யார் குற்றவாளி? கெட்ட உணவு விற்கும் உணவகமா... பட்டியலை மறைக்கும் அதிகாரிகளா?

Updated : மே 13, 2022 | Added : மே 13, 2022 | கருத்துகள் (39)
Advertisement
கோவை: 'கெட்டுப்போன உணவு என்று தெரிந்தும், வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் ஓட்டல்காரர்களுக்கும், அவர்களது பெயர்களை மூடி மறைக்கும் அரசு அதிகாரிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இரு தரப்பினரும் குற்றவாளிகளே' என்கின்றனர் பொதுமக்கள்.கேரளாவில் 'ஷவர்மா' சாப்பிட்ட மாணவி பலியானதை தொடர்ந்து, நாடு முழுவதும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை: 'கெட்டுப்போன உணவு என்று தெரிந்தும், வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் ஓட்டல்காரர்களுக்கும், அவர்களது பெயர்களை மூடி மறைக்கும் அரசு அதிகாரிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இரு தரப்பினரும் குற்றவாளிகளே' என்கின்றனர் பொதுமக்கள்.latest tamil news
கேரளாவில் 'ஷவர்மா' சாப்பிட்ட மாணவி பலியானதை தொடர்ந்து, நாடு முழுவதும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையிலும் தொடர்ந்து மூன்று நாட்கள் 'ஷவர்மா' விற்பனை செய்யும் உணவகங்களில், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கெட்டுப்போன கோழி இறைச்சி, கெட்டுப்போன 'ஷவர்மா' ஆகியவை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. சம்பந்தப்பட்ட கடைகளுக்கு நோட்டீஸ் அளித்து, அவர்களுக்கு அபராதம் விதிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர்.கெட்டுப்போன உணவு விற்பனை செய்த கடைகள் எவை என்ற விவரம், வாடிக்கையாளர்கள் எவருக்கும் தெரிவிக்கப்படுவதில்லை. இதனால் தவறு செய்த அதே உணவகத்துக்கு, மீண்டும் வாடிக்கையாளர்கள் செல்லும் நிலை இருக்கிறது. எனவே, கெட்டுப்போன உணவு விற்பனை செய்த உணவகங்களின் பெயரை, பகிரங்கமாக வெளியிட வேண்டும்.


latest tamil news
இது குறித்து, கோவை கலெக்டரிடம் மனு அளித்த மக்கள் நீதி மய்யம் மாநகர செயலாளர் தாஜூதீன் கூறுகையில், ''கெட்டுப்போன உணவு என்று தெரிந்தும் விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட உணவகத்தின் பெயரை பகிரங்கமாக அதிகாரிகள் அறிவிக்க வேண்டும். அதை அறிந்து, நல்ல உணவகத்தை தேடி தானாகவே மக்கள் சென்று விடுவர். ''மாறாக, பட்டியலே வெளியிடாமல் மூடி மறைத்தால், குற்றம் செய்யும் உணவக உரிமையாளருக்கும், அதிகாரிகளுக்கும் என்ன வித்தியாசம்,'' என்றார்.


பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்!கோவை கலெக்டரிடம் மக்கள் நீதி மய்யம் மாநகர செயலாளர் தாஜூதீன் அளித்த மனு விவரம்:
பல உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சி உபயோகித்ததுதான் ஷவர்மா தயாரிக்கப்படுகிறது. இவற்றை அதிகம் உட்கொள்வது குழந்தைகளே. வாடிக்கையாளர்கள் உயிர் மீது அக்கறையின்றி, வியாபார நோக்கத்துடன், தங்கள் சுய லாபத்துக்காக கெட்டுப்போன இறைச்சி பயன்படுத்திய உணவகங்களின் பெயர்களை, பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
அப்போதுதான் பொதுமக்கள் விழிப்புணர்வு அடைந்து, நல்ல தரமான உணவகங்களை நாடிச் செல்வர். மக்கள் நலன் கருதி, உணவு சம்பந்தப்பட்ட ஆய்வை அதிகாரிகள் அடிக்கடி மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் கோரியுள்ளார்.


