சொத்து தகராறில் கத்தியால் வெட்டிய கூலிப்படையினர் உட்பட 5 பேர் கைது

Added : மே 13, 2022
Advertisement
அரியாங்குப்பம்,-சொத்து தகராறில் வீடு புகுந்து ஒருவரை கத்தியால் வெட்டிய கூலிப்படையினர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.முதலியார்பேட்டை அடுத்த வாணரப்பேட்டை தாமரை நகரை சேர்ந்தவர் கமலஹாசன், 40. முத்தி யால்பேட்டை அங்காளம்மன் நகரை சேர்ந்தவர் நாகராஜ், 29.இவருக்கும் இடையே சொத்து பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. இது தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார்

அரியாங்குப்பம்,-சொத்து தகராறில் வீடு புகுந்து ஒருவரை கத்தியால் வெட்டிய கூலிப்படையினர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.முதலியார்பேட்டை அடுத்த வாணரப்பேட்டை தாமரை நகரை சேர்ந்தவர் கமலஹாசன், 40. முத்தி யால்பேட்டை அங்காளம்மன் நகரை சேர்ந்தவர் நாகராஜ், 29.இவருக்கும் இடையே சொத்து பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. இது தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில், கடந்த 9ம் தேதி இரவு நாகராஜ், கூலிப்படையினரை அழைத்துச் சென்று, வீட்டில் இருந்த கமலஹாசனை கத்தியால் வெட்டி விட்டு தப்பிச் சென்றார்.இச்சம்பவம் தொடர்பாக முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, நாகராஜ் உட்பட 5 பேரை தேடி வந்தனர்.நேற்று காலை முத்தியால்பேட்டை அருகே பதுங்கிருந்த சேர்ந்த நாகராஜ், 29; மதிவாணன், 28; கூலிப்படையை சேர்ந்த கார்த்தி, 34; விக்கி என்கிற விக்கிராஜ், 30; சீனுவாசன், 26, ஆகிய 5 பேரை முதலியார்பேட்டை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நான்கு கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X