வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-தேச விரோத சட்டப்பிரிவை ரத்து செய்யும் விவகாரத்தில், தான் தெரிவித்த 'லட்சுமண கோடு' கருத்துக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரத்துக்கு, மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலடி கொடுத்துள்ளார்.
![]()
|
தேச விரோத சட்டத்தை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், இந்த சட்டத்தின் கீழ் மத்திய - மாநில அரசுகள் புதிதாக வழக்கு பதியவும், ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளில் விசாரணையை தொடரவும், நடவடிக்கை எடுக்கவும் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இது குறித்து மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று முன்தினம் கூறுகையில், 'அரசு தரப்பு வாதத்தையும், பிரதமரின் நோக்கத்தையும் நீதிமன்றத்தில் தெளிவாக எடுத்துரைத்தோம்.
நீதிமன்ற சுதந்திரத்தை மதிக்கிறோம். 'அதே நேரத்தில், லட்சுமண கோட்டை யாரும், எக்காரணத்திற்காகவும் தாண்டக்கூடாது' என்றார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான சிதம்பரம் கூறியதாவது:அடிப்படை உரிமைகளை மீறும் வகையிலான எந்த சட்டத்தையும், பார்லிமென்ட் உருவாக்க முடியாது; அப்படியொரு சட்டம், சட்ட புத்தகத்தில் இருக்கவும் முடியாது. தேச விரோத சட்டம், அரசியல் சட்டத்தின் ௧௯ மற்றும் ௨௧ம் பிரிவுகளை மீறியுள்ளது என, சட்ட வல்லுனர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். லட்சுமணன் கோட்டை தன்னிச்சையாக வரைய, மத்திய சட்ட அமைச்சருக்கு அதிகாரம் இல்லை. அரசியல் சட்டத்தின் 13வது பிரிவை, சட்ட அமைச்சர் படிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
![]()
|
இதற்கு பதிலடி கொடுத்து, கிரண் ரிஜிஜு கூறுகையில்,''ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே போன்றோர் நடத்திய போராட்டங்களில் பங்கேற்றோரை, மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு கைது செய்து, சித்ரவதை செய்ததை சிதம்பரம் மறந்துவிட்டார்,'' என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement