தாஜ்மஹாலில் 22 அறைகளை திறக்க கோரிய மனு தள்ளுபடி

Updated : மே 13, 2022 | Added : மே 12, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
லக்னோ: தாஜ்மஹாலில் மூடப்பட்டுள்ள 22 அறைகளை திறந்து ஆய்வு செய்யக்கோரிய மனுவை அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை தள்ளுபடி செய்தது.உத்தர பிரதேசத்தில் ஆக்ராவில் உலக புகழ் பெற்ற தாஜ் மஹால் உள்ளது. இந்நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளையில், பா.ஜ.,வை சேர்ந்த ரஜ்னீஷ் சிங் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: துறவியரும், ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தோரும், தாஜ்
Taj Mahal, closed doors, High Court, Allahabad High Court, rejects, Taj Mahal plea,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

லக்னோ: தாஜ்மஹாலில் மூடப்பட்டுள்ள 22 அறைகளை திறந்து ஆய்வு செய்யக்கோரிய மனுவை அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை தள்ளுபடி செய்தது.

உத்தர பிரதேசத்தில் ஆக்ராவில் உலக புகழ் பெற்ற தாஜ் மஹால் உள்ளது. இந்நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளையில், பா.ஜ.,வை சேர்ந்த ரஜ்னீஷ் சிங் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: துறவியரும், ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தோரும், தாஜ் மஹால் ஒரு காலத்தில் புகழ் பெற்ற சிவன் கோவிலாக இருந்தது என கூறி வருகின்றனர்.'தேஜோ மகாளயா' என்ற பெயரில் இருந்த சிவன் கோவில் தான், தாஜ் மஹாலாக மாற்றப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். இதற்கு வரலாற்று ஆசிரியர்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தாஜ்மஹாலில் உள்ள 22 அறைகள் மூடிவைக்கப்பட்டுள்ளன.


latest tamil news


அங்கு ஹிந்து தெய்வங்களின் சிலைகள் உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த அறைகளின் கதவுகள் பூட்டப்பட்டு உள்ளன என, இந்திய தொல்லியல் துறை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளது. மூடப்பட்டுள்ள அறைகளுக்குள் என்ன உள்ளது என்பதை அறிய வேண்டும். உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்து, மூடப்பட்டுள்ள அறைகளை திறந்து ஆய்வு செய்ய, தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனை விசாரித்த நீதிமன்றம், 22 அறைகளை திறக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thamodaran chinnasamy - chennai,இந்தியா
13-மே-202202:53:01 IST Report Abuse
thamodaran chinnasamy காலம் கணித்துவிட்டது / கனிந்துவிட்டது நல்லதே நடக்கும். நீதிபரிபாலனத்துறை நிச்சயம் செவி சாய்க்கும்.
Rate this:
Cancel
Unmai Vilambi - California,யூ.எஸ்.ஏ
12-மே-202223:18:54 IST Report Abuse
Unmai Vilambi இந்த கருத்தை திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் அறைகள் திறக்கும் பொழுது சொல்லி இருக்கலாமே? ஹிந்து களுக்கு என்று இந்தியா இல்லை
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
12-மே-202221:12:26 IST Report Abuse
Kasimani Baskaran பூட்டிய அறைகளை திறப்பதில் என்ன பிரச்சினை?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X