பேரக்குழந்தை அல்லது ரூ.5 கோடி நஷ்ட ஈடு: மகனுக்கு 'செக்' வைக்கும் பெற்றோர்

Updated : மே 13, 2022 | Added : மே 12, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
ஹரித்வார்: மகனும், மருமகளும் தங்களுக்கு பேரக்குழந்தைகளை பெற்றுத்தரும்படியும், இல்லையெனில் இருவரும் சேர்ந்த ரூ.5 கோடி நஷ்டஈடு தரவேண்டும் எனவும் மகனின் பெற்றோர்கள் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரைச் சேர்ந்தவர் பிரசாத். இவர் தனது மனைவியுடன் ஹரித்வார் நீதிமன்றத்தில் விசித்திரமான மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில்,
Parents, Move Court, Against Son, Daughter in law, Demand, Grand Children, Rs5cr Compensation, பேரக்குழந்தை, நஷ்ட ஈடு, மகன், மருமகள், பெற்றோர், வழக்கு, மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஹரித்வார்: மகனும், மருமகளும் தங்களுக்கு பேரக்குழந்தைகளை பெற்றுத்தரும்படியும், இல்லையெனில் இருவரும் சேர்ந்த ரூ.5 கோடி நஷ்டஈடு தரவேண்டும் எனவும் மகனின் பெற்றோர்கள் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரைச் சேர்ந்தவர் பிரசாத். இவர் தனது மனைவியுடன் ஹரித்வார் நீதிமன்றத்தில் விசித்திரமான மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், ‛எங்களிடம் இருந்த பணத்தை எல்லாம் செலவு செய்து மகனை அமெரிக்காவில் படிக்க வைத்தேன். கடன் வாங்கி வீடு கட்டினேன். எங்களது மகனுக்கு 2016ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தோம். எங்களுக்கு பேரக்குழந்தையை பார்க்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. குழந்தையின் பாலினம் பற்றி எங்களுக்கு கவலையில்லை.


latest tamil news


ஒரு வருடத்திற்குள் எங்களுக்கு பேரக்குழந்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். இல்லையெனில், பணக் கஷ்டத்தில் இருக்கும் எங்களுக்கு எனது மகனும், மருமகளும் தலா ரூ.2.5 கோடி என நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும்' என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக பிரசாத்தின் வக்கீல் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ‛பெற்றோர் அரும்பாடுபட்டு பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். ஆனால், படித்து பெரியவர்களாகி கைநிறைய சம்பாதிக்கும் பிள்ளைகள், பெற்றோரின் அடிப்படைத் தேவைகளைக் கூட கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள்' என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram - Chennai,இந்தியா
13-மே-202217:20:53 IST Report Abuse
Sriram ......
Rate this:
Cancel
Shekar - Mumbai,இந்தியா
12-மே-202222:10:13 IST Report Abuse
Shekar கூடிய விரைவில் அந்த மகன் இவர்கள் மேல் " என் அனுமதி இல்லாமல் என்னை ஏன் பெற்றீர்கள்?' என்று கேஸ் போட்டு நஷ்ட ஈடு கேட்டாலும் கேட்கலாம்
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
12-மே-202221:13:00 IST Report Abuse
Mohan 5 கோடி கொடுத்தா அதை வச்சி பேரக்குழந்தை வாங்குவாரா. இல்லை, பேரக்குழந்தை கொடுத்தா அதை வச்சி 5 கோடி வாங்குவாரா. ஐய்யோ, இங்கேயே மண்டகாயுது இதுல இவங்க வேற.ஒரே குழப்பமப்பா.
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
13-மே-202206:16:59 IST Report Abuse
Sanny 5 கோடி கொடுப்பார்களா. அதுதான் செக் வைத்திருக்கிறார்கள் பெற்றோர்கள். இன்னும் ஒன்று, 5 கோடி வைத்து பிள்ளைகள் வாங்கலாம்,, பெற்றால் தான் பிள்ளையா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X