை சேர்ந்த தோப்பு வெங்கடாசலம், கருப்பணன் ஆகியோர், இப்பிரச்னைக்கு தீர்வு காணவில்லை. கழிவு நீர் வெளியேற்றம் ஆளும் கட்சியினர் கட்டுப்பாட்டுக்கு வந்தது. அதிகாரியால் ஒரு முழம் துணியைக்கூட கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் இன்னும் மோசமாகி, காவிரி மட்டுமின்றி, காளிங்கராயன் வாய்க்காலிலும் ஆலை கழிவு கலப்பதுடன், சாயத்துணிகளை நேரடியாக அலசுகின்றனர். கொடிய விஷம் கலப்பது மேலும் அதிகரித்து, 'மஞ்சள் நகரம் என பெயர் பெற்ற ஈரோடு' தற்போது, 'சாயக்கழிவு நகரம்' என்றாகிவிட்டது.


நிரந்தர தீர்வை விரும்பாதவர்கள்சாய, சலவை, பிளீச்சிங், தோல் ஆலைகள், அதன் உப தொழில்களை சட்ட விரோதமாக செயல்பட பெரும்பாலான அதிகாரிகள், ஆளும் கட்சியினர் நேரடியாக உதவி, 'கோடி'களை குவிக்கின்றனர். எனவே, நிரந்தர தீர்வை ஏற்படுத்த முன்வரவில்லை. கடந்த, 2014ல் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட, 4 மாவட்டங்களில், 720 கோடி ரூபாயால் ஆன பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் திட்டம் இன்று வரை, ஒரு செங்கல் அளவுக்குக்கூட முன்னேற்றம் காணாமல் தடுத்துள்ளனர். சுத்திகரிப்பு நிலையத்துக்காக ஈரோடு காவிரி காளிங்கராயன் வாய்க் காலுக்கு இடையே இடம் பார்த்து, கடும் எதிர்ப்பால் முடங்கியது. இங்குள்ள ஆலைகள், மனித உயிர்களை குடிக்கும் காரீயம், ஈத்தேன், மெத்திலின், கால்சியம், மெத்திலின் போரேட், போரேட் சல்பேட், எண்டோசல்பான், கடினமான பிளீச்சிங் வாட்டர் என பலவற்றை கலப்பதால், ஈரோடு பகுதியில் நீரில், 2,000 டி.டீ.எஸ்.,ம், நொய்யல் பகுதியில் முன்பு, 12,000மும், தற்போது, 7,000க்கு மேலும், சிப்காட் பகுதியில், 6,000 முதல், 7,000 என உள்ளதை அதிகாரிகள், ஆளும் கட்சியும் அலட்சியம் செய்கின்றனர்.

இதன் பயனாக, ஈரோடு பகுதி யில், 15 ஆண்டுக்கு முன், 295 மருத்துவமனையாக இருந்து, 550 மருத்துவமனையும், 600 மருந்துக்கடைகள், 1,600 மருந்துக்கடைகளாக அதிகரித்துள்ளன. கேன்சர், கருத்தரிப்பு மையம், சிறுநீரகம், எலும்பு மற்றும் நரம்பு சம்மந்தப்பட்ட மருத்துவமனை அதிகம். சமீபத்தில் பள்ளிகளில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட முகாமில், ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சிகிச்சை பெற்றனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, மாற்றுத்திறன் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டதையும் உணர வேண்டும்.

இப்பிரச்னை பற்றி இம்மாவட்ட அமைச்சர் சு.முத்துசாமியிடம் எப்போது பேசினாலும், 'இது பல நுாறு தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்னை. உடனடியாக ஆலைகளை மூடிவிட முடியாது' என கூறி முடித்து கொள்கிறார்.ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரகுபதியிடம் கேட்ட போது, ''என் உயரதிகாரிகளிடம் பேசிவிட்டு, நாங்கள் எடுத்த நடவடிக்கையை தெரிவிக்கிறேன்,'' என, கூறினார்.


