வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: காங். கட்சியின் சிந்தனையாளர்கள் கூட்டம் நாளை (மே.13) ராஜஸ்தானில் துவங்க உள்ளதையடுத்து காங். எம்.பி., ராகுல் இன்று (மே.12) ராஜஸ்தானுக்கு ரயில் பயணித்தார்.
காங்., செயற்குழு கூட்டம் டில்லியில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தது. அதில் கட்சியை வளர்க்கும் வகையில், மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்த வேண்டுமெனில், விமானப் பயணத்தை தவிர்த்து, ராகுல் ரயிலில் பயணிக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. இதையடுத்து கட்சியை வலுப்படுத்துவதற்கான ஆலோசனைகள் வழங்க, கட்சியின் சிந்தனையாளர்கள் கூட்டம், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், நாளை (மே13) தேதியில் இருந்து மூன்று நாள் நடத்த திட்டமிடப்பட்டு்ள்ளது.
![]()
|
இதில் மக்களுடன் கலந்துரையாடும் வகையிலும், விமான பயணத்தை தவிர்த்து, ரயிலில் பயணம் மேற்கொள்ள ராகுல் முடிவு செய்துள்ளார். இதன்படி இன்று (மே.12) காங். எம்.பி., ராகுல், டில்லியிலிருந்து ராஜஸ்தான் செல்லும் சேட்டாக் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ராஜஸ்தானின் உதய்பூர் நகருக்கு பயணித்தார். இதற்காக, உதய்பூர் செல்லும் ரயிலில், இரண்டு பெட்டிகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக சாரா ரோஹில்லா ரயில் நிலையம் வந்த ராகுலுக்கு கட்சியினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதே பாணியில் அடுத்த மாதம் தமிழகம் வரும் ராகுல், சென்னையில் இருந்து திருச்சிக்கும், அங்கிருந்து கோவைக்கும் ரயிலில் பயணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.