ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் விரைவில் மாற்றம்..?

Updated : மே 13, 2022 | Added : மே 13, 2022 | கருத்துகள் (11)
Advertisement
சட்டசபை கூட்டத் தொடர் முடிந்துள்ள நிலையில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.ஏழாம் பொருத்தம்தமிழக அமைச்சர்கள் சிலருக்கும், அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள துறை செயலர்களுக்கும் இடையே ஏழாம் பொருத்தமாக உள்ளது. மூத்த அமைச்சர்கள் பலர், தங்கள் துறை செயலர்களை மாற்றும்படி, முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளனர். துறை செயலர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சட்டசபை கூட்டத் தொடர் முடிந்துள்ள நிலையில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.



latest tamil news




ஏழாம் பொருத்தம்

தமிழக அமைச்சர்கள் சிலருக்கும், அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள துறை செயலர்களுக்கும் இடையே ஏழாம் பொருத்தமாக உள்ளது. மூத்த அமைச்சர்கள் பலர், தங்கள் துறை செயலர்களை மாற்றும்படி, முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளனர். துறை செயலர்கள் தங்கள் விருப்பப்படி செயல்படுவதால், துறையில் மாற்றங்களை செய்வதில் சிரமம் உள்ளதாக, அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல, சில ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், 'எங்களால் அமைச்சர் கூறுவதுபோல செயல்பட முடியாது; வேண்டுமானால் எங்களை வேறு பதவிக்கு மாற்றுங்கள்' என தெரிவித்துள்ளனர். அமைச்சர் - அதிகாரி மோதல் தொடர்ந்தால், திட்டப் பணிகளை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், அதிகாரிகள் சிலரை மாற்ற முடிவு செய்யப்பட்டது.

ஆனால், சட்டசபை கூட்டத் தொடர் நடந்ததால், அதிகாரிகள் மாற்றம் ஒத்தி வைக்கப்பட்டது.அதேபோல, சட்டசபை கூட்டத் தொடர் முடிந்ததும், அமைச்சரவையில் மாற்றம் செய்ய, முதல்வர் திட்டமிட்டுள்ளார்.உதயநிதி அமைச்சராவார்; சரியாக செயல்படாத அமைச்சர்கள் மாற்றப்படுவர் என, தகவல் வெளியானது.அதிகாரிகள் மந்தம்இந்நிலையில், அமைச்சரவை மாற்றத்திற்கு முன், அமைச்சர்கள் வேண்டு கோளை ஏற்று, அதிகாரிகள் சிலரை மாற்ற, முதல்வர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.


latest tamil news



நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கூட்டுறவுத்துறை, வீட்டு வசதித்துறை உட்பட பல துறைகளில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அமைச்சர்கள் மற்றும் தி.மு.க., மாவட்ட செயலர்கள் பலர், தங்கள் மாவட்ட எஸ்.பி.,க்களை மாற்றும்படி கூறியுள்ளனர்.

சில உயர் பதவிகளில் உள்ள, ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வேகமாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து உள்ளது.எனவே, பெரிய அளவில் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம் தொடர்பான அறிவிப்பு, விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக, கோட்டை வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - Mumbai,இந்தியா
13-மே-202218:32:05 IST Report Abuse
Tamilan ......
Rate this:
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-மே-202214:57:51 IST Report Abuse
Sriram V So that they will keep getting commission from all possible source
Rate this:
Cancel
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
13-மே-202214:33:59 IST Report Abuse
தியாகு சிரிப்பு போலீஸ் சைலேந்திர பாபு. இது ஒரு புதுக்கவிதை. ஹி...ஹி...ஹி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X