கஞ்சா விற்ற வாலிபர் கைது

Added : மே 13, 2022 | |
Advertisement
வில்லியனுார்--வில்லியனுார் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.சுல்தான்பேட்டை மெயின் ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக வில்லியனுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரகசியமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது இரண்டு நபர்கள் கஞ்சா விற்பனை செய்வதை கண்காணித்த போலீசார், அவர்களை

வில்லியனுார்--வில்லியனுார் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.சுல்தான்பேட்டை மெயின் ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக வில்லியனுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரகசியமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது இரண்டு நபர்கள் கஞ்சா விற்பனை செய்வதை கண்காணித்த போலீசார், அவர்களை சுற்றி வளைத்தனர்.அதில் ஒருவர் பிடிபட்ட நிலையில் மற்றொருவர் தப்பிச் சென்றார். பிடிபட்ட நபரிடம் இருந்து 650 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.விசாரணையில், வில்லியனுார் கணேஷ் நகரை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் இளையசந்திரன் (29) என தெரியவந்தது.வேலை கிடைக்காததால், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. இளையசந்திரனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X