திருவாரூர் தெற்கு ரத வீதி பெயரை மாற்ற அண்ணாமலை எதிர்ப்பு

Updated : மே 13, 2022 | Added : மே 13, 2022 | கருத்துகள் (61) | |
Advertisement
திருவாரூர்: ''தி.மு.க., அரசு மக்களுக்கான அரசு அல்ல. திருவாரூர் தெற்கு ரத வீதி பெயரை மாற்றக் கூடாது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.திருவாரூர் தெற்கு ரத வீதி பெயரை, 'டாக்டர் கலைஞர் சாலை' என மாற்றம் செய்யப்படும் என, நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அவ்வாறு பெயர் மாற்றம் செய்யக்கூடாது என, பா.ஜ., சார்பில், திருவாரூரில் நேற்று மாலை கண்டன
BJP, Annamalai, Tiruvarur,DMK,திருவாரூர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருவாரூர்: ''தி.மு.க., அரசு மக்களுக்கான அரசு அல்ல. திருவாரூர் தெற்கு ரத வீதி பெயரை மாற்றக் கூடாது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.

திருவாரூர் தெற்கு ரத வீதி பெயரை, 'டாக்டர் கலைஞர் சாலை' என மாற்றம் செய்யப்படும் என, நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அவ்வாறு பெயர் மாற்றம் செய்யக்கூடாது என, பா.ஜ., சார்பில், திருவாரூரில் நேற்று மாலை கண்டன ஆர்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

திருவாரூர் என்றால் ஆழித்தேர் தான் ஞாபகத்திற்கு வரும். இந்த தேர், ஆசியாவிலேயே பெரிய தேர். தெற்கு ரத வீதி, மனுநீதி சோழன் ரதத்தில் சென்ற வீதி. தி.மு.க., அரசுக்கு, சாலைகளை பெயர் மாற்றம் செய்யும் வியாதி பிடித்துள்ளது. இதை சாதனையாக நினைக்கிறது.குடும்ப அரசியல் நடத்துபவர்களுக்கு மன வியாதி வரும். குடும்ப அரசியல் நடத்தும் காங்., கட்சி போல், அக்கூட்டணியில் உள்ள தி.மு.க.,வும் குடும்ப அரசியல் நடத்துகிறது.


latest tamil news



மத்திய அரசு, 44 லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்கிறது. மத்திய அரசு திட்டங்களில், பிரதமர் திட்டம் என்று தான் உள்ளது. அதில், மோடி பெயர் வைப்பது இல்லை.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 60 ஆண்டுகளாக, சாலை வசதி இல்லாத மலை கிராமம் ஒன்று உள்ளது. அந்த கிராம சாலைக்கு, அவர்கள் விரும்பும் பெயர் வைத்து சாலையை சரி செய்யட்டும். திருவாரூர் மனுநீதி சோழன் வாழ்ந்த ஊர். தெற்கு ரத வீதிக்கு, மனுநீதி சோழன் பெயர் சூட்ட பா.ஜ., கோரிக்கை விடுக்கிறது. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-மே-202223:42:43 IST Report Abuse
அப்புசாமி சரி.. சரி.. தருமை ஆதீனத்தைச் சுமக்க போகப்போறீங்களா? இல்லியா? அதான் அனுமதி கிடைச்சாச்சே.
Rate this:
Cancel
ranjani - san diego,யூ.எஸ்.ஏ
13-மே-202223:30:39 IST Report Abuse
ranjani Ok, ஒரு நல்ல முடிவுக்கு வருவோம். தமிழ்நாட்டு அனைத்து கள்ளுக்கடைகளுக்கு கலைக்கருணா கள்ளுக்கடை என்றும், அனைத்து சாராயக்கடைகளுக்கு தளசுடாலி சாராயக்கடை என்றும், பார்களுக்கு இளஊத்தை பார் என்றும், பெசன்ட் நகர் போன்ற இடங்களில் உள்ள மின் எரியூட்டும் நிலையங்களுக்கு கிவீரமின் எரியூட்டும் நிலையம் என்றும் பொது கழிப்பிடங்களுக்க தயாளபொது கழிபிடங்கள் .........என்று பெயர் மாற்றம் செய்தால் நல்ல வரவேற்பிருக்கும் என நம்புகிறோம்
Rate this:
Cancel
13-மே-202216:46:20 IST Report Abuse
அப்புசாமி ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X