சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்; 4 மாணவர்கள் கைது

Added : மே 13, 2022 | கருத்துகள் (11)
Advertisement
காசிமேடு: சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நான்கு மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.ராயபுரம் காசிமேடு பகுதியில் இரு தினங்களுக்கு முன் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி வீட்டிற்கு அதே பள்ளியில் படிக்கும் நான்கு சிறுவர்கள் சேர்ந்து படிப்பதற்காக வந்துள்ளனர். அப்போது சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லை. இதை அறிந்த சிறுவர்கள் நால்வரும் சிறுமியின் கையை கட்டிப்
சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்; 4 மாணவர்கள் கைது

காசிமேடு: சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நான்கு மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

ராயபுரம் காசிமேடு பகுதியில் இரு தினங்களுக்கு முன் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி வீட்டிற்கு அதே பள்ளியில் படிக்கும் நான்கு சிறுவர்கள் சேர்ந்து படிப்பதற்காக வந்துள்ளனர். அப்போது சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லை. இதை அறிந்த சிறுவர்கள் நால்வரும் சிறுமியின் கையை கட்டிப் போட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து சிறுமி தாயிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் தாய் பள்ளி ஆசிரியரிடம் புகார் தெரிவிக்கவே வீட்டில் நடந்த சம்பவம் என்பதால் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தி உள்ளார். இதையடுத்து ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து 13 வயதுடைய நான்கு சிறுவர்களையும் போலீசார் கைது செய்து நேற்று மதியம் கெல்லிஸ் சீர்த்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
13-மே-202212:13:49 IST Report Abuse
Lion Drsekar 60 ஆண்டுகளுக்குப் பிறகு (கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள்) மீண்டும் பள்ளிகளில் அறிவுபோதனை நல்வழி போதனைகள் வகுப்பு நடத்த உத்தரவு பெற்றிருக்கிறார்கள். பாராட்டுக்கள். அது மதபோதனையாக மாறாமல் இருக்கவேண்டும், வந்தே மாதரம்
Rate this:
Cancel
Srinivasan Indumathi - chennai city,இந்தியா
13-மே-202212:04:04 IST Report Abuse
Srinivasan Indumathi முதலில் பள்ளிகளில் moral class என்று நாங்கள் படிக்கும்பொழுது இருந்தது. கடவுள் பாடல்கள் மற்றும் ஒழுக்கம் இவை பற்றி வகுப்புகள் நடக்கும். சிறுவர்கள் சிறுமிகள் மரியாதையுடன் பக்தியுடன் பாடங்கள் படித்து வந்தார்கள். ஆசிரியர் கண்டித்தால் பெற்றோர் சந்தோஷித்த காலம். இப்பொழுது ஒரு வார்த்தை கூட மாணவர்களிடம் மிரட்ட கூடாது. எப்படி பண்புடன் மாணவர்கள் வளர்வார்கள்? பிஞ்சிலேயே பழுத்து விடுகிறது. நாம் தான் காரணம். ஜெயிலில் போட்டு பிரயோகனம் இல்லை கடுமையான தண்டனை தந்தால் தான் அடுத்த மாணவன் அதே காரியத்தை செய்ய மாட்டான்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
13-மே-202211:59:01 IST Report Abuse
raja சட்டம் ஒழுங்கா சூப்பரா இருக்குன்னு பிரின்சிபால் பெருமைபொங்கல் சொல்லி தனக்கு தானே பெருமை பட்டுக்கொள்வார்.. பாருங்க மக்கா இது தான் திருட்டு திராவிட மாடல்... தமிழனுக்கு இந்த கேடுகெட்ட திருட்டு திராவிட மாடல் வேண்டாமே....ஒழுக்கத்தில் சிறந்த தமிழனாக மட்டுமே இருப்போம்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X