மாஜி முதல்வர் மீது பண மோசடி வழக்கு

Updated : மே 13, 2022 | Added : மே 13, 2022 | |
Advertisement
அமராவதி-ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் சந்திரபாபு நாயுடு, 2014 முதல் 2019 வரை முதல்வராக பதவி வகித்தார்.அப்போது, மாநில தலைநகர் ஹைதராபாதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

அமராவதி-ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



ஆந்திராவில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் சந்திரபாபு நாயுடு, 2014 முதல் 2019 வரை முதல்வராக பதவி வகித்தார்.அப்போது, மாநில தலைநகர் ஹைதராபாதில் இருந்து அமராவதிக்கு மாற்றப்பட்டது.


latest tamil news



அதன், 'மாஸ்டர் பிளான்' மற்றும் உள்வட்ட சாலை சீரமைப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக, ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சி எம்.எல்.ஏ., ராமகிருஷ்ண ரெட்டி புகார் அளித்தார். இதுபற்றி விசாரித்த சி.ஐ.டி., போலீசார் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் அமைச்சர் பி.நாராயணா மற்றும் சில தொழிலதிபர்கள் மீது, மோசடி, குற்றச்சதி, ஊழல் ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X