இலங்கை பிரதமராக பதவியேற்றார் ரணில் விக்கிரமசிங்கே

Updated : மே 13, 2022 | Added : மே 12, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
கொழும்பு: இலங்கை பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே இன்று (மே 12) பதவியேற்றார்.இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி எம்.பி.,க்கள் வீடுகளை சூறையாடிய மக்கள் தீவைத்தனர். இதனால், மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். இந்நிலையில், இலங்கையில் 2
Ranil Wickremesinghe e sworn-in as Sri Lanka's new Prime Minister;

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கொழும்பு: இலங்கை பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே இன்று (மே 12) பதவியேற்றார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி எம்.பி.,க்கள் வீடுகளை சூறையாடிய மக்கள் தீவைத்தனர். இதனால், மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். இந்நிலையில், இலங்கையில் 2 நாளில் புதிய அரசு அமையாவிட்டால் பொருளாதாரம் சீர்குலைந்துவிடும்.


latest tamil news
அரசியல் கட்சிகள் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யாவிட்டால், பதவியில் இருந்து விலகுவேன் என அந்நாட்டு மத்திய வங்கி கவர்னர் கூறியிருந்தார். நேற்று மாலை, நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் கோத்தபய ராஜபக்சே, புதிய பிரதமர் தலைமையிலான அமைச்சரவை இந்த வாரத்திற்குள் அமைக்கப்படும் எனக்கூறியிருந்தார்.

இந்நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேவை புதிய பிரதமராக நியமிக்க அதிபர் கோத்தபய முடிவு செய்து , ரணில் விக்கிரமசிங்கேவுடன் கோத்தபய தொலைபேசியில் சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். அப்போது, குறுகிய காலத்திற்காவது பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என்ற கோத்தபயவின் கோரிக்கையை ரணில் ஏற்று கொண்டார்.


இதையடுத்து இன்று இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். வரும் 16-ம் தேதி இலங்கை பாராளுமன்ற கூட்டம் நடக்க உள்ள நிலையில் ரணில் தலைமையிலான புதிய அமைச்சரவையில் நாளை (மே.13) 15 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்
13-மே-202201:12:54 IST Report Abuse
John Shiva   U.K ரணில் ஒரு நரிக்கள்ளன்.ராஜபக்க்காவின் குடும்ப பாதுகாவலன்.இவரை பிரதமராக ஆக்கியது ராஜபக்சாவின் கொள்ளை இட்ட பணத்தைக் காப்பாற்ற. இதை இலங்கை மக்கள் புரிந்து கொண்டால் நல்லது.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
12-மே-202222:45:25 IST Report Abuse
சீனி இலங்கையில் பிரதமர் பதவி என்பது டம்மி பதவியாகும். அதிபருக்கே முழு அதிகாரம் உள்ளது, கோட்டா பதவி விலகாம ஊரை ஏமாத்துறான்... ரணில் கோட்டா ராஜினாமா பண்ணாதான் அரசில் சேருவேண்ணு அடம்பிடிசிருந்தா அடுத்து ஜெயிசிருக்கலாம்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
12-மே-202221:32:58 IST Report Abuse
Ramesh Sargam ரணில் வந்தாலும் சரி, அணில் வந்தாலும் சரி, இப்பொழுதுள்ள இந்த பொருளாதார பிரச்சினையை அவ்வளவு சீக்கிரத்தில் தீர்த்துவிட முடியாது. இன்று உள்ள இந்த நிலைமைக்கு காரணம் அந்த 'ராஜபக்ஷே' குடும்பம்தான். அவர்கள் கொள்ளையடித்த பணம் மட்டும் சொத்துக்கள் எல்லாம் மீட்கப்படவேண்டும். சீனாவிடமான தொடர்பு முற்றிலும் கைவிடப்படவேண்டும். நேர்மையான ஒருவர் அதிபர் மற்றும் பிரதமர் பதவிக்கு வரவேண்டும். அப்பவும், இந்த பிரச்சினை உடனே தீராது. கால தாமதம் ஆகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X