வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டாடா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய சிஇஓ.,வாக கேம்ப்பெல் வில்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபரில், ஏர் இந்தியாவை வாங்குவதற்கான ஏலத்தில், டாடா குழுமம் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, ஏர் இந்தியாவை, டாடா சன்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியது. இந்நிலையில் ஏர் இந்தியா தனது நிறுவனத்திற்கு புதிய தலைமை செயல் அதிகாரியாகவும் (சிஇஓ), நிர்வாக இயக்குநராகவும் நியூசிலாந்தை சேர்ந்த கேம்ப்பெல் வில்சனை (வயது 51) நியமித்துள்ளது.

விமானப் போக்குவரத்துத் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த கேம்ப்பெல் வில்சன் இதற்கு முன் சிங்கப்பூரில் உள்ள ஸ்கூட் விமான சேவை நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றியவர். மேலும் இவர் குறைந்த செலவில் இயக்கப்படும் விமானங்களை நிர்வாகம் செய்வதில் தேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE