இலவசம்... இலங்கை நாசம்! -பொருளாதார பிரச்னையின் பின்னணி

Updated : மே 13, 2022 | Added : மே 13, 2022 | கருத்துகள் (103) | |
Advertisement
கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கி நிற்கிறது இலங்கை. விண்ணை முட்டும் விலைவாசி, உணவு தட்டுப்பாடு, மின் தடையால் தவிக்கும் மக்கள், வீதியில் இறங்கி போராடுகின்றனர். வன்முறை வெடித்ததால், வேறுவழியின்றி பிரதமர் ராஜபக்சே ராஜினாமா செய்தார். தற்போதைய பிரச்னைக்கு காரணமே அளவுக்கு அதிகமாக வழங்கப்பட்ட இலவசம், மானியம் தான்.இந்தியாவின் கீழ் கண்ணீர் துளி போல இருக்கும் சின்ன தீவான
இலவசம், இலங்கை, நாசம், பொருளாதார பிரச்னை, பின்னணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கி நிற்கிறது இலங்கை. விண்ணை முட்டும் விலைவாசி, உணவு தட்டுப்பாடு, மின் தடையால் தவிக்கும் மக்கள், வீதியில் இறங்கி போராடுகின்றனர். வன்முறை வெடித்ததால், வேறுவழியின்றி பிரதமர் ராஜபக்சே ராஜினாமா செய்தார். தற்போதைய பிரச்னைக்கு காரணமே அளவுக்கு அதிகமாக வழங்கப்பட்ட இலவசம், மானியம் தான்.

இந்தியாவின் கீழ் கண்ணீர் துளி போல இருக்கும் சின்ன தீவான இலங்கை உற்பத்தி செய்பவர்களின் தேசம் அல்ல. நுகர்வோரின் தேசமாக உள்ளது. பெரும்பாலான பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்றனர். அனைத்து அடிப்படைத் தேவைகளும் இலவசம் அல்லது மானியம் மூலம் கிடைத்ததால் மக்கள் பட்டினியின்றி வாழ்ந்தனர். இங்குள்ள அரசியல்வாதிகள், மக்களை மானியங்களுக்கு அடிமையாக்கினர்.

எரிபொருள் மானியம், உர மானியம், இலவச வீடுகள், மானியத்துடன் குடிநீர், மின்சாரம், இலவச கல்வி, இலவச மருத்துவம் வழங்கினர். இவற்றை மக்கள் மீது உள்ள பாசத்தால் தரவில்லை. ஓட்டுகளை அறுவடை செய்யும் உள்நோக்கத்துடன் வாரி வழங்கினர். உள்நாட்டில் உற்பத்தி செய்யாத தலைமுறையை வளர்த்தனர். ஆனால் நுகர்வு அதிகரித்தது. இதன் காரணமாக கடன் சுமை அதிகரித்தது.

நாட்டின் மொத்த கடனில் 10 சதவீதத்தை அரசியல்வாதிகள் கொள்ளை அடித்திருப்பர். மீதி 90 சதவீதத்தை மானிய விலை பொருட்கள், சேவையை 30 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவித்த மக்கள் பெற்றுள்ளனர். கடந்த 25 ஆண்டுகளாக எரிபொருள், உரத்திற்கு மானியம் வழங்காமல் இருந்திருந்தால், வெளிநாட்டுக் கடன் பாதியாக குறைந்திருக்கும்.


latest tamil news
இலங்கைக்கு இனி எந்தவொரு நட்பு நாடும் கடன் கொடுக்க தயங்கும். உரம், எரிபொருள் என இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இலங்கை மானியம் வழங்க கூடாது என சர்வதேச நாணய நிதியம் கண்டிப்புடன் கூற வேண்டும். உற்பத்தி இல்லாமல் இலவசங்களை வழங்கும் மோசமான கலாசாரத்தை ஒழிப்பது அவசியம்.கல்வி, சுகாதாரம் தவிர வேறு எதற்கும் மானியம் அளிக்க கூடாது. அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 65ல் இருந்து 60 ஆக குறைக்க வேண்டும். ஒவ்வொருவரும் அவர்கள் வாங்கும் பொருளுக்கு சரியான விலை கொடுக்கட்டும். நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களை மூட வேண்டும் அல்லது தனியார்மயமாக்க வேண்டும்.

தற்போதைய பொருளாதார சரிவு, இலங்கைக்கு கிடைத்த வரப்பிரசாதம். விழித்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. இலவசம் எனும் ஒழுங்கீனத்திலிருந்து விடுபட பணவீக்கம் உதவும். உயிர்வாழ உற்பத்தி செய்யும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுவர். உள்நாட்டில் உற்பத்தித்திறனை அதிகரித்து பணவீக்க பிரச்னையை தீர்க்க வேண்டும். உற்பத்தியை மையமாக கொண்ட பொருளாதார கொள்கையை வகுக்க வேண்டும்.இதையெல்லாம் செய்தால் தான் இலங்கை தப்பி பிழைக்கும்.இல்லையேல் கண்ணீர் துளி தேசத்தை கண்ணீரை துடைக்கவே முடியாது.

Advertisement
வாசகர் கருத்து (103)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dharmakulasingham - Jaffna,இலங்கை
13-மே-202218:55:14 IST Report Abuse
Dharmakulasingham என் உறவுகளே, எனது நாட்டின் நிலைமை பற்றிய கருத்துக்களுக்கு நன்றி.நான் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தேன்.இலவசக்கல்வி மற்றும் வேறு இலவசங்கள் என்னைப்போன்ற ஏழை குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு பெரிய வரப்பிரகாசம் என்பது உண்மையானது.நான் இலங்கை வெளிநாட்டு சேவையில் (ராஜதந்திரி) இணைந்துகொண்டேன்.இலவசங்கள் பற்றி நீங்கள் கூறுவதில் உண்மை உண்டு.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
13-மே-202218:33:32 IST Report Abuse
bal தமிழ் நாடும் இப்படித்தான் ஆகும் இன்னும் பாத்து வருடங்களில்..என்ன டாஸ்மாக் இலவச பிரியாணி, குவாட்டர் துட்டு வாங்கி வந்த ஒரு அரசு அது எந்த முற்போக்கு திட்டமும் கிடையாது..வெறும் ஹிந்தி எதிர்ப்பு..இவர்கள் தொலைக்காட்சிகளில் வந்து எப்படி கத்துகிறார்கள் என்று பாருங்கள்..இங்குள்ள செய்தி தோலை கட்சிகளும் சட்ட சபையிலும் ஒரே துதி பாடல்..வேறு யாரும் கேள்வி கேட்க கூடாது..
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
13-மே-202217:26:32 IST Report Abuse
J.V. Iyer இதைப்பார்த்து தமிழகம் திருந்துமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X