100 சதவீத சாயக்கழிவு வெளியேற்றம்
latest tamil newsஈரோடு, சூரியம்பாளையம் பொதுமக்கள் நல்வாழ்வு சங்க செயலாளர் எம்.கேசவன் கூறியதாவது: சட்டசபை தேர்தலுக்கு பின், 40 சதவீதமும், உள்ளாட்சி தேர்தலுக்குப்பின், 100 சதவீதம் சாயக்கழிவு வெளியேற்றம், நீர் நிலைகளில் சாயத்துணி அலசுவது ஆளும் கட்சியினர் கைக்கு சென்றுவிட்டது. தடையின்றி அலசுகின்றனர்.கடந்த இரண்டு ஆண்டாக, பல நிற சாய தண்ணீரில், 'பிளீச்சிங் வாட்டர், குளோரின் காஸ்' கலந்து, எந்த நிற நீராக இருந்தாலும் லேசான சுண்ணாம்பு கலந்த நிறத்துக்கு மாறிவிடும். கெமிக்கல் மேல் கெமிக்கல் சேர்த்து ஆபத்தான நீரை வெளியேற்றுகின்றனர். முன்பு இரவில் வெளியேற்றியவர்கள், தற்போது பகலிலேயே வெளியேற்றுகின்றனர்.இங்குள்ளவர்கள் காவிரி மற்றும் நிலத்தடி நீரை குடிப்பதால் புற்று நோய், மலட்டுத்தன்மை, கிட்னி செயல் இழப்பு, தைராய்டு, தோல் நோய், எலும்பு மற்றும் நரம்பு பிரச்னை, தொண்டை பகுதி பாதிப்பு என பல நோய்க்கு ஆளாகின்றனர்.

நீர் நிலை ஓரங்களில் புதிய ஆலை அமைக்கக்கூடாது. ஏற்கனவே உள்ள ஆலைகளுக்கு குறித்த அவகாசத்தில், வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.ஈரோடு கலெக்டர்களாக பிரபாகர், கதிரவன் இருந்தபோது, 'இப்பகுதியில் கேன்சர் நோய் அதிகமாக, ஆலைக்கழிவு நீர் காரணம்' என்ற குற்றச்சாட்டை முன்வைக்கும் போதெல்லாம், 'இதுபற்றி, சுற்றுச்சூழல் துறை, சுகாதாரத்துறை இணைந்து இங்குள்ள தண்ணீர், கேன்சர் மற்றும் பிற நோய் பாதித்தோரை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தி, தெளிவுபடுத்துங்கள்' என்றனர்.'குட்டு' வெளிப்படும் என்பதால், எந்த துறையும் ஆய்வுக்கு முன்வரவில்லை. ஆனால், ஈரோடு மாவட்டத்தில் இதுபோன்ற நோய் பாதித்தோர் தெருவுக்கு தெரு அதிகரித்து வருவதை காண முடிகிறது. ஆண்டுக்கு ஆண்டு புற்று நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.


நிரந்தர தீர்வை விரும்பாதவர்கள்சாய, சலவை, பிளீச்சிங், தோல் ஆலைகள், அதன் உப தொழில்களை சட்ட விரோதமாக செயல்பட பெரும்பாலான அதிகாரிகள், ஆளும் கட்சியினர் நேரடியாக உதவி, 'கோடி'களை குவிக்கின்றனர். எனவே, நிரந்தர தீர்வை ஏற்படுத்த முன்வரவில்லை. கடந்த, 2014ல் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட, 4 மாவட்டங்களில், 720 கோடி ரூபாயால் ஆன பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் திட்டம் இன்று வரை, ஒரு செங்கல் அளவுக்குக்கூட முன்னேற்றம் காணாமல் தடுத்துள்ளனர். சுத்திகரிப்பு நிலையத்துக்காக ஈரோடு காவிரி காளிங்கராயன் வாய்க் காலுக்கு இடையே இடம் பார்த்து, கடும் எதிர்ப்பால் முடங்கியது.

இங்குள்ள ஆலைகள், மனித உயிர்களை குடிக்கும் காரீயம், ஈத்தேன், மெத்திலின், கால்சியம், மெத்திலின் போரேட், போரேட் சல்பேட், எண்டோசல்பான், கடினமான பிளீச்சிங் வாட்டர் என பலவற்றை கலப்பதால், ஈரோடு பகுதியில் நீரில், 2,000 டி.டீ.எஸ்.,ம், நொய்யல் பகுதியில் முன்பு, 12,000மும், தற்போது, 7,000க்கு மேலும், சிப்காட் பகுதியில், 6,000 முதல், 7,000 என உள்ளதை அதிகாரிகள், ஆளும் கட்சியும் அலட்சியம் செய்கின்றனர்.