அந்த பயம் இருக்கணும்!'நாம் என்ன தவறு செய்தாலும், அபராதம் மட்டும் தான், பெயர் வெளியே வராது' என்ற நம்பிக்கை காரணமாகவே, ஓட்டல் உரிமையாளர்கள், வியாபாரிகள் தவறு செய்கின்றனர். கெட்டுப்போன உணவு, இறைச்சி, குழம்பு போன்றவற்றை சிறிதும் வீணாக்காமல், சூடாக்கி, மசாலா சேர்த்து அப்படியே வாடிக்கையாளர்களுக்கு பரிமாறி பணம் சம்பாதிக்கின்றனர். இதற்கு காரணம், வியாபாரிகளுக்கு அஞ்சும் அதிகாரிகளே.

'பொதுமக்கள் மத்தியில் நற்பெயர் பெற வேண்டும். அவப்பெயர் சம்பாதிக்கக்கூடாது' என்கிற தார்மீக அச்சம், ஒவ்வொரு கடை உரிமையாளருக்கும் இருக்க வேண்டும். அந்த அச்சத்தை ஏற்படுத்த வேண்டியது அரசு அதிகாரிகளின் பொறுப்பு. அதற்கு பதிலாக, 'நீங்கள் என்ன தவறு செய்தாலும், அபராதம் மட்டும்தான். விஷயம் வெளியே தெரியாது' என்கிற வகையில், அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் இருக்கின்றன. இதற்கு முடிவு கட்ட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Somiah M - chennai,இந்தியா
13-மே-202218:15:54 IST Report Abuse
Somiah M கெட்டுப்போன இறைச்சிகளை பயன்படுத்தும் கடை சொந்தக்காரர்கள் பெயர்களை வெளியிடாத அரசு அதிகாரிகளும் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் குற்றவாளிகளே .இவர்கள் மக்களுக்கு நன்மை செய்ப்பவர்களாக இருந்தால் குற்றம் செய்தவர்களின் கடைகளையும் அவற்றின் சொந்தக்காரர்களின்பெயர்களையும் வெளியிட த் தயங்குவது ஏன் ? மக்களின் உயிர்களோடு விளையாடும் இவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படவேண்டும் .செய்வார்களா ?
Rate this:
Cancel
mayan balraj - MADURAI,இந்தியா
13-மே-202217:56:06 IST Report Abuse
mayan balraj நாம் என்ன தவறு செய்தாலும், அபராதம் மட்டும் தான், பெயர் வெளியே வராது' என்ற நம்பிக்கை காரணமாகவே, ஓட்டல் உரிமையாளர்கள், வியாபாரிகள் தவறு செய்கின்றனர்.இது உன்மைதான்.காரணம் நமது அதிகாரிகள். இவர்களுக்கு மனிதன் முக்கியம் இல்லை.ஓட்டல் உரிமையாளர்கள், வியாபாரிகள் தரும் பணம்தான் இலக்கு.நமது நாட்டில் உள்ள அணைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் பணம்தான் இலக்கு.பணம் கொடுத்தால் போதும் நாட்டையே விற்றுவிடுவார்கள். அரசியல் வாதிகள் ஐந்து வருடங்கள் தான் நாட்டை கொள்ளை அடிக்கிறார்கள் ஆனால் அரசாங்க ஊழியர்கள் அய்ம்பத்து ஐந்து ஆண்டுகள் நாட்டை கொள்ளை அடிக்கிறார்கள். வாழ்க ஜனநாயகம்.
Rate this:
Cancel
R S BALA - CHENNAI,இந்தியா
13-மே-202217:49:03 IST Report Abuse
R S BALA எதுக்குய்யா கண்ட கண்ட கருமாந்திரத்தையெல்லாம் வாங்கி திங்கணும் அவஸ்தை படணும் வீட்டுலேயே தயார் செய்து சாப்பிட்டு உயிரை காத்துகொள்ளவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X