புதுச்சேரியில் பலத்த மழை

Added : மே 13, 2022 | |
Advertisement
புதுச்சேரி,-புதுச்சேரியில் நேற்றிரவு நகரப்பகுதி மற்றும் கிராமப்பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.வங்க கடலில் உருவான 'அசானி' புயல், ஆந்திரா வில் மசூலிப்பட்டினம் அருகே கரையை கடந்து, நேற்று காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழந்தது.இந்நிலையில், 'தமிழகம், புதுச்சேரியில், இன்று மிதமான மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.இதற்கிடையே, நேற்று இரவு 11:30 மணி முதல்

புதுச்சேரி,-புதுச்சேரியில் நேற்றிரவு நகரப்பகுதி மற்றும் கிராமப்பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.வங்க கடலில் உருவான 'அசானி' புயல், ஆந்திரா வில் மசூலிப்பட்டினம் அருகே கரையை கடந்து, நேற்று காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவிழந்தது.இந்நிலையில், 'தமிழகம், புதுச்சேரியில், இன்று மிதமான மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.இதற்கிடையே, நேற்று இரவு 11:30 மணி முதல் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்யத் துவங்கியது.குறிப்பாக, நகரப் பகுதி, முதலியார்பேட்டை, முத்தியால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நகரப்பகுதியில் இரவு 12.00 மணி முதல் 1.00 வரை தொடர்ந்து கன மழை பெய்தது.அதேபோல, கிராமப்பறங்களில் வில்லியனுார், திருக்கனுார் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இரவு 1.00 மணிக்கு பிறகும் மழை தொடர்ந்து பெய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X