மறைந்த டேனிஷ் சித்திக்கிற்க இரண்டாவது முறையாக புலிட்சர் விருது..

Updated : மே 12, 2022 | Added : மே 12, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் உலகின் மிக உயர்ந்த விருதான புலிட்சர் விருது மறைந்த டேனிஷ் சித்திக்கிற்கு வுழங்கப்பட்டுள்ளது.இது இரண்டாவது முறையாக இவருக்கு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.அமெரிக்கப் பத்திரிகையாளரும், செய்திப் பத்திரிகை வெளியீட்டாளருமாகிய ஜோசேப் புலிட்சர் 1911 ஆம் ஆண்டு இறக்கும்போது ஒரு பெரிய தொகையை வைப்புத்தொகையாக வழங்கிlatest tamil news


பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் உலகின் மிக உயர்ந்த விருதான புலிட்சர் விருது மறைந்த டேனிஷ் சித்திக்கிற்கு வுழங்கப்பட்டுள்ளது.இது இரண்டாவது முறையாக இவருக்கு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கப் பத்திரிகையாளரும், செய்திப் பத்திரிகை வெளியீட்டாளருமாகிய ஜோசேப் புலிட்சர் 1911 ஆம் ஆண்டு இறக்கும்போது ஒரு பெரிய தொகையை வைப்புத்தொகையாக வழங்கி அதிலிருந்து வரும் வருமானத்தில் உலகின் சிறந்த பத்திரிகையாளர்களுக்கு விருது கொடுக்க சொல்லியிருந்தார்.அது முதல் அவரது பெயராலேயே புலிட்சர் விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.


latest tamil news


இந்திய மதிப்பில் சுமார் எட்டு லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் சான்றிதழைக் கொண்ட இந்த விருது உலகில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் உயர்விருதாக கருதப்படுகிறது.இதில் புகைப்பட பிரிவில் இந்தியாவைச் சார்ந்த அட்னன் அபிதி, காஷ்மீர் பெண் புகைப்படக்காரரான சன்னா இர்ஷாத் மாட்டூ, அமித் தேவ், ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட டேனிஷ் சித்திக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.இந்த நான்கு பேரில் ஒருவரான டேனிஷ் சித்திக்.இந்தியாவிற்கான ராய்டர் செய்தி நிறுவனத்திற்காக பணியாற்றி வந்தார் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆப்கானிஸ்தானில் பத்திரிகைப்பணியாக சென்றிருந்த போது அங்குள்ள பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
38 வயதில் இறந்து போன அவரது அகால மரணம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.நாட்டை உலுக்கிய பல முக்கியமான நிகழ்வுகளுக்கு அவர் எடுத்த புகைப்படங்கள் சாட்சியாக இருக்கின்றன.ரோஹிங்கியா அகதிகள் சந்தித்த கொடூரங்கள், தலைநகர் டெல்லியில் நடந்த கலவரம், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களின் இடர்கள், கரோனா இரண்டாம் அலை போன்ற அவரது ஒளிப்படங்கள் உலகின் கவனத்தை ஈர்த்தவையாகும்.இதில் ரோஹிங்கியா அகதிகள் தொடர்பில் அவர் எடுத்த புகைப்படங்கள்தான் அவருக்கு புலிட்சர் விருதைப் பெற்றுத்தந்துள்ளது.
கலைஞன் மறைந்தாலும் அவனது கலை மறையாது நிற்கும் நிலைக்கும் என்பதற்கு டேனிஷ் சித்திக் ஒரு நல்ல உதாரணம்.
-எல்.முருகராஜ்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
13-மே-202212:39:19 IST Report Abuse
Lion Drsekar பத்திரிக்கையாளர்கள் என்றாலே நாட்டின் வளர்ச்சிக்கும், மனித மேம்பாட்டுக்கும், கலாச்சார மேம்மபட்டுக்கும், தகுதியும் திறமையும் உள்ளவர்களை ஊக்குவிக்கும் செயல்பாட்டில் மிக மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையாகாது . அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக ஒரு நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னால் மக்களுக்கு செய்தி அதிலும் நாட்டுப்பற்றுள்ள செய்திகளை , தேசபக்தி செய்திகள், மக்களின் ஒற்றுமைக்கு பாடுபட்டது பத்திரிக்கைகள்தான் . அப்போதெல்லாம் விளம்பரம் , எதுவும் கிடையாது . எல்லோர் நோக்குமே தியாகம், தியாகம் தியாகம் மட்டுமே . ஆகவே அந்நியர்கள் பத்திரிக்கைகளை தடை செய்து , நடத்தியவர்களை தண்டித்திருக்கிறார்கள் என்றால் பத்திரிக்கையின் பங்கு எப்படி இருந்திருக்கவேண்டும், அதே போன்று ஊடகங்கள் , அன்றைய சினிமா இல்லை என்றால் நமக்கு சுதந்திரபோராட்ட வீரர்கள் கதைகள் திருந்திருக்க வாய்ப்பே இல்லை, இப்படிப்பட்ட ஒரு புனிதமான தொழிலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு சிறுவயதிலேயே தான் ஈட்டிய பணத்தில் இருந்து வரும் வட்டியை தன்னைப்போல் தியாகம் செய்பவர்களுக்கு ஊக்குவிக்க பட்டம் கொடுக்க ஆரம்பித்த இந்த புனித நிகழ்வை யாருமே இதுவரை அறிந்தது இல்லை, இந்த புனித நிகழ்வை உலகத்துக்கு எடுத்துக்காட்டிய தினமலருக்கு எங்கள் இருகரம் கூப்பி வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன் . இது செய்தி அல்ல சரித்திர புகழ்வாய்ந்த ஒரு நினைவஞ்சலி . வாழ்க வளமுடன், வந்தே மாதரம்
Rate this:
Cancel
தத்வமசி - சென்னை ,இந்தியா
13-மே-202210:01:27 IST Report Abuse
தத்வமசி தங்களின் வியாபாரத்தை பெருக்க உதவுபவர்களுக்கு பதவிகளும் விருதுகளும் கொடுப்பது தான் மேற்கத்தைய தேசத்தின் ஸ்டைல். அது உலக அழகி பட்டம் முதல் நோபல் பரிசு வரை சென்று விட்டது.
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
13-மே-202209:59:05 IST Report Abuse
Sridhar பாவம் இந்த ஆளை தலிபான்கள் கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள். எதோ போரில் இரண்டு படைகளுக்கு நடுவே குண்டடி பட்டு இந்த ஆள் சாகவில்லை.அவனை அருகில் அழைத்து அடித்து உதைத்து, மூஞ்சியிலேயே இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டதுமட்டும் இல்லாமல், ஒரு ஜீப்பை வேறு அவன் மேல் ஏற்றி சித்தரவதை செய்து சாகடித்திருக்கிறார்கள்.
Rate this:
karupanasamy - chennai,இந்தியா
13-மே-202217:20:13 IST Report Abuse
karupanasamyஇசுலாம் அமேதி மார்கமாக்கும்னு அமீர் உட்பட அவிங்க எல்லோரும் சொலிகிடறாங்க அது ரங்கா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X