பைலட் மயங்கி சரிந்ததால் விமானத்தை இயக்கிய பயணி

Added : மே 13, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
வெஸ்ட் பாம் பீச் :விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது உடல் நலக்குறைவால் பைலட் மயங்கியதால் எந்த அனுபவமும் இல்லாத பயணி விமானத்தை இயக்கி பத்திரமாக தரையிறக்கினார்.வட அமெரிக்காவில் அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான பஹாமாவில் இருந்து இரண்டு பயணியருடன் சிறிய ரக விமானம் அமெரிக்காவின் புளோரிடாவுக்கு சென்றது. நடுவானில் சென்று கொண்டிருந்த போது பைலட்டுக்க
 பைலட், விமானம், பயணி



வெஸ்ட் பாம் பீச் :விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது உடல் நலக்குறைவால் பைலட் மயங்கியதால் எந்த அனுபவமும் இல்லாத பயணி விமானத்தை இயக்கி பத்திரமாக தரையிறக்கினார்.
வட அமெரிக்காவில் அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான பஹாமாவில் இருந்து இரண்டு பயணியருடன் சிறிய ரக விமானம் அமெரிக்காவின் புளோரிடாவுக்கு சென்றது. நடுவானில் சென்று கொண்டிருந்த போது பைலட்டுக்க திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கினார். இதைப் பார்த்த ஒரு பயணி விமானி அறையில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு பேசி விபரத்தை கூறினார்.
கட்டுப்பாட்டு அறையில் இருந்து பேசியவர் அந்தப் பயணிக்கு விமானத்தை இயக்கும் வழிமுறைகளை கூறி அவரை வைத்தே இயக்கினார். பயணியும் எந்தப் பயமும் இன்றி கட்டுப்பாட்டு அறை அதிகாரியின் அறிவுரைப்படி இயக்கி விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.
அந்தப் பயணியையும் கட்டுப்பாட்டு அறை அதிகாரியையும் அனைவரும் பாராட்டினர்.
அந்தப் பயணி புளோரிடாவில் வசிக்கும் தன் கர்ப்பிணி மனைவியை பார்க்க இந்த சிறிய ரக விமானத்தில் பயணித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
canchi ravi - Hyderabad,இந்தியா
15-மே-202212:56:42 IST Report Abuse
canchi ravi சபாஷ் சினிமாவில்தான் இப்படி நடக்க வாய்ப்பு என்றால் நிஜ வாழ்க்கையில் நிரூபித்துவிட்டீர்கள். ஆண்டவன் தங்கள் பக்கம்,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X