வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சாமியார் நித்தியானந்தா, உடல்நிலை பாதிக்கப்பட்டதாக செய்திகள் பரவி வந்தநிலையில், ‛நான் சமாதி மனநிலையை அடைந்திருக்கிறேன்' என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சாமியார் நித்தியானந்தா மீது பல வழக்குகள் உள்ள நிலையில், அவர் கைலாசா என்னும் தீவுக்கு சென்றுவிட்டதாக அவரே கூறியிருந்தார். அங்கிருந்து அவ்வபோது வீடியோ மூலம் சொற்பொழிவு ஆற்றி வந்தார். இந்த நிலையில், அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், தான் உயிருடன்தான் இருப்பதாக நித்தியானந்தாவே தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது: எனக்கு உடல்நிலை சரியில்லை. 27 டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவ சிகிச்சையில் இருந்து இன்னும் வெளியே வரவில்லை. பிரபஞ்சத்தின் சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது என்பதை எனக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர்கள் ஆய்வு செய்கின்றனர். தினந்தோறும் நடைபெறும் நித்ய பூஜையை தவிர வேறு எந்த வேலையையும் நான் செய்வதில்லை. உணவு உண்ண முடியவில்லை, தூங்க முடியவில்லை.

என் உடம்புக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. டாக்டர்களாலும் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. எனக்கு அறிமுகமானவர்களை கூட அடையாளம் கண்டுக்கொள்வதில் சிரமப்படுகிறேன். நான் சாகவில்லை; ஆனால், சமாதி மனநிலையை அடைந்திருக்கிறேன். விரைவில் பரிபூரண நலம் பெற்று திரும்புவேன். இவ்வாறு நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.