இதன் பயனாக, ஈரோடு பகுதி யில், 15 ஆண்டுக்கு முன், 295 மருத்துவமனையாக இருந்து, 550 மருத்துவமனையும், 600 மருந்துக்கடைகள், 1,600 மருந்துக்கடைகளாக அதிகரித்துள்ளன. கேன்சர், கருத்தரிப்பு மையம், சிறுநீரகம், எலும்பு மற்றும் நரம்பு சம்மந்தப்பட்ட மருத்துவமனை அதிகம். சமீபத்தில் பள்ளிகளில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட முகாமில், ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சிகிச்சை பெற்றனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, மாற்றுத்திறன் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டதையும் உணர வேண்டும்.இப்பிரச்னை பற்றி இம்மாவட்ட அமைச்சர் சு.முத்துசாமியிடம் எப்போது பேசினாலும், 'இது பல நுாறு தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்னை. உடனடியாக ஆலைகளை மூடிவிட முடியாது' என கூறி முடித்து கொள்கிறார். ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரகுபதியிடம் கேட்ட போது, ''என் உயரதிகாரிகளிடம் பேசிவிட்டு, நாங்கள் எடுத்த நடவடிக்கையை தெரிவிக்கிறேன்,'' என, கூறினார்.


48 ஆயிரம் டன் கழிவுபெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.சின்னசாமி: சாய, தோல் ஆலைகள், 'பூஜ்ய நிலை சுத்திகரிப்பு செய்து' வெளியேற்றுவது மிகக்குறைவு என்பதே பிரச்னைக்கு காரணம். ஆலை மீதும், அதன் உரிமையாளர்கள் மீதும், குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டர் தலைமையிலான ஒருங்கிணைப்பு குழுவில் மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்புகள் இடம் பெற வேண்டும். ஆலைகளுக்கான விதிமுறை, சட்டம் என்றோ இயற்றப்பட்டது. தற்போதைய சூழலுக்கு ஏற்ப கடினமாக்க வேண்டும்.சிப்காட் ஆலைகளில் திடக்கழிவு, சாம்பல் கழிவு மட்டும், 48 ஆயிரம் டன் சேமித்து வைத்துள்ளனர். அவை ஆபத்தானவை. மழை நீர், பிற தண்ணீர் இவற்றின் மீது பட்டால், கெமிக்கல் கலந்த நீர் பூமிக்குள் செல்லும். தற்போது, சிப்காட் சுற்றிலும், 6,000 முதல், 7,000 டி.டீ.எஸ்., (டேட்டல் டிஸ்சால்வ்டு சால்ட்) உள்ளது. இவை மனிதர்கள், கால்நடைகள் குடிக்க, சமைக்க, பிற பயன்பாட்டுக்கு உகந்த நீர் அல்ல.

சிப்காட்டில் பழைய ரப்பர், இருப்பு பொருட்கள், கண்ணாடி உருக்காலைகளில் இருந்து கருந்துகள், புகை, கடுமையான நெடி வெளியேறுவதை தடுக்க வேண்டும்.இங்குள்ள திடக்கழிவு, சாம்பல் கழிவை அகற்ற தொடர்ந்து வலியுறுத்தியும், நடவடிக்கை இல்லை. மாவட்டம் முழுவதும் பல லட்சம் டன் திடக்கழிவு உள்ளதை அரசு உணர வேண்டும்.இப்பகுதி மக்களுக்கு மருத்துவ முகாம் நடத்த கோரி, இரு முறை நடத்தியதில் பலருக்கு பல நோய் இருப்பது உறுதியானது. அதன்பின் முகாம் நடத்தவில்லை. ஆலைகள் அவசியம் என்றாலும், மக்களின் உயிர் அவசியம் என்பதை கணக்கில் கொள்ள வேண்டும்.

- நமது சிறப்பு நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
12-மே-202218:17:06 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan அம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் தோல் சுத்திகரிபபு ஆலைகள் கழிவினால் நிலத்தடி நீர் பாதிக்கப்படடுள்ளதை யாராவது கேட்பார்களா?
Rate this:
13-மே-202205:38:17 IST Report Abuse
ராஜாதிமுகவுக்கு ஓட்டு பிச்சை போட்டவர்களை யாரும் கேட்க மாட்டார்கள்....
Rate this:
Cancel
Selvakumar - Erode,இந்தியா
12-மே-202218:14:35 IST Report Abuse
Selvakumar Entha saitheya parthum action etukkatha athiyariyai dismiss saiya vanduam
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
12-மே-202217:52:47 IST Report Abuse
கல்யாணராமன் சு. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையாலே புற்று நோய் வருகின்றது போராட்டம் நடத்திய போராளிகள், மதகுருமார்கள், அரசியல் வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சமூக நீதி காவலர்கள் ஏன் ஈரோட்டிலும் வேலூர் மாவட்டத்திலும் உள்ள பிரச்சினைகளை பற்றி பேசமாட்டேன் என்கிறார்கள் ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X