வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொச்சி : கேரளாவில், திரிக்காகரா சட்டசபை இடைத்தேர்தலில், காங்., வேட்பாளருக்கு எதிராக காங்., மேலிட எச்சரிக்கையை மீறி அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வி.தாமஸ் இன்று பிரசாரம் செய்தார்.
கேரளாவில் திரிக்காகரா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. உமாவை என்பவரை வேட்பாளராக காங்., நிறுத்திஉள்ளது. இடது ஜனநாயக முன்னணி சார்பில் டாக்டர் ஜோ ஜோசப் நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் திரிக்காகரா இடைத்தேர்தலில், இடது ஜனநாயக முன்னணி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வேன்.அதற்காக நான் காங்கிரசை விட்டு வெளியேறியதாக கருத வேண்டாம் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
![]()
|
இந்நிலையில் இன்று கொச்சியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கே.வி. தாமஸ் கலந்து கொண்டு பேசியது, வலிமையான ஆட்சியாளர்களால் மட்டுமே மாநிலத்தை நெருக்கடியில் இருந்து வழிநடத்த முடியும். அதை செய்ய முதல்வர் பினராயி விஜயனால் மட்டுமே முடியும். இந்த அரசு வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டுவந்தால் அதை எதிர்ப்போம் என கூறும் காங்கிரசின் அணுகுமுறை சரியில்லை: நான் ஒரு காங்கிரஸ்காரனாக இங்கு வந்தேன். காங்கிரஸ்காரனாக இங்கே நிற்கிறேன். இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர் ஜோசப்பிற்கு வாக்களிக்க வேண்டும் என காங்கிரஸ்காரன் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கே.வி.தாமஸ் பேசினார்.
முன்னதாக ''காங்., வேட்பாளருக்கு எதிராக கே.வி.தாமஸ் பிரசாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, காங்., தேசிய பொதுச் செயலர் வேணுகோபால் